MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மீலாத் விழா கொண்டாடினார்களா?
ஆக்கம் : மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தமது பிறந்த நாளை (மீலாதுன் நபி) விழா கொண்டாடினார்களா?
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தங்களுக்கு நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் (அவர்களின் பிறந்த தினத்தில்) அவர்களுக்காக சில மிருகங்களை அறுத்து பங்கிட்டார்கள்.
நூல்கள்: பைஹகி 43, தபரானி, பத்ஹுல் பாரி
ஹதீஸ் விளக்கம்: நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிறந்தபோதே அவர்களுக்காக அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அகீகா கொடுத்துவிட்டார்கள். ஏற்கனவே செய்து முடித்த ஷரியத்துடைய அமல் ஒன்றை திரும்ப செய்ய முடியாது. எனவே, இது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காகவும், அத்தினத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் இந்த மிருகங்களை அறுத்து உணவு சமைத்து மக்களுக்கு பங்கிட்டுள்ளார்கள்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது முஸ்தஹப் (விரும்பத்தக்க நற்செயல்) ஆகும் என மாபெரும் ஹதீஸ் கலைவல்லுநர், இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் பத்வா வழங்கியுள்ளார்கள்.
நூல்: ஹுஸ்ன் மக்ஸித் பி அமல் இல் மௌலித் 64-6
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.
நூல்கள்: முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045