MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வஹ்ஹாபிகளின் கருத்து திரிக்கப்பட்ட அல் குர்ஆன்


ஆக்கம் - எம்.ஆர்.லுதுபுல்லாஹ்  (இலங்கை)


வஹ்ஹாபிகளின் கருத்து திரிக்கப்பட்ட அல் குர்ஆன் வசனங்களை பின்பற்றுவதனாலும் சிலை வணங்கிகளுக்கு இறக்கப்பட்ட வசனங்களை முஸ்லிம்களுக்கு சுமத்துவதாலும் கிடைப்பது நரகமா? நபிவழியா?


தௌஹீத் ஜமாத்தினர் எனப்படுவோர் இப்னு தைமிய்யா என்பவரால் உருவாக்கிய வழிகெட்ட அகீதாவை முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவரால் உலகத்தில் முதன் முதலில் பிரச்சாரம் செய்து தான் சொல்வது தான் தூய இஸ்லாம் என்றும். அது வரை காலமும் இஸ்லாத்தைப் பின்பற்றியவர்களை முஷ்ரிகீன்கள் என்றும் பட்டமளித்து முஸ்லிம்களையும், முஸ்லிம் பெண்களையும் வயது வேறுபாடு இன்றி கொன்று குவிக்கச் சொன்ன முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றுகிறவர்களாவர்.


இவரைப் பின் பற்றுபவர்களை இவரின் பெயரை வைத்து .வஹ்ஹாபிகள் வஹ்ஹாபை பின்பற்றுபவர்கள் என்று அழைக்கப்படலாயிற்று. இவர்கள் தங்களது கொள்கையை மக்கள் மத்தியில் தாங்கள் தான் அல் குர்ஆன், அல் ஹதீஸின் படி நடப்பவர்கள் என்றும் பின்பற்றுவதற்கு இவை இரண்டுமே போதுமாகும் என்றெல்லாம் அறிமுகப்படுத்தி அன்று முதல் இன்று வரை மார்க்கத்தின் பெயரால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றமை உலகறிந்த விடயமாகும்.


இதற்கு காரணம் என்ன என்று ஆராயும் போது முஸ்லிம்கள் தாம் தலைக்கு மேல் வைத்து மதிக்கப்படுகின்ற அல் குர்ஆனை வைத்தே முஸ்லிம்களை வழிகெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தமது கொள்கையை மக்கள் மத்தியில் இலகுவாக புகுத்த முடியாது என்று கருதியதன் காரணத்தால் தமது கொள்கைக்கு சார்பான கருத்துக்களை அல்லது அல் குரானின் தர்ஜுமாவிலுள்ள சொற்களை மாற்றியும் புதிதாக புகுத்தியும் வந்தனர்.


இதன் விளைவினால் தான் எடுத்ததற்கெல்லாம் குர்ஆனைப் பேசுகிறோம் என்று சொல்லி மக்களை வழிகெடுத்தி வருகின்றனர். இதனை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து காட்டி வஹ்ஹாபிகள் எவ்வாறு இந்த குர்ஆன் வசனங்களில் கருத்து திரிபுகள் செய்திருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே இந்த கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.


வஹ்ஹாபிகள் கருத்து திரிக்கப்பட்ட குர்ஆன் ஆயத்துக்களை தான் பின்பற்றுகிறார்கள் அவர்கள் பின்பற்றக்கூடிய குர்ஆன் தர்ஜுமாவின் விளக்கம் பிழையானது அதன் கருத்துக்கள் பாரியளவிலான கருத்து வித்தியாசத்தை கொண்டுள்ளது என்பதை கீழுள்ளவாறு தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.


முதலில் வஹ்ஹாபி குர்ஆன் மொழிபெயர்ப்பை பார்ப்போம் (ஸஊதியில் இருந்து வெளிவரும் பச்சை நிற தர்ஜுமா)


7:192 மேலும் அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவி செய்ய சக்தி பெறமாட்டார்கள் தங்களுக்கு தாங்களே (ஏதும்) உதவி செய்துகொள்ளவும் சக்தி பெறமாட்டார்கள்.


7:193 நீங்கள் அவார்களை நேர்வழியின் பால் அழைத்த போதிலும் உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள், நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய் மூடிக்கொண்டவர்களாக இருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.

7:194 நிச்சயமாக அல்லாஹ்வைதவிர நீங்கள் (தெய்வங்களென அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள் உங்களைப்போன்ற அடியார்களே (உங்களுக்கு பயனளிப்பாளர்கள் என்ற கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழைத்துப்பாருங்கள். உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.


இனி அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினர்பின்பற்றும் சரியான கருத்தையுடைய அப்துல் ஹமீது பாகவி (பழைய பிரதி) தர்ஜுமதுல் குர்ஆனின் மொழிபெயர்ப்பை பார்ப்போம். அதே ஆயத்துக்களின் உண்மையான கருத்துக்களைப் பாருங்கள். மேலே அடையாளப்படுத்தபட்டுள்ள சொற்களுக்கு எந்த கருத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.


7:192 அவை, இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்யும் சக்தியற்றவையாக இருப்பதுடன் தமக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.


7:193 நீங்கள் அவைகளை நேரான வழிக்கு அழைத்த போதிலும் உங்களை அவைகள் பின்பற்றமாட்டாது. நீங்கள் அவைகளை அழைப்பதும் அழைக்காது வாய் மூடிக்கொண்டிருப்பதும் உங்களுக்குச் சமமே.


7:194 நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் தெய்வங்களென அழைக்கின்றீர்களோi அவைகள் உங்களைப்போன்ற அடிமைகளே (உங்கள் கோரிக்கைகளை அவைகள் நிறைவேற்றுகின்றன என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவைகளை நீங்கள் அழைத்துப்பாருங்கள் உங்களுக்கு அவை பதிலளிக்கட்டும்.


சரி ஒரு வேளை இந்த வஹ்ஹாபிகள் இந்த விடயத்தை பார்த்திருக்கும் விதம் வேறு என்றும் அந்த வசனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பில் மொழி பதியாக இரண்டு சொற்கள் பாவிக்கப்பட்டாலும் கருத்து மாற்றம் நிகழாது எனக்கூறி எப்படியாவது நழுவ பார்க்கும் இந்த வழிகெட்ட வஹ்ஹாபிகளின் வாதங்களில் எவ்வித உண்மையும் இல்லை. என்பதை இன்ஷா அல்லாஹ் நீங்கள் விபரமாகவே அறிந்துகொள்வதற்காக மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களில் ஒரு வசனத்திற்கான தப்ஸீர் விளக்கவுரையையும் கீழே பார்க்கலாம்.


மேலே குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களில் 7:194 ஆவது ஆயத்துக்கு தப்ஸீர் உலமாக்கள் எப்படி கருத்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை அவதானிப்போம்.


தப்ஸீர் பைழாவி - இந்த மண் சிலைகள் அவர்களுக்கு உதவி செய்யும் என்று புத்தியுள்ளவைகளாக நினைத்துக்கொண்டிருந்தார்கள் எனவே அல்லாஹ்வும் இந்த சிலைகளை கிண்டல் செய்யும் விதமாக இப்படி கூறினான்.” என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


தப்ஸீர் முக்தஸர் இப்னு கஸீர் - 2ம் பாகம் 75ம் பக்கத்தில் அடிமைகள் என்பதற்கு கூறியுள்ள விளக்கமாவது – புத்தியுள்ளவர்கள் என்றாலும் அது சடப்பொருள் அது அசையமாட்டாது. அது காதால் கேட்க மாட்டாது. அவைகளை (சிலைகளை) வணங்கக்கூடியவர்கள் அவைகளை விட மேலானவர்கள். புத்தியுள்ள வரை அவர் இவர் என்று பாவிக்கின்றமையே மேற்கூறிய சொல் விளக்கத்துக்கான காரணமாகும்.


தப்ஸீர் ஜலாலைன் - வஹ்ஹாபிகளினாலே ஏற்றுக்கொள்ளப்படுகின்ற இமாம் ஸயூத்தீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தப்ஸீர் ஜலாலைனில் குறிப்பிட்டுள்ள விளக்கத்தை நோக்குவோம்.


“அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கக்கூடியவைகள் (கடவுள்கள்) உங்களைப் போன்று அல்லாஹ்வினால் படைக்கப்பட்டவைகள்தான் அந்த அந்த கடவுள்களிடத்தில் நீங்கள் கேட்டுப்பாருங்கள் அவைகள் (முடிந்தால்) உங்களுக்கு பதில் அளிக்கட்டும்”என்று அந்த சிலை வணங்கிகளைப் பார்த்து கேலியாக அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.


ஆகவே அன்பின் சகோதரர்களே சற்று நிதானமாக சிந்தியுங்கள் இங்கே தமிழ் மொழிரீதியான விளக்கம் ஒன்றை வழங்குவது அத்தியாவசியமெனக் கருதுகிறேன்.


தமிழில் உயிர் உள்ளவைகள் உயர்திணை என்றும் உயிர் அற்றவைகள் சடப்பொருட்கள் அதாவது அஃறிணை என்றும் வேறு பிரித்தாறியப்படுகின்றது. உயர்திணை வசனங்கள் வியாக்கியானம் செய்யும் போது அவர்கள் என்றும் உதாரணமாக (அவர்கள் இவர்களுக்கு, தங்களுக்குத்தாங்களே, அத்தகையவர்கள்) போன்றதை குறிக்கும்.


அஃறிணை வசனங்கள் அவைகள் என்றும் சொற்பிரயோகம் செய்து வருகின்றமை பள்ளிக்கூட சிறுவர்களே தெரிந்து வைத்துள்ள விடயமாகும் இதற்கு உதாரணமாக (அவை, தமக்குத்தாமே, சக்தியற்றவையாக, அவைகளை எவைகளை) போன்ற சொற்களை குறிப்பிடலாம்.


இது இப்படியிருக்க அல் குர்ஆன் வசனங்களின் கருத்துக்களை திரித்து தனது கொள்கைக்கோட்பாட்டுக்கு ஏற்ற விதமாக அந்த குர்ஆன் ஆயத்துக்கு சொல் விளக்கத்தை மாற்றி வேறு ஒரு சொல்லை பாவிக்க முனைந்ததன் விளைவுதான் மேலே இரண்டு தர்ஜுமாக்களின் கருத்துக்களும் வேறுபடுவதற்கு காரணமாகும்.


அல்லாஹ் சிலைகளுக்கு குறிப்பிட்ட விடயத்தை இந்த வஹ்ஹாபிகள் “அவர்கள்” என்று பொருள் கொடுத்ததனால் அஃறிணையை உயர்திணையாக மாற்றி சிலைகளை அவ்லியாக்களாக சித்தரித்துக்காட்டி அவ்லியாக்களிடத்தில் வஸீலா தேடக்கூடாது, அவர்களிடத்தில் உதவி தேடிச்செல்லக்கூடாது என்று பாமர மக்களிடம் இந்த கருத்து திரிக்கப்பட்ட அல் குர்ஆன் வசனங்களின் பொருள்களை காட்டி வழிகெடுத்து வருகின்றமை மிக வேதனையளிக்கும் விடயமாக இருந்து வருகின்றது.


அல் குர்ஆன் என்றால் இரண்டு கருத்து கிடையாது நாங்கள் நம்பி விடுகிறோம் என்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல நம்பும் இக்கால வாலிபர்களை இந்த வஹ்ஹாபிகள் ஏமாற்றி தத்தமது கொள்கைகளை வளர்க்க அல் குர்ஆனையே விளையாட்டுப் பொருளாக பாவித்து வருகின்றமை கவலைக்கிடமான நிலைமையாகும்.


எனவே அன்பின் வாலிப நெஞ்சங்களே வஹ்ஹாபிகளால் முன்னெடுத்து வைக்கப்படும் எந்தவொரு குர்ஆன் ஆயத்தின் பொருளாயிருந்தாலும் சொன்னவுடனேயே நம்பிவிட வேண்டாம். சில வேளைகளில் அந்த குர்ஆன் ஆயத்துக்கு கருத்து திரிக்கப்பட்டுள்ளதை பாமர வஹ்ஹாபிகளே அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களும் அது தான் குர்ஆனின் விளக்கம் என்று அப்படியே நம்பி விட்டதனால் தான் பெரும்பாலான வாலிபர்களும், யுவதிகளும் இந்த வழிகேட்டில் சிக்கவிடப்பட்டிருப்பதை கண்கூடாக காணலாம்.


எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே நன்றாக சிந்தியுங்கள் நான் மேலே குறிப்பிடப்பட்ட குர்ஆன் ஆயத்துக்கு அஹ்லுஸ்ஸுன்னத்து வல் ஜமாத்துடைய இமாம்கள் அந்த குர்ஆன் ஆயத்துக்கு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் முக்தஸர் இப்னு கஸீர், தப்ஸீர் ஜலாலைன் போன்ற அனைத்து தப்ஸீர்களிலும் அப்துல் ஹமீது பாகவியுடைய பழைய தர்ஜுமாவின் விளக்கத்தையே குறிப்பிட்டுக்காட்டுகின்றன.


அதாவது சிலைவணங்கிகளுக்கு விழித்துக்கூறிய விடயங்களாகவே பொருள் கொடுக்கப்பட்டுள்ளன.இந்த வஹ்ஹாபிகளின் நவீன மொழிபெயாப்பில் மாத்திரமே அவைகள் என்பதற்கு பதிலாக அவர்கள் என்று மாற்றி மொழிபெயார்த்துள்ளார்கள். இப்படி இவர்கள் மாற்றிக்கொண்டால் தான் வஹ்ஹாபிகளின் போலிப்பிரச்சாரத்தை குர்ஆன் மயப்படுத்த முடியும் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கை. இங்கே அவர்கள் என்று பாவிப்பதன் காரணமாக இந்த சொல்லை ஊடகமாக வைத்து அவ்லியாக்களிடமும், நல்லடியார்களிடமும் உதவி தேடக்கூடாது (வஸீலா ) தேடக்கூடாது தேவைகளை கேட்பது என்றிருந்தால் அல்லாஹ்விடம் மாத்திரம்தான் கேட்க வேண்டும் அவ்லியாக்களின் பொருட்டினால் பிரார்த்தனை செய்யக்கூடாது அப்படி செய்தால் ‘சிர்க்’ ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் வஹ்ஹாபிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறதை காணலாம். ஆனால் அந்த இடத்தில் அவைகள் என்று வருவதனால் அல்லாஹ் சிலைவணங்கிகளான முஷ்ரிகீன்களுக்கு இறக்கப்பட்ட வசனமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.


சிலை வணங்கிகளுக்கு இறங்கிய குர்ஆன் வசனங்களை வஹ்ஹாபிகள் அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாத்தினர்பால் சொட்டுதல் செய்யக்கூடிய ஆயத்துக்கள் அதாவது அவ்லியாக்களிடத்தில் முஸ்லிம்கள் வஸீலா தேடுவதற்கு எதிராக வஹ்ஹாபி குர்ஆனிலிருந்து அள்ளி வீசப்படுகின்ற கருத்து திறிக்கபட்ட அல்லது வேறு ஒரு விடயத்தை சொல்வதற்காக இறக்கப்பட்ட ஆயத்துக்கள்) இந்த ஆயத்துக்கள் மக்கா காபிர்களின் விடயத்தில் இறக்கப்பட்டதாகும்.


சில வஹ்ஹாபிகள் மக்கா காபிர்களும் தர்காவுக்கு வரும் முஸ்லிம்களும் ஒன்றெனக்கூறி இந்த வசனங்களை எம்மீது திணிக்க முற்படுகின்றமை அவர்களின் அறியாத்தன்மையையே எடுத்துக்காட்டுகின்றன. கீழுள்ள ஆயத்துக்களின் சாயான கருத்தை நான் மேலே குறிப்பிடப்பட்ட தப்ஸீர்களின் துணையைகொண்டு வஹ்ஹாபிகள் சொல்லுகின்ற கருத்தும் தப்ஸீர் உலமாக்கள் சொல்லுகின்ற கருத்தும் ஒன்றுதானா எனப் பாருங்கள்.


39:3,26:93,35:3, 3:135, 39:53, 17:23, 27:62, 6:63-64


குர்ஆனுக்கு தவறான விளக்கம் அளித்து மார்க்கத்தில் சந்தேகத்தை (குழப்பத்தை) ஏற்படுத்தி சர்ச்சை செய்யும் ஒரு பிரிவினர் வெகு விரைவில் வருவார்கள். அப்பொழுது நீங்கள் சுன்னத்தெனும் திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் சுன்னத் எனும் நபியவர்களின் வழியை அறிந்து நடப்பவர்கள் தான் குர்ஆனை நன்கு அறிந்து செயல்படுபவர்கள். அறிவிப்பவர் : ஹஜ்ரத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் - நூல்:தாரமி


மக்கா காபிர்கள் சிலையை எப்படி எண்ணுகிறார்களோ அவ்வாறே தர்காவில் இருக்கும் முஸ்லிமும் அவ்லியாக்களை அல்லாஹ்வின் இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள், கப்ரிலே இருப்பவர்கள் தான் தமது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தருகிறார்கள் என்றும் அங்கு வருவோர் எண்ணுகிறார்கள் என்று கற்பனை செய்து சிலைகளுக்கு இறக்கப்பட்ட ஆயத்தை தர்காவில் அவ்லியாக்களை ஸியாரத் செய்வதற்கு எதிராக முன்வைக்கிறார்கள், இந்த மடையர்கள்.


அப்படியாயின் உள்ளங்களில் இருப்பவற்றை அறியும் ஆற்றல் படைத்த றப்புல் ஆலமீனின் வல்லமைக்கு இந்த வஹ்ஹாபிகள் பேரம் பேசும் அம்சமாகவே இதனைக் கருத வேண்டியிருக்கும், இதன் படி அல்லாஹ்வுக்கு இணைவைப்போர் வஹ்ஹாபிகளே என்பது நிரூபணமாகிறது. அப்படியல்லாவிட்டால் தர்காவுக்கு வரும் மக்களின் எண்ணங்களை எப்படி வஹ்ஹாபிகளால் தெரிந்து கொள்ள முடியும்? என்பது அவர்களுக்கே புரியாத விடயமாக இருக்கின்றது.


அவ்லியாக்களை யாரும் வணங்குவது கிடையாது அவ்லியாக்களை அல்லாஹ்வின் இடத்திற்கு யாருமே வைப்பதும் கிடையாது அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நல்லடியார்கள் என்பதால் அவர்களின் அருளின் பொருட்டால் வஸீலா தேடி அவர்களின் நல்லாசியைப் பெற்றுக்கொள்வது தான் தர்காக்களில் நடைபெறும் நல்லம்சம்களாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 


அதை விடுத்து “கப்று வணங்கிகள்” என எம்மைப்பார்த்து குரைப்பதால் மட்டும் அவர்களின் குற்றச்சாட்டுக்கள் சரியாகாது அத்துடன் இந்த விடயங்களை ‘சிர்க்’ என பெயர்குத்த முனைவது வெறும் முட்டாள்தனமான வாதமாகும்.


‘யார் ஒருவர் தன்னுடைய சொந்தக் கருத்துப்படி அல்குர்ஆனுக்கு விளக்கம் சொல்வாரோ அவரின் இருப்பிடம் நரகமாகும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அல் ஹதீஸ் - அபூதாவூத் திர்மிதி)


அல் குர்ஆனுக்கு யார்சொந்த கருத்து கொடுப்பவர்கள், யார் அதன் உண்மையான கருத்தின்படி நடப்பவர்கள் என்பதை தெட்டத்தளிவாகவே அறிந்திருப்பீர்கள். இதன்படி அல் குர்ஆனுக்கு சொந்த கருத்தின் படி விளக்கம் சொல்பவர்கள் ஒதுங்கும் தளம் நரகம் என்பதையும் மேலுள்ள ஹதீஸின் வாயிலாக அறிந்திருப்பீர்கள். இதன் படி வஹ்ஹாபிகளின் கருத்து திறிக்கப்பட்ட குர்ஆன் தர்ஜுமாவை பின்பற்றுவதனாலும் சிலை வணங்கிகளுக்கு இறக்கப்பட்ட ஆயத்துக்களை முஸ்லிம்கள் மீது சுமத்துவதாலும் இது நரகத்திற்கு இட்டுச்செல்லும் வழியாகும் என்பது நன்கு தெளிவாகின்றது.


ஆகவே சுன்னத் எனும் நபிவழியை அறிந்து நடக்கும் கூட்டமாகிய அஹ்லுஸ் ஸுன்னத்து வல் ஜமாத்தினரே குர்ஆனை நன்கு அறிந்து செயற்படும் கூட்டம் அவர்களே நபி வழியின் பால் இருப்பவர்கள் என்பது நிரூபணமாகின்றது.


ஆகவே நம்மனைவரையும் வல்லவன் அல்லாஹ் நேர்வழியாகிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் கூட்டத்திலே வாழ்ந்து மரணிக்கச் செய்ய அருள்புரிவானாக. ஆமீன்

© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.