MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
நானே நான் !
எழுதியவர்: அத்வைதி கஜினி முஹம்மத்
புதைந்து புதைபொருளாய் இருந்த நான், என்னை அறிவதற்கு வெளியாய் இருந்த நான் வெளியானேன் துகள்களாய்!
எனது துகள்களின் கோர்வையே பிரபஞ்சம். எனது இயக்கமே காலம். நானே நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்.
ஆ= ஆன்மா. கயம் = உடல்.
நானே அனைத்தும் ஆகி எனக்குள்ளே நான் இருந்ததால் ஏற்படும் அழுத்தத்தின் இயக்க சுழற்ச்சி அலையே மனம்.
நான் மனம் அல்ல. நான் இருக்கும் வரையில் ஸ்தூலத்தில் உயிரின் இயக்கம். நான் வெளியேறினால் சவம்.
நானே இயக்கத்தின் மூலம் ஆதியின் மூலம் "ஆதிமூலம்" தெடக்கநிலை அற்ற அனாதியும் நானே! ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை அனைத்தும் நானே!
என்னை எனக்குள் அறிய "நான்" செத்தால் நான் அறியப்படுவேன்! நானே நான்! எனக்குள் நான்! என்னையே நான் வணங்குகிறேன் !
நானே....நான் !
அவனே ஆரம்பமானவனாகவும், முடிவானவனாகவும், வெளிரங்கமானவனாகவும், உள்ரங்கமானவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 57:3)
அவனே ஹயாத் (உயிர்) உள்ளவனாகவும், நிலைத்திருப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 2: 255)
அவனே கேட்கிறான், அவனே பார்க்கிறான். (அல்குர்ஆன் 40: 56)
நிச்சயமாக அவனே (அனைத்தையும்) செவியுறுகிறவனாகவும், நன்கு பார்க்கிறவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 17: 1)
நான் உடல் அல்ல? நான் மனம் அல்ல? நான் சிந்தனையும் அல்ல? நான் யார்? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.