MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பார்வை ஒன்று காட்சி இரண்டு 


​எழுதியது - மெயில் ஒப் இஸ்லாம் ஆசிரியர் குழு



மங்கை என்பது மாயை காட்சி. 

மரம் என்பது உண்மை காட்சி.


மங்கை எனும் மாயை காட்சியை பார்பவர்கள் மனிதர்கள்.

மரம் எனும் உண்மை காட்சியை பார்பவர்கள் புனிதர்கள்.


படைப்பினங்களை பார்பவர்கள் மனிதர்கள்.

படைப்பினங்களில் படைத்தவனை பார்பவர்கள் புனிதர்கள்.


புனிதர்கள் தங்களின் உள்ளமையை (உண்மை காட்சியை) மனிதர்களிடம் வெளிப்படுத்தி கூறும்போது, மனிதர்கள் புனிதர்களை பார்த்து பைத்தியக்காரன், முர்தத் அல்லது காபிர் என்று கூறுவார்கள்.​​


இது தான் புறக்கண்ணுக்கும் அகக் கண்ணுக்கும் உள்ள வித்தியாசம்.


​♣ நான் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை, என் உள்ளே இருக்கிற விஷயத்தை நான் வெளியிடுவேனானால், ஆழமான கிணற்றில் விடப்பட்ட கயிறு துடிப்பதை போன்று நீங்களும் துடிப்பீர்கள்.


​ஸெய்யதுனா அலி (ரலியல்லாஹு அன்ஹு)



​​♣   அல்லாஹ், தன்னையே வணங்குவோனும், வணங்கப்படுவோனும் ஆவான்.


​ஹழ்ரத் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு)



♣ஸூபிய்யாக்கள், ஆரிபீன்கள் ஒரே முடிவை எடுத்திருக்கிறார்கள். அது உள்ளமையில் அல்லாஹ்வை அன்றி வேறு எதனையும் காணவில்லை.


இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு



​♣  எல்லாம் அவனுடைய ஒளிதான், எல்லாம் அவனே, அவன் அல்லாததற்கு எந்த ஒரு எதார்த்தமும் இல்லை.


​இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு



♣ மெய்ஞ்ஞானிகளுக்கு அகக்கண் திறந்ததும் வெளிக்கண் பார்வை இழந்து விடுகிறது. எனவே அவர்களுடைய கண்களுக்கு இறைவனை தவிரவுள்ள வேறு யாதொன்றும் தென்படுவதில்லை.


​ஹழ்ரத் அபூ சுலைமான் தாரானி (ரலியல்லாஹு அன்ஹு)



♣முப்பது ஆண்டுகளாக நான் இறைவனோடு உரையாடி கொண்டிருக்கிறேன். ஆனால், மக்கள் நினைக்கிறார்கள், நான் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்று.


இமாம் ஜுனைதுல் பக்தாத் ரலியல்லாஹு அன்ஹு



♣​ அகப் பார்வையுடைய ஞானக் கண்ணானது ஒளி பெற்றதாக இருந்தால், அது எந்தத் திசையை நோக்கினாலும் அவனது தோற்றத்தையே காணும்.

ஹழ்ரத் காஜா மீர்தர்த் (ரலியல்லாஹு அன்ஹு)



♣  மக்கள் அபூபக்கர் ஷிப்லி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பைத்தியம், பைத்தியம் என்று அழைத்த பொழுது,

​“நான் பைத்தியம் அல்ல. நீங்கள் தான் பைத்தியம். இந்த உண்மை உங்களுக்கு நியாய தீர்ப்பு நாள் அன்றுதான் தெரியவரும் என்று கூறினார்கள்.


ஜுனைதுல் பக்தாத் ரலியல்லாஹு அன்ஹு தம் மாணவர்களையும், ஏனையோரையும் நோக்கி கூறினார்கள். நீங்கள் ஒருவர் மற்றொருவரை பார்க்கும் கண்களுடன் அபூபக்கர் ஷிப்லியை பார்க்காதீர்கள். காரணம் அவர் அல்லாஹ்வின் கண்களை கொண்டு பார்க்கிறார்.



♣ ​எல்லா பொருள்களிலும் நான் இறைவனையே காண்கிறேன். இறைவனுடைய மகத்துவத்தை நான் வெளிப்படுத்துவேனாயின். மக்கள் என்னை பைத்தியக்காரன் என்று கூறுவார்கள்.

ஹழ்ரத் அபுல் ஹஸன் ஹர்கானி  (ரலியல்லாஹு அன்ஹு)



இன்னும் ஏராளமான ஸஹாபாக்கள், வலிமார்கள் கூறிய வார்த்தைகள் ஏராளம் உண்டு. அகக் பார்வையுள்ளவர்கள் அனைத்திலும் இறைவனை பார்ப்பார்கள்.  இந்த உண்மைகளை அறிந்தவர்கள் பாக்கியசாலிகள்.



சூபிசம் சம்பந்தமான நூல்கள்


1. இஹ்யாவு உலூமூத்தீன்

2. பத்ஹுர் ரப்பானி     

3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்    

4. கல்வத்தின் இரகசியங்கள்

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

பையத் என்றால் என்ன? (BAIYATH)


​பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.