MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
மனித உடலுக்கு பெயர் மெய் என்று சொல்வார்கள்!
பொய்யான உடலுக்கு மெய் என்று பெயர் எப்படி வந்தது? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
நான் யார் ?
எழுதியவர்: அத்வைதி கஜினி முஹம்மத்
நான் யார் ?
நான் உடல் அல்ல?
நான் மனம் அல்ல?
நான் சிந்தனையும் அல்ல?
நான் எண்ணமும் அல்ல?
நான் உடலின் எந்த உறுப்புகளும் அல்ல?
நான் உடல் உள் இயங்கும், உறுப்புகளும் அல்ல?
நான் அகங்காரமும் அல்ல?
நான் யார் எங்கிருந்து வந்தேன்?
நான் எங்கே செல்ல போகிறேன்?
எனக்கு வயது பத்து. 11 வருடங்களுக்கு முன் "நான்" இல்லை. அதனால் உலகில் எந்த இழப்பும் ஏற்படவில்லை! 11 வருடம் வாழ்ந்தேன் உலகிற்கு எந்த ஒரு நன்மையும் இல்லை! 12 வயதில் இறந்தேன் உலகிற்கு எந்த வகையிலும் நஷ்டம்யில்லை.
எது வந்தது? எது வாழ்ந்தது? எது சென்றது?
இதில் "நான்" எங்கே? நான் யார்?
அனு, விண் ஆகி (இறைதுகள்) விண், ஆன்மாவாகி, உயிராகி, உயிர் சுழற்சியில், மனம்மாகி, மனம், எண்ணமாகி, செயலாகி, செயல்கள், பதிவுகள் ஆகி "நான்" வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
"நான்" யார்? நான் தூய பரிசுத்த "ஆன்மா". நான் தான் அனைத்தையும் அனுபவிக்கிறேன்! நான் "ஆன்மா"!
ஒரே ஆத்மாவிலிருந்து உங்களை அவன் படைத்தான். அல் குர்ஆன் (4:1)
அவன்தான் உங்களை பூமியில் பரவச் செய்தான். அவன் பக்கமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (அல் குர்ஆன் 23: 79)