MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தன்னை தானே அறிவது உண்மையான அறிதல்

​ 

தன்னைத்தானே அறிவது உண்மையான அறிதல். அதன் மூலம் மனிதன் இறைவனை அடைந்து கொள்வான். அதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தன்னை அறிதல்


​​தன்னை அறிவதற்கு முதல் படி என்ன? என்பதை அறிய இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.

நீ யார்?


​​நாம் யார்? மலக்கா? மிருகமா? ஷெய்த்தானா? எமது நிலை என்ன? என்பதை அறிந்துக்கொள்ள அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

உடலும் உயிரும்

எழுதியவர்:  அஸீஸ் மரைக்கா காதிரி


இரண்டு உயிர்கள் -- இரண்டு உடல்கள்


முதலாவது உயிர் - ஆண்களின் விந்துவில் இருந்து தொடரும். இந்த உயிர் ஸ்தூலத்தை சார்ந்தது.


​​இந்த உயிருக்கு பெற்றோரின் மரபணு தொடற்சியும் அடையாளங்களும் இருக்கும். இந்த உயிர் ஸ்தூல உடலை பஞ்சபூதங்களின் ஆற்றலோடு கருவில் இருந்து மரணிக்கும் வரை ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும்.

இந்த உயிருக்கு பேசுவது, பார்ப்பது, கேட்பது போன்ற புலன்களின் ஆற்றல் கிடையாது.  


​​இந்த உயிரை ரூஹே ஹைவானி என்று சொல்லப்படும்.

இரண்டாம் உயிர் - கருவில் வளரும் குழந்தையின் நான்காவது மாதத்தில் உட்புகும். இந்த உயிருக்கும் பெற்றோருக்கும் எந்த சம்மந்தமுமில்லை. இந்த உயிர் இந்த உலகை சார்ந்ததுமில்லை.


இந்த உயிர் பேசுவது, பார்ப்பது, கேட்பது போன்ற புலன்களின் ஆற்றல் உள்ளது.

இந்த உயிர் சூட்சும உடலை சார்ந்தது. இந்த உயிர் ஸ்தூல உடலை உறங்கும் நிலையில் விட்டு விட்டு சூட்சும உடலோடு எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் ஆற்றல் மிக்கது.


இந்த உயிருக்கு மரணம் கிடையாது. இந்த உயிரை ரூஹே இன்சானி என்பார்கள்.

இப்படி இரண்டு உயிர்களும் ஒன்றாகி இரண்டு உடல்களும் ஒன்றுக்குள் ஒன்றாகி பிறக்கின்ற மனிதனை முழுமையாக விளங்க நமக்கு வயது போதாது.


மனிதனைவிட அற்புதமான ஒரு படைப்பு எதுவுமில்லை. தன்னை முழுமையாக விளங்குவதே இந்த உலகிற்கு நாம் வந்த நோக்கம். தன்னை அறிவது கடமை பர்லு.


அஸ்மா உல் ஹுஸ்னாவின் ரகசியங்கள்

​ 

இறைவனுடைய திரு நாமங்கள் 99 ஆகும். இந்த 99 (அஸ்மாக்களும்) மனிதர்களில் பிரதிபலிக்கும். அந்த ரகசியத்தை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.