MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
வுழுவின்றி சுத்தமின்றி குர்ஆனை தொடலாமா ஓதலாமா?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் வுழு இன்றி குர்ஆனை தொடலாமா? மற்றும் அசுத்தமானவர்கள் குர்ஆனை தொடலாமா?, ஓதலாமா?
♣ வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-
வுழு இன்றி குர்ஆனை தொடலாம் மேலும் அசுத்தமானவர்கள் குர்ஆனை தொடலாம், ஓதலாம் என்று வஹ்ஹாபிகள் காட்டும் போலி ஆதாரங்களுக்கு தக்க பதில்கள்:
பிஜே என்ற காபிர் குர்ஆனும் & ஹதீஸூம் அல்லாத வேறு எந்த மனித அபிப்பிராயத்தையும் ஏற்கவே முடியாது என்று முழங்கிக் கொண்டுருப்பவர். பிஜே என்ற கருத்து கண்ணாயிரம் தன்னுடைய அபிப்பிராயத்தை மட்டும் இங்கு புகுத்தி '' இதுதான் சரியான கருத்து என்று எவ்வாறு எழுதுகிறார்? எந்த ஆயத்திலும் & எந்த ஹதீஸிலும் இல்லாத, ஒரு விளக்கத்தை, தன் அறிவை மட்டும் பயன்படுத்திக் கூறியிருப்பது. இவர் மிக பெரிய பொய்யன் வழிகேடன் என்பதற்கு சான்றாகும்.
♦ இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் தன்னுடைய கருத்து மட்டுமே சரியானது, மற்றவை தவறானவை என்ற விதத்திலேயே குர்ஆனுடைய இந்த ஆயத்திற்கு அர்த்தம் எழுதியுள்ளார், பிஜெ வின் மொழிபெயர்ப்பு விளக்கத்தை பாருங்கள்: "தூய்மையான (வான) வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்டமாட்டார்கள் '' (மொழிபெயர்ப்பு = 56 /79 )
தொடமாட்டார்கள் என்பதற்கும், தீண்டமாட்டார்கள் என்பதற்க்கும் நிறைய வேறுபாடு உள்ளது, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடிப்பதற்குத்தான் தீண்டுதல் என்று சொல்லப்படும். அவருடைய மொழிபெயர்ப்பில் இது போன்ற தாறு மாறான மொழிபெயர்ப்பைக் கொண்டு விளக்கங்கள் கூறி குழப்பங்கள் செய்து வரும் இந்த வழிகேடர் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
இது ஒரு சில வசனங்களுக்கு, மட்டும் மல்ல குர்ஆன் முழுமைக்கும் இவ்வாறே தவறான கருத்துக்கள் எழுதப்படுள்ளன! இஸ்லாமியர்களே நம் ஈமானை பாதுகாக்க இது போன்ற வழிகேடர்கள் சொல்லும் & எழுதும் விளக்கம் வேண்டாம் .அல்லாஹூ நம்மை அனைவரையும் பாதுகாப்பானாக!
திருக்குர்ஆன் எழுத்துவடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து வடிவில் அருளப்படாததை தொடும் பேச்சுக்கே இடமில்லை. தொடும் விதத்தில்லாவது அருளப்படிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள் என்று கூறமுடியும். திருக்குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை. எனவே இதைத் தொடமாட்டார்கள் என்பது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனைக் குறிக்காது. எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப்பிரதியைத்தான் குறிக்கும் இவ்வாறு தன்னுடைய சுய விளக்கத்தை எழுதியபின் கடைசி பாராவில் இப்படி எழுதி இருக்கிறார்.
எல்லா நிலைகளிலும், எல்லா மனிதர்களும் குர்ஆனை தொடலாம், படிக்கலாம், வாசிக்கலாம், என்பது தான் குர்ஆனிலிருந்து பெறப்படுகிற, நபிகள் நாயகத்தின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகிற முடிவாகும் . இதிலும் வஹ்ஹாபிகள் தன் சொந்தக் கருத்தைத்தான் சொல்கிறார்கள், ஆதாரம் எதையும் காண்பிக்கவில்லை. குர்ஆனிலிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலுருந்தும் பெறப்படுகின்ற முடிவு என்று பிஜே கூறியிருப்பதும் தன்னிச்சையான முடிவேயாகும்.
♦ இவ்வாறு தன் சுய அறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் சொல்ப்வரைப் பற்றி ஹதீஸ்கள் எச்சரிகிறது ஹதீஸ்: தன் சுய அறிவின்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறுகிறவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ
நூல் : திர்மிதி ,மிஷ்காத்
♣ சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் அதாவது குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் ஏகோபித்த முடிவு வுழு இன்றி, மேலும் அசுத்தமானவர்கள் குர்ஆனை தொடுவது ஹராமாகும். பரிசுத்தமானவர்கள் என்று அல்லாஹூ தஃஆலா கூறியுள்ள இந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் கூறப்படும்.
1)பாவங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்.
2)அசுத்தங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்.
முதல் அர்த்தத்தின் படி பரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மலக்குகளாகும். அதன் படி தொடமாட்டார்கள் என்றால் "லவ்ஹூல் மஹ்ஃபூள் என்னும் பதுகாக்கப்பட்ட பேரேட்டில் உள்ளதை அவர்களைத் தவிர வேறெவரும் தொடமாட்டார்கள்" என்பது கருத்தாகும். இந்த கருத்தை ஹழ்ரத் இப்னு அப்பாஸ், அனஸ், ஸயீது ஜூபைர் (ரலியல்லாஹூ அன்ஹூம்) அவர்களும், முஜாஹித், இக்ரிமா, ளஹ்ஹாக், ஜாபிர் பின் ஜைத் (ரஹிமஹூ முல்லாஹ் ) போன்றோர் கூறியுள்ளார்கள்.
இரண்டாவது அர்த்தத்தின் படி பரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மனிதர்களாகும். "வுழு இல்லாமலிருப்பது, குளிப்பு கடமையாயிருப்பது, பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களாக இருப்பது போன்று அசுத்தங்களை விட்டும் பரிசுத்தமாயிருப்பது" என்று பொருளாகும். இந்த கருத்தை ஹழ்ரத் அலீ, இப்னு மஸூது, ஸஃது பின் அபீவக்காஸ், ஸயீது பின் ஜைது (ரலியல்லாஹூ அன்ஹூம்) அவர்களும், முஹம்மது பாகர், அதாஉ, தாவூஸ், ஜுஹ்ரி, ஸாலிம், நகயீ, ஹகம், ஹம்மாது, மாலிக் பின் அனஸ், அபூஹனிஃபா, ஷாஃபீ, அஹ்மது பின் ஹம்பல், (ரஹிமஹூல்லாஹூ) போன்றோர்கள் கூறியுள்ளார்கள்.
இதன்படி தொடமாட்டார்கள் என்பது நம்மிடமுள்ள அச்சிடப்பட்ட தாள்களைக் கொண்ட குர்ஆன் ஷரீஃபாகும். குர்ஆனை (மேற்கூறப்பட்ட சிறிய பெரிய அசுத்தங்களை விட்டும்) 'பரிசுத்தமானவர்களான மனிதர்களைத் தவிர வேறு எவறும் தொடமாட்டார்கள் ' எனக் கருத்தாகும். இவ்விரண்டு கருத்துகளுமே சரியானது தான். ஒவ்வொரு கருத்தையும் ஸஹாபாக்களிலும், தாபியீன்களிலும், இமாம்களிலும் பலர் கூறியுள்ளனர். எனவே இரண்டு கருத்துகளுமே சரியானது தான். என்றாலும் இரண்டில் தீர்ப்புக்குரியதும்,¬ அமல் படுத்தப்பட வேண்டியதும், இரண்டாவது கருத்தைத்தான் என்பது இமாம்கள் அனைவரின் ஏகோபித்த அபிப்பிராயமாகும்.
எனவே, பரிசுத்தமானவர்களைத் தவிர (வேறு எவறும்) இதனைத் தொடமாட்டார்கள். என்ற ஆயத்திற்கு வுழு இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடுவதும். குளிப்பு கடமையானவரும், மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண்களும், குர்ஆனைத் தொடுவதும், ஓதுவதும் ஹராமாகும்.
இதற்கு நேர்மாற்றமாக வஹ்ஹாபிகள் என்ற வழிகேடர்கள் எல்லா நிலைகளிலும், எல்லா மனிதர்களும், குர்ஆனைத் தொடலாம். படிக்கலாம். வாசிக்கலாம், என்றும் பிஜே எழுதியிருப்பது முற்றிலும் தவறாகும். ஷரீஅத்தில் ஹராம் என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு செயலை ஹலாலாக்கி வைக்கிறார்.
♣ வுழு இன்றி குர்ஆனை தொடுவது கூடாது, மற்றும் அசுத்தமானவர்கள் குர்ஆனை தொடுவது, ஓதுவது கூடாது என்பதற்குறிய ஆதாரங்கள் பின்வருமாறு:
♦ பரிசுத்தமான்வார்கள் தான் குர்ஆனைத் தொடவேண்டுமென்பதற்கு அடிப்படை ஆதாரங்கள்.
1.இறைமறை வேதம் அல்குர்ஆன்
2.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ்ஸல்லம் அவர்களின் பொன்மொழிகளான ஹதீஸ்கள்.
3.நேர்வழி பெற்ற இமாம்களின் கருத்துக்கள்.
♦ இறைவன் கூறினான் 'தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்)குர்ஆனைத் தொட மாட்டார்கள்'.(அல்குர்ஆன் 56-79) இச்செய்தியின் மூலம் இறைவன் குர்ஆனின் மாண்பை வெளிப்படுத்துகிறான்.தூய்மையானவர்கள் தான் என்று கூறி ஒரு வரைமுறையை இறைவன் விதித்துவிட்டதால் மற்றவர்கள் குர்ஆனைத் தொடகூடாது என்ற அழுத்தமான அர்த்தம் இவ்வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.
நூல் – ஃதகீரா (1-238)
♦ மனிதர்களில் தூய்மையானவர்கள் என்பதன் பொருள் :
ஷிர்க் எனும் இணைவைப்பு, குஃப்ர் எனும் இறைமறுப்பு இவ்விரண்டை விட்டும் நீங்கி உளத்தூய்மையுடன் இருப்போர். புலன்களுக்குத் தெரிகின்ற நஜீஸ் எனும் அசுத்ததை விட்டும் உடல் தூய்மையாக இருப்போர். ஹதஃத் எனும் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கை விட்டும் நீங்கி இருப்போர்.மேற்கண்ட வசனத்திலுள்ள வாசகம் வெளித்தோற்றத்தில் செய்தி வடிவில் அமைந்திருந்தாலும் கட்டளைவாக்கியமாகவே இங்கே கருதப்படும்.
நூல்கள் – தஃப்ஸீர் பஙவீ (5-301), தஃப்ஸீர் இப்னு கஃதீர் (4-299)
♦ 'பரிசுத்தமானவரைத் தவிர (வேறு எவறும்) இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம்' என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு உமர் ரலயல்லாஹூ அன்ஹூ
நூல் : தப்ரானீ
♦ ஹகீம் பின் ஹிஜாம் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிய பொழுது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்: ''நீ பரிசுத்தமாயிருக்கும் நிலையிலே தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள்.
நூல் : தப்ரானீ , அபூதாவூத், ஹாகிம், கஞ்ஜுல் உம்மால் (1/615), ரூஹூல் மஃஆனீ (9 /155), இப்னு கதீர் (4/229), குர்துபீ (17/225), மள்ஹரீ (1/181)
மஃஆரிஃபுல் குர்ஆன் (8/287) ஆகிய விரிவுரைகளிலும், எடுத்தெழுதப்பட்டுள்ளன. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றும் இப்னு கதீரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
♦ எதிரிகள் கைப்பற்றிவிடுவார்கள் என்று பயந்தால் எதிரிகளிருக்கும் பகுதிக்குக் குர்ஆனைக் கொண்டு செல்வதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ
நூல் : முஸ்லிம்
அசுத்தமானவர்கள் குர்ஆனை எடுத்து அவமரியாதை செய்து விடுவார்கள் என்பதினால்தான் எதிரிகளிருக்கும் ஊர்களுக்கு அதனை எடுத்து செல்வதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள்.
♦ ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத்தொட வேண்டும்
நூற்கள்: ஹாகிம்- எண்: 6066, தாரகுத்னீ - எண்: 386, தப்ரானி (கபீர்) - எண்:3067
இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசை நம்பகத்தன்மை வாய்ந்ததென்று இமாம் ஹாகிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் தொடர் அழகியதென்று இமாம் ஹாஜிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்ற கருத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தல்கீஸ் ஹபீர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மொழிந்தார்கள். பரிசுத்தமானவர் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.
அறிவிப்பாளர் - ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூற்கள்: தாரகுத்னீ - 383, பைஹகீ /377, தப்ரானி(கபீர்)-13049, தப்ரானி (ஸஙீர்) - 1160 இந்த ஹதீதின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்.
நூல்; மஜ்மவு ஜவாயித்
♦உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்; நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை சந்தித்தோம். எங்களில் குர்ஆனை நன்கு ஓதக்கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும் போது தான் குர்ஆனைத்தொட வேண்டும்.
நூல்: தப்ரானி (கபீர்) - 8255
இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற இஸ்மாயில் இப்னு ராஃபிஃ என்பவர் பலவீனமானவர் என யஹ்யா இப்னு மயீன் தெரிவித்தாலும் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அவரை நம்பகமானவர் என கூறியுள்ளார்கள்.
நூல்: மஜ்மவு ஜவாயித்
♦ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு இருந்தது:‘தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொடவேண்டும்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூற்கள்: தப்ரானி 466, தாரமீ-2195, பைஹகீ 376
இமாம் தாரகுத்னீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்று :- இதன் அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மையுள்ளவர்கள்.
இமாம் பஙவீ அவர்களின் கூற்று :- இந்த ஹதீஃதின் நிலைபற்றி இமாம் அஹமத் இப்னுஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வினவப்பட்ட போது, இது ஆதாரபூர்வமானது என்றே கருதுகிறேன் என பதிலளித்த இமாம் அவர்கள் மேலும் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை எழுதினார்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. நூற்கள்- திப்யான்1-409 , இர்வாவுல் ஙலீல்1-161)
இமாம் யஃகூப் இப்னு சுப்யான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்று:- எனக்கு தெரிந் இதை விட சிறந்த கடிதம் எதுவுமில்லை ஏனென்றால், நபித்தோழர்களும் மற்றும் தாபியீன்களும் தங்களது சொந்த யூகங்ளைப் புறந்தள்ளி விட்டு குர்ஆனைத் தொடுவதற்கு சுத்தம் அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தனர். நூல்: திப்யான் ஃபீ அக்ஸாமில் குர்ஆன்- பக்கம்:144
இமாம் ஹாகிம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்று:- நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் ஆதாரபூர்வமானது என்று உமர் இப்னு அப்தில் அஜிஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் ஜூஹ்ரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் சாட்சி பகர்ந்துள்ளனர். நூல்: ஹாகிம்: 1-397
இமாம் இப்னு அப்திர் பர்ர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்று:- இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அம்ரு இப்னு ஹஜ்ம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு இக்கடிதத்தை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏற்று அமல்படுத்தியுள்ளார்கள்.மேலும்,தொடர் வரிசையுள்ள ஒரு வழித் தொடர் ஹதீஃத்தை விட கடிதம் சம்பந்தப்பட்ட இந்த ஹதீஃத் பிரபல்யமடைந்ததாகவும் தயமிகவும் ஏற்கத்தக்கதாகவும் அவ்விறிஞர்களிடம் கருதப்பட்டது. நூல்: இஸ்திஃத்கார் 8-10
சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட இப்னு தைமியாவின் கூற்று:- இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதிய இக்கடிதம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் பிரபல்யமுள்ளதாகும். நூல்: ஷரஹுல் உம்தா 1-382
இவரின் கூற்றை ஆதாரமாக காட்டவில்லை மாறாக நீங்கள் போற்றி புகழக்கூடியவரின் கருத்தும் இதுதான் என்று உணர்த்துகிறோம்.இவரின் கூற்றை ஆதாரமாக காட்டவில்லை மாறாக நீங்கள் போற்றி புகழக்கூடியவரின் கருத்தும் இதுதான் என்று உணர்த்துகிறோம்.
♣ குர்ஆனைத் தொடக்கூடாத நிலைகள் : குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்கவேண்டும். அதாவது வுழு இல்லதாவர்,குளிப்புகடமையானவர், மாதவிடாய் பெண்கள், மற்றும் பிள்ளைப்பேறு உதிரபோக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம் குர்ஆனைத் தொடக்கூடாது.
♦ இவ்வாறு கூறிய ஸஹாபா பெருமக்கள் பின்வருமாறு :
அலி ரலியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு, சஃது இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, சயீது இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு, சல்மானுல் ஃபாரிஸீ ரலியல்லாஹு அன்ஹு
♦ இதே கருத்தை கூறிய தாபிஈன்கள் பின்வருமாறு :
அதாவு இப்னு அபீ ரபாஹ் ரஹ்மத்துல்லாஹிஅலைஹி, இப்னு ஷிஹாப் ஜுஹ்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஹஸன் பசரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி,தாவூஸ் இப்னு கய்சான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் இப்னி உமர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, நக்யீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி,இப்னு முசய்யப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, உர்வா இப்னு ஜீபைர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, காஸிம் இப்னு முஹம்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி,காரிஜா இப்னு ஜைத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, அபூபக்கர் இப்னு அப்திர்ரஹ்மான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, சுலைமான் இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி,உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி.
♦ இதே கருத்தை கூறிய இமாம்கள் பின்வருமாறு :
ஹனபீ, மாலிகீ, ஷாபிஈ,ஹன்பலீ, இமாம் பைஹகீ அவர்களுக்குரிய மஃரிஃபதுஸ்ஸூனனீ வல் ஆஃதார்(1/185), இமாம் பைஹீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ரா (1/88), இப்னுல்கய்யீம் அவர்களுக்குரிய இஃலாமுல்மூகியீன்(1/23),ஹிதாயா (1/31), மஜ்மவுல் அன்ஹுர் (1/25),அல்பஹ்ருர் ராயிக் (1/211), மஊனா (1/160),அக்துல் ஜவாஹிர்(1/62), முஹஃத்தப் (1/32), ரவ்ழதுத்தாலிபீன் (1/190), முங்னில் முஹ்தாஜ் (1/36),முக்னிஃ (1/56), முன்தஹல் இராதாத் (1/27), அர்ரவ்ழுல் முரப்பஃ (1/26), ஆகிய நான்கு மத்ஹபுகளைச் சார்ந்த போற்றுதலுக்குரிய இமாம்களும் இக்கருத்தையே வலியுறுத்தியுள்ளார்கள்.
♣ நாம் வஹ்ஹாபிகளின் பானியிலே கேட்போம் அதாவது.
அல்லாஹூவும், அவனுடைய தூதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்படி நடப்பது சிறந்ததா? அல்லது தன்னுடைய சுய அறிவை பயன்படுதும் பிஜே என்ற கருத்து கண்ணாயிரத்தை பின்பற்றுவது சிறந்ததா? என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் கண்களை மூடிக்கொண்டே சொல்வீர்கள் அல்லாஹூம், அவனது தூதர் ரஸூலும் சொல்வதைதான் கேட்போம் என்று. எனவே குர்ஆனை வுழு இன்றி தொடலாமா ? மேலும் அசுத்தமானவர்கள் குர்ஆனை தொடலாமா? ஓதலாமா? என்று நன்கு சிந்தனையுடன் வாசித்தால் மாத்திரமே தெளிவு கிடைக்கும்.
அன்புக்குரியவர்களே!
நம் ஈமானை பாதுகாக்க இது போன்ற வழிகேடர்கள் சொல்லும் & எழுதும் விளக்கம் வேண்டாம். குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள், இமாம்கள், கூறிவிட்டுச் சென்ற கருத்துக்களை எடுத்து நடப்பதற்கு அல்லாஹ் நம் அனைவரையும் துணைபுரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.