MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
முஸ்லிம்கள் என்ற பெயரில் நடமாடும் முனாபிக்கீன்கள்
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
வழிகேடர்களைப் பற்றி இஸ்லாமிய உம்மத்தினர்களுக்கு அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்களினது முன்னச்சரிக்கையும், உபதேசமும்.
♣ முஸ்லிம் என்ற பெயரில் மாறுவேடத்தில் உலாவும் வழிகேடர்கள்
இன்று நமது சமுதாயத்திற்குள் முஸ்லிம்கள் என்ற பெயரில் மாறுவேடத்தில் பல முனாபிக் கூட்டங்கள் அதாவது ஷீஆக்கள், உருவ வழிபாடு செய்யும் வழிகெட்ட வஹ்ஹாபிகள், மற்றும் தப்லீக் ஜமாஅத் வழிகேடர்கள், சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் மாறுவேடத்தில் ஊடுருவிய சில வழிகேடர்கள், குழப்பவாதிகள் இன்னும் பலரும் உருவாகி உள்ளார்கள்.
இவர்கள் யஹூதிகளின் பணத்திற்காக மார்க்கத்தை விற்க ஆரம்பித்து உள்ளார்கள். இந்த மார்க்க வியாபாரிகளிடம் இருந்து இஸ்லாத்தை பாதுகாக்க சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அகீதாவிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் முன் வரவேண்டும்.
மேலும் இவர்கள் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைக் கூறி அப்பாவி பாமர பொது மக்களுக்கிடையில் குழப்பத்தையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த அடிப்படையில் வழிகெட்ட உருவ வழிபாடு செய்யும் மதகுருமார்கள், அவர்களைச் சார்ந்தவர்களும் என்னதான் கூச்சிலிட்டாலும் அக்கூச்சல் சத்தியத்திலுள்ள பொதுமக்கள் செவியினுள் புகவில்லை.
ஆயினும் இன்று அவ்வாறு கூச்சலிடுவோர் தமது வழிகேட்டை வேரூன்றச் செய்வதற்காக நாய்க்கு மலத்தைக் காட்டி அதை வசப்படுத்துவது போலும், பேய்க்கு சாம்பிராணி போட்டு அதை ஆட வைப்பது போலும் காடையர்களுக்கு ரூபாய்களைக் காட்டித் தமக்கு ஆதரவைத் தேடி வருகின்றார்கள். இவர்கள் காசால் காடயர்களை வசப்படுத்தி கைக்குள் வைத்துக்கொண்டிருப்பதால் அப்பாவி ஏழைகளும், நல்லவர்களும், இளைஞர்கள் சிலரும், சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் மாறுவேடத்தில் உள்ள சில மௌலவிமார்களும் அவர்களின் வழிகேட்டுக்கு கூச்சலிட்டு ஆமாசாமி போட வேண்டியதாயுள்ளது.
இவ்வாறு கூச்சலிடுவோர் சத்தியத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதற்காக அவ்வாறு கூச்சலிடவில்லை, மாறாக தாம் அவ்வாறு கூச்சலிடாவிட்டால் தமது தலைவர்களான ஷாத்தான்களிடமிருந்து தமக்கு மாதாந்தம் வந்து சேரும் வருமானம் தடைபட்டு விடுமென்பதற்காகவும், தாம் தொடர்ந்தும் சொகுசான வாழ்வை அனுபவித்து வரவேண்டும் என்பதற்காகவுமே அவ்வாறு கூச்சலிடுகின்றார்கள். இதுவே உண்மை. எனவே கூலிக்கும் மாரடிக்கும் கூட்டத்தவர்களை பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
சத்தியத்தில் நிலைத்திருந்தால் ரியாலும், தீனாரும், திர்ஹமும் காலடிக்குத் தானாக வரும். அல்லாஹ் எல்லா வல்லமையும் உள்ளவனே.
மேலும் அதோடு மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை. ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழி செல்லும் ஏழைகளைத் தேடி இனங்கண்டு அவர்களுக்கு வீடு, கிணறு, மலசலகூடம் போன்றவற்றைக் கட்டிக்கொடுத்தும், இரத்த தானம், றமழான் மாதம் அரிசி, ஈத்தம்பழம், பணம் முதலானவற்றை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியும் அவர்களைத் தமது வழிகேட்டின் ஈர்த்துக் கொண்டுமிருக்கின்றார்கள். இது வியப்பான விடயமில்லை.
ஆனால் வியப்பான விடயம் என்னவெனில் ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டு அக்கொள்கை வழி சென்று கொண்டிருந்த மௌலவீமார்களில் சிலர் வழிகெட்ட வஹ்ஹாபிகளால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ரியால் என்ற மதுவை அருந்தி அதனாலேற்றப்படும் மயக்கத்தில் அவர்களுடன் சேர்ந்துகொண்டும், அறிவைக் கொண்டு பெருமை, மோகம், ஆணவம், கர்வம் அடித்துக் கொண்டும், நான் என்ற அகங்காரமும் மற்றவர்களெல்லாம் அறிவீனர்கள் என்ற பாணியில் திரிகிறார்கள்.
பாங்கு சொல்லும் முன் ஸலவாத் சொல்லுதல் பித்அத், பெண்கள் பள்ளிக்குச் சென்று (தராவீஹ் - தஸ்பீஹ்) தொழுவது ஹராம், அல்லாஹ்வின் முதல் படைப்பு தண்ணீர், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூர் - ஒளி கிடையாது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமேனிக்கு நிழல் உண்டு, பெரியார்களின் கால்களை - கப்ருகளை குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு தோற்றம் வெளிப்பட்டால் ஹராம், வஹ்ததுல் வுஜூத் ஞானம் அதாவது உண்மை தௌஹீத் (ஒரு உள்ளமையின் வெளிப்பாடு) அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” எனும் இறைஞானம் ஷிர்க் என்றெல்லாம் கூச்சலிடுவது இவர்களின் கொள்கையாகும். அவர்களின் பாட்டுக்குத் தாளம் போட ஒரு கூட்டம் இருக்கிறது. அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாவன்.
ஆகவே இப்படிப்பட்ட இரண்டு முகங்கள் கொண்ட மார்க்க வியாபாரிகளிடம் இருந்து இஸ்லாத்தையும் ஈமானையும் நமது முஸ்லிம் சமுதாயத்தையும் பாதுகாக்க சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அகீதாவிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் முன் வரவேண்டும்.
அந்த அடிப்படையில் அல் குர்ஆன், அல் ஹதீஸ் வெளிச்சத்தில் வழிகேடர்களைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்களினதும் முன்னச்சரிக்கைகள், உபதேசங்கள் பின்வருமாறு தொகுத்து தந்துள்ளோம். இவர்களிடமிருந்து உங்கள் ஈமானை பாதுகாத்து கொள்ளுங்கள்.
♣ வழிகேடர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்.
தங்களுடைய மார்க்கத்தை (மனம் போல்) பிரித்து வைத்து, பல பிரிவினர்களாகி விட்டார்களே, அத்தகையோரின் உள்ளவர்களாக ஆகிவிடாதீர்கள். அவ்வாறு பிரிந்தவர்கள் உண்மையை புறக்கணித்து) ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடமுள்ளதை கொண்டு மகிழ்ச்சி அடைபவர்களாக இருக்கின்றனர். (அல் குர்ஆன் 30:32)
♦ நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.(அல்குர்ஆன் : 6:159)
♦ எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) யாதொன்றையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீங்கள் அவர்களை நேரான வழியில் (எவ்வளவு வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள். (அல்குர்ஆன் : 18:57)
♦ இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.
(அல்குர்ஆன் : 4:143)
♦ ஹழ்ரத் உதைஃபா இப்னு யமான் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். மக்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.)
நான், இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ்' (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆம் (இருக்கிறது)' என்று பதிலளித்தார்கள். இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா? என்று நான் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளித்தார்கள். அந்தக் கலங்கலான நிலை என்ன? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய் தீமையையும் காண்பாய்'. என்று பதிலளித்தார்கள்.
அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?. என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம். நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்'. என்று பதிலளித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்'. என்று நான் கேட்க.
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள், நம் மொழிகளாலேயே பேசுவார்கள்'. என்று பதிலளித்தார்கள்.
நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்'. என்று பதில் கூறினார்கள்.
அதற்கு நான், அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது) என்று கேட்க,
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு. ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)'. என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 3606
♣ ஷைத்தானுடைய கூட்டத்தினர்கள்
அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க; ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்! (அல்குர்ஆன் : 58:19)
♣ இரண்டு முகங்கள் கொண்டவர்கள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரண்டு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான்.
ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: ஷஹீஹ் புகாரி 3494
♣ பொய்யர்களும், ஏமாற்றுக்காரர்களும், நயவஞ்சகர்களும்
அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மேலும்,,) கடைசி காலத்தில் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்களும் வருவார்கள். நீங்களும், உங்களின் மூதாதையர்களும் கேள்விபடாத விஷெயங்களையெல்லாம் உங்களிடத்தில் கொண்டு வருவார்கள். அவர்களைப் பற்றி (உங்களிடம் நான்) முன்னெச்சரிக்கை செய்கின்றேன் (எனது எச்சரிக்கையின்படி நீங்கள் அவர்களிடம் கவணமாக நடந்து கொண்டீர்களானால்) அவர்கள் உங்களை வழிகெடுத்துவிடவும் முடியாது. உங்களை குழப்பத்தில் ஆழ்த்தவும் முடியாது.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்கள்: முஸ்லிம் 07, முஸ்னத் அஹ்மத் பாகம் 2 பக்கம் 349, மிஷ்காத் 154
♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நயவஞ்சகனுக்கு உதாரணம் இங்குமங்குமாய் இரு ஆட்டு
மந்தைகளுக்கிடையில் சுற்றித் திரியும் ஓர் ஆட்டைப் போலாகும். சில சமயம் இந்த மந்தையிலும் சில சமயம் மற்றொரு மந்தையிலும் இருக்கும்.
நூல்: முஸ்லிம்
♣ ஈமான் அற்றவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள் : ஒருவரைப் பற்றி 'அவரின் அறிவுதான் என்ன!!! ; அவரின் விவேகம் தான் என்ன!!! அவரின் வீரம் என்ன!! என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதரின் இதயத்தில் கடுகளவு கூட ஈமான் இருக்காது.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஹுதைஃபா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஸஹீஹுல் புகாரி 7086
♦ அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். மேலும், இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்.” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3611
♣ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழிக்க முயற்சிப்பவர்கள்
இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.
அல் குர்ஆன் : 18:56
♣ ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற முயற்ச்சிப்பவர்கள்
(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
அல் குர்ஆன் : 2:9
♣ அறிவாற்றலைக் கொண்டு சிலாகித்துக் பேசப்படுவார்கள்
அவர் பெரிய மேதை .. என்ன அறிவு ,, எப்படி வாதம் செய்கிறார், அவருடன் விவாதம் செய்ய யாருக்கு முடியும், அவரின் மனன ஆற்றல் மிக்க சக்தி வாய்ந்தது, எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு அழைக்கிறார் அவரின் பேச்சால் எத்தனை பேர் இஸ்லாத்தை தழுவுகிறார்கள், என்று அவரின் வழிகெட்ட கொள்கைகள், அவரின் நச்சு கருத்துக்களை அறியாமல் வெளித்தோற்றத்தை பார்த்து விட்டு சில அப்பாவி பாமர மக்கள் அவரை திறமையாக பேசுபவர்கள், அப்படி என்றால் இந்த ஹதீஸ் உங்களுக்கு தான்.
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள் : ஒருவரைப் பற்றி 'அவரின் அறிவுதான் என்ன!!! ; அவரின் விவேகம் தான் என்ன!!! அவரின் வீரம் என்ன!! என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதரின் இதயத்தில் கடுகளவு கூட ஈமான் இருக்காது.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஹுதைஃபா ரலியல்லாஹு
நூல்: ஸஹீஹுல் புகாரி 7086
♦ இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?.
அல்குர்ஆன் 63:4
♣ அறிவீனர்களை தலைவர்களாக ஆக்குவார்கள்
”நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்” இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
ஷஹீஹ் புகாரி 100, முஸ்லிம் 2673
♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : மேலும், வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடன்ம் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவராக ஆகுவார்கள்.
நூல்: புகாரி
♣ புதிது புதிதாக என்னென்ன குழப்பங்களை உருவாக்கியவர்கள்
இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்“ நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் “அல்கவ்ஸர்“) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்“ என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், “இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது“ என்று கூறுவான்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு)
ஷஹீஹ் புகாரி 7049
♦ நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:42)
ஆகவே இந்த கட்டுரையின் நோக்கம் குர்ஆன் ஹதீஸுக்கு முறனான விளக்கங்களையும், கருத்துக்களையும் பேசிக்கொண்டியிருக்கும் வழி கெட்ட வஹ்ஹாபிகளையும் வழிகேடர்களையும் நமது முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அடையாளம் காட்டுவதாகும்.
எனவே உங்களுடைய ஈமானை அசுத்தப்படுத்தக்கூடிய அழிக்க்கூடிய சில விஷ கிருமிகளை நம் சமூதாயத்திற்க்கு அடையாளம் காண்பித்து அவர்களினதும் உங்களினதும் ஈமானை பாதுகாக்கும் முயற்ச்சிப்பது நம்மீது கடமையாகும்.
அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு தெளிவாக்குவதற்கும் உங்களுக்கு முன்னிருந்த (நல்ல) வர்களின் நேரான வழிகளில் உங்களை வழி நடத்துவதற்கும், உங்களுடைய தவ்பாவை ஏற்றுக்கொள்வதற்கும் விரும்புகிறான். (அல் குர்ஆன் 4:26)
எனவே இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் ஈமானை பாதுக்காக்க முயற்சிப்போமாக. ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமின் சகோதரன் ஆவான், ஆதலால் தன் சகோதரனின் ஈமானை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.
நாம் அனைவரும் கடைசி வரை நேரான இஸ்லாமிய கொள்கையாகிய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஸஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்கள் சென்ற சிராத்துல் முஸ்தகீம் வழியில் செல்வோமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.