MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
வஹ்தத்துல் வுஜூத் பற்றி தவறான விமர்சனத்திற்கு
சிறிய விளக்கம்.
முஹம்மத் ஹனிப் (குலசேகர பட்டினம்)
இன்று வஹ்தத்துல் வுஜூத் பற்றி பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதை பற்றிய ஞானம் முழுமையாக யாராலும் விளங்கி கொள்ள முடியாது. அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் நாடிய வலீமார்களை (நல்லடியார்களை) தவிர.
இதைப்பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் கூறும்பொது:
தான் நாடியவர்களுக்கு ஞானத்தை அவன் கொடுக்கிறான். (இத்தகு) ஞானம் எவர் கொடுக்கப்படுகிறாரோ, அவர் மிகப்பெரும் நன்மைகள் திட்டமாக கொடுக்கப்பட்டவராவார். எனினும் நல்லறிவுடையோர் தவிர (வேறு எவரும் இது பற்றி சிந்தித்து) உபதேசம் பெறுவதில்லை. அல் குர்ஆன் (2:269)
எனக்கும் இதை பற்றிய ஞானம் அறவே இல்லை என்று கூட சொல்லலாம். எனினும் இன்று அல்லாஹ்வை தவிர வேறு இல்லை என்ற மூலத்தை சொன்னவுடன் சிலர் கேட்கிறார்கள் எல்லாமே அல்லாஹ்வா? இன்னும் சிலர் காற்றும் அல்லாஹ்வா? கடலும் அல்லாஹ்வா என்று பிரித்து தனி தனியே கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
இவ்வாறு பிரித்து பிரித்து கேள்வி கேட்டு பிரிவினையை ஏற்படுத்தி கொள்கிறார்கள். இவ்வாறு மட்டும் கேட்காமல் மனதிற்க்கு வேதனை தரும்படி நஜீசும் (கழிவு) அல்லாஹ்வா? என்றும் கேட்டு விட்டார்கள்.
இவ்வாறு கேட்பவர்களுக்கும் இதை விட கேவளமாக கேட்பவர்களுக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் கீழே கொடுக்கும் ஒரு உதாரணம் போதும் என்று எண்ணுகிறேன்.
மனிதர்களின் சிந்தனைக்கு ஏற்றுக் கொள்ள முடியாதவைகளெல்லாம் மனிதர்களுக்கு தானே தவிர அல்லாஹ்வுக்கு இல்லை. அல்லாஹ் மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டவன்.
உதாரணமாக
மனிதர்களுக்கு தான் நஜீஸ் (கழிவு). அல்லாஹ்வுக்கு இல்லை. இந்த நஜீஸை உணவாக உண்ணும் உயிரினத்தையும் அல்லாஹ்தான் படைத்தான். மனிதர்களுக்கு நஜீஸாக தெரிவது இந்த நஜீஸை உணவாக உண்ணும் உயிரினத்துக்கு நஜீஸாக தெரியாது. ஆகவே இந்த நஜீஸ் (கழிவு) என்பது மனிதர்களுக்கு தான் நஜீஸே தவிர அல்லாஹ்வுக்கு இல்லை.
மேலும் அல்லாஹ்வை ஒரு பார்வையாக அதாவது மனிதன் எண்ணுவதை போன்று பார்க்க கூடாது.
மேலும் முஃமீன்கள் அல்லாஹ்வை நல்ல விதமாகவே பார்ப்பார்கள். நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வை சந்தேகத்தோடு தவறான எண்ணத்தோடு பார்ப்பார்கள். மேலும் நாம் நஜீஸோடு அல்லாஹ்வை நினைத்து பார்க்க கூடாது. ஏனென்றால் மனிதர்களின் சரீஅத்தின் படி நஜீஸை அல்லாஹ் ஹராமாக்கி இருக்கிறான். மேலும் நஜீஸ் ஷெய்த்தான் இருக்க கூடிய இடமாக ஆக்கி இருக்கிறான்.
வஹ்தத்துல் வுஜூத் என்பது அல்லாஹ்வின் ஆற்றலாகும். அல்லாஹ்வின் ஆற்றல் இல்லாத இடமே இல்லை. ஆகவே அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆற்றலும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடயவை. ஆகவே குறிப்பிட்ட ஒன்றை சுட்டி இதுதான் அல்லாஹ்வா என்று கேட்க முடியாது. இந்த அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வருகிறது.
இந்த ஆற்றலை மனிதர்களாகிய நாம் எவ்வாறு எண்ண வேண்டும் என்றால் மனிதனுக்கு அல்லாஹ் காத்தமுன் நபி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் மூலம் விதித்த ஷரீஅத்தின் மூலம் விளங்கி கொள்ள வேண்டும்.
இந்த ஷரீஅத்தின் படி நமக்கு ஹலாலாக்கப்படதை அல்லாஹ்விற்குறியதாகவும். இன்னும் ஹராமாக்கப்பட்டதை ஷெய்த்தானுக்குறியதாகவும் எண்ணுவதே சிறந்தது.
மனிதனுக்காக அல்லாஹ் வகுத்த இந்த ஷரீஅத்தின் படி மனிதனுக்கு ஹலாலாக்கபட்டதை மட்டுமே கொண்டு தூய்மையாக அல்லாஹ்வை நினைத்து கொள்ள வேண்டும். ஹராமாக்கப்பட்டதை கொண்டு அறவே எண்ணவே கூடாது. மேலும் ஹராமான தீய எண்ணங்களில் சிந்திப்பவன் அந்த தீய எண்ணங்களுக்கு சொந்தமான ஷெய்த்தானோடு நரகத்தில் புகுவதற்கு அல்லாஹ் நாடிவிடுகிறான்.
ஆகவே வஹ்தத்துல் வுஜூத் என்னும் ஞானத்தை விளங்கிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் தன் வாழ்வில் இறுதி வரை நோய்வாய்பட்டு இருக்கும் போதும் கால் தரையில் உரசி செல்லும் அளவில் இருந்தும் ஷரீஅத்தில் ஒன்றான தொழுகையை விடவில்லை. ஷரீஅத்தை நிலைநாட்டுவது வஹ்தத்துல் வுஜூத்.
இதுவே நான் சாதரணமாக, இழிவாக எண்ணுபவர்களுக்கு வஹ்தத்துல் வுஜூத் பற்றி கொடுக்கும் சிறிய விளக்கம்.
வஹ்தத்துல் வுஜூத் என்னும் ஞானத்தை விளங்கி கொள்பவர்களை விட விளங்காமல் இருப்பவர்களே அதிகமாக இருப்பார்கள்.
எனினும் இந்த வஹ்தத்துல் வுஜூத் பற்றி விதான்டாவாதம் புரியாமல் வஹ்தத்துல் வுஜூத் பற்றி தெரிந்து கொண்ட ஷெய்குமார்களிடம் படிப்படியாக கற்று வஹ்தத்துல் வுஜூத் பற்றி தெரிந்து கொண்ட அன்பியாக்கள் மற்றும் அவுலியாக்களை போல வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை புரிவானாக !
வஹ்தத்துல் வுஜூத் பற்றி இனி தவறான கருத்து பதிவு செய்ய வேண்டாம் என்று அல்லாஹ்வையும் அவன் தூதரையும் ஈமான் கொண்டவர்களிடம் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
1. இஹ்யாவு உலூமூத்தீன்
2. பத்ஹுர் ரப்பானி
3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்
4. கல்வத்தின் இரகசியங்கள்
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.