MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன  (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

பார்வை ஒன்று காட்சி இரண்டு

​​

படைப்பினங்களை பார்பவர்கள் மனிதர்கள். படைப்பினங்களில் படைத்தவனை பார்பவர்கள் புனிதர்கள். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

​​​​​

மெய்யும் பொய்யும்

​ 

மனித உடலுக்கு பெயர் மெய் என்று சொல்வார்கள்!

பொய்யான உடலுக்கு மெய் என்று பெயர் எப்படி வந்தது? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

எங்கும் நிறைந்த ஒரு பொருள்


ஹழ்ரத் ஷெய்க்  முஹம்மத் அப்துல் காதிர் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)


​தொகுப்பு: அமிர் காதிரி 


ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது.

ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான்.

ஒரு மனிதன் கண்ணாடி முன் நின்றதும் அழகான அவன் உருவம் தெரியும். அந்த காட்சியை என்னதான் தன் முகமாக இருந்தாலும் உண்மை என்று நம்ப முடியுமா? சற்று தள்ளி அகன்றதும் மறைந்து விடும்.

அப்போதைக்கு பொய்யாக மறைந்தாலும் அதை பார்க்கும் இவன் மெய்யாக இருக்கிறானே. அதைபோல தான் இந்த உலகமும் இதில் உள்ள காட்சிகளும்.


​​காட்சிகள் பொய்யாக தெரிந்தாலும் காண்பவன் மெய்யாக இருக்கின்றான்.



​​கண்ணாடி தன்னகம் காணுகின்ற என் முகம் கருதிலது உண்மையாமோ?

காணுகின்ற நானுண்மை காணுமது பொய்வெறுங் காட்சியில் மயங்கலாமோ..?