MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
நூரே முஹம்மதியா
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
எழுதியவர்: ஷாஹுல் ஹமீத் (காதிரி)
யுகப்பொருள்கள் யாவுமே முஹம்மத் என்ற பேரொளியின் பிம்பங்களேயன்றி வேறில்லை. முஹம்மத் என்ற பேரொளியாகிறது மூலப் பொருளான இறைப் பேரொளியின் வெளிப்பாட்டுத் தலமாகும்.
இறைப்பொருள் என்ற ஏக பரம்பொருள் வெளியாகும் தலமாக. சிருஷ்டிகள் இருக்கிறது.
அந்த சிருஷ்டிகளின் மூல சொரூபராக. முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கிறார்கள்.
எனவே அருள் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் மூலமேயன்றி அல்லாஹ்வை அறிவதோ அவனை அடைவதோ முடியாத ஒன்றாகும். அறிவாளிகள் அப்படி முயற்சிக்கவும் மாட்டார்கள்.
மாமரத்தின் மூலம் அதன் கொட்டையாகும். மாமரத்தின் மூலப் பொருளை காண விரும்புகின்றவன் அதன் கிளைகளிலே தொங்கும் மாம்பழத்தினுள்ளே தான் காண வேண்டுமேயல்லாது. அதன் அடியில் தோண்டினால் அடைய முடியாது.
பூமியில் புதைக்கப்பட்ட ஒரு கொட்டையின் பரிணாமம் தான் மரக்கிளைகளின் வழியே மாம்பழங்களாக தெரிகிறதேயல்லாது பூமியில் புதைக்கப்பட்ட கொட்டை வேறு, இவைகள் வேறு என கூறு போடுவது கடலை வேறாகவும் அதன் அலையை வேறாகவும் காணுவது போலத்தானே.
காணும் சொரூபமெல்லாம் கத்தன் மழ்ஹரென்றே
பேணி ஷுஹூது செய்து பெலப்படுவதுதென் நாளோ.
அஷ்ஷெய்கு உமர் வலியுல்லாஹ் கத்தஸல்லாஹூ ஸிர்ஹூல் அஜீஸ் இப்படி பாடியுள்ளார்களே .
வல்ல ரஹ்மான் நல்லடியார்களை நேசிக்கும் நம் அனைவர்களுக்கும் நல்லருள் புறிவானாக. ஆமீன்
திருக்குர்ஆனும் ஒரு நூர். திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் நூரானவர்கள். நூரை நூரால்தான் சுமக்க முடியும். ஹகீகத்தை அறிய இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.