MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
மனித உடலுக்கு பெயர் மெய் என்று சொல்வார்கள்!
பொய்யான உடலுக்கு மெய் என்று பெயர் எப்படி வந்தது? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
எங்கும் நிறைந்த ஒரு பொருள்
ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஞானம் என்றால் என்ன?
எழுதியவர்: அத்வைதி கஜினி முஹம்மத்
ஞானம் என்பது அறிவில் தெளிவு, அறிவையறிந்த தெளிவு.
விண் ஞானத்தை அறிந்தவர்கள் விஞ்ஞானிகள்.
மெய்ஞானத்தை அறிந்தவர்கள் மெய்ஞானிகள்.
விஞ்ஞானிகள் நுன்நோக்கி மூலம் ஆராய்ந்து ஆராய்ச்சிகளின் முடிவுகளை அறிவிப்பார்கள் .
மெய்ஞானிகள் தியானத்தில் அமர்ந்து பிரபஞ்சம் முழுவதும் விரிந்து அநாதி என்ற பேராற்றலுடன் கலந்து தான் "அவனாகி" அவன் "தானாகி" இயங்கும் இயக்கத்தை உணர்ந்து இறைஞான அத்வைத (தௌஹீத்) ஞானங்களை கூறுவார்கள்.
இறைஞானம் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமையும்.
ஞானம் அடைந்தவர்களிடம் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும். அல்லது ஞானிகள் வழியைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ வழி அறிய வேண்டும்.
(அல்லாஹ்) தான் நாடியவர்களுக்கு ஞானத்தை அவன் கொடுக்கிறான். (இத்தகு) ஞானம் எவர் கொடுக்கப்படுகிறாரோ, அவர் மிகப்பெரும் நன்மைகள் திட்டமாக கொடுக்கப்பட்டவராவார். எனினும் நல்லறிவுடையோர் தவிர (வேறு எவரும் இது பற்றி சிந்தித்து) உபதேசம் பெறுவதில்லை. அல் குர்ஆன் (2:269)
உங்களிலிருந்து ஈமான் கொண்டவர்களுக்கும், ஞானம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல பதவிகளை உயர்த்துகிறான். அல் குர்ஆன் (2:269)