MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சூபிசம் என்றால் என்ன               (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன                (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

எங்கும் நிறைந்த ஒரு பொருள்

​ 

ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நூருன் அலா நூர்



​​எழுதியவர்:  லியாகத் அலி 

அல்லாஹ் நூரானவன் அவனுடைய வேதமான திருக்குர்ஆனும் ஒரு நூர். அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் நூரானவர்கள்.


திருக்குர்ஆனை உலகத்தில் உள்ள ஒரு படைப்பும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நூரானவன் நூரான திருக்குர்ஆனை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எனும் நூரின் பால் இறக்கினான்.


ஒரு நூரினை இன்னொரு நூர் தான் பெற்றுக்கொள்ள முடியும்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்கின்ற நூரானவர்களுக்கே நூரான திருக்குர்ஆனின் அந்தரங்கம் வெளிரங்கமும் தெரியும்.


அதனால்தான் அதன் வெளிப்படையான கருத்துக்களை அதை விளங்கக் கூடியவர்களுக்கும் அதன் அந்தரங்க ஞான விளக்கத்தை அதை தாங்கிக்கொள்ளக் கூடிய ஒரு சிலருக்கு மட்டும் விளக்கினார்கள்.


இந்த அரிய அந்தரங்க விளக்கத்தை தங்கள் ஆன்மாவை பரிசுத்தப்படுத்தி நூராக ஆக்கிக்கொண்ட இறை காதலர்கலான வலிமார்கள் விளங்கிக் கொண்டார்கள்.


ஒரு நூரைப் பற்றி இன்னொரு நூரால் தான் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும், விளக்கவும் முடியும்.


நான் யார்?

​ 

நான் உடல் அல்ல? நான் மனம் அல்ல? நான் சிந்தனையும் அல்ல?  நான் யார்? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.