MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​ஹதீஸ்களை மறுப்பவர்களின் நிலை என்ன?

​ 

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் - குர்ஆன் பகுத்தறிவு, மனசாட்சி, விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது என்று ஹதீஸ்களை மறுப்பவர்களின் நிலை என்ன?


♣ ஹதீஸ்களில் மோசடிகள் செய்யும் வழிகெட்ட வஹ்ஹாபிகள்

வழிகெட்ட வஹ்ஹாபிகளின் கொள்கைகளுக்கு சார்பாக நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி அவர்களின் பொன்மொழிகள் அமைய வில்லையென்றால் அந்த ஸஹீஹான ஹதீகள் குர்ஆனுக்கு முரண்படுகின்றது, தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது. ஆகவே குர்ஆனுக்கு - பகுத்தறிவிற்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்றெல்லாம் அந்த ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார், அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாது என்று ஸஹீஹான சில ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்து இலகுவாக ஒதுக்கிவிட்டு கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.


​​இதற்கு அடிப்படை காரணம் 'சரியான முறையில் ஹதீஸ்களை ஆய்வு செய்யாமலும் ஹதீஸ் கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும், இமாம்களையும் பின்பற்றாததாகும்'. வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் ஹதீஸ்களை மறுப்போர் ஆரம்ப காலந்தொட்டே உருவாகி விட்டனர். சிலர் ஹதீஸ்களை முழுமையாக மறுக்கின்றனர். இவர்கள் இன்று வரை “அஹ்லுல் குர்ஆன்” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலர் குர்ஆனில் இல்லாத புதிய சட்டங்களைத் தரும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் “ஆஹாத்” எனும் வகை சார்ந்த ஹதீஸ்களில் ஹலால், ஹராம், அகீதா பற்றிப் பேசும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் அல்குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் சிலது முரண்படுகின்றது என்று ஹவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்றோர் இந்த வகையில் பல்வேறு ஹதீஸ்களை மறுத்து வந்தனர். நவீனகால வழிகெட்ட வஹ்ஹாபி மத குருமார்களில் பலரும் இந்தத் தவறில் வீழ்ந்துள்ளனர்.

ஆகவே ஸஹீஹான ஹதீஸை மறுப்பவர் காஃபிராகி விடுவாரா? சிலர் ஸஹீஹான கிரந்தங்களில் பதிவு செய்யப்பட செய்திகளை குறிப்பாக புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் வரும் சில ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு பகுத்தறிவிற்கு முரண்படுவதாக் கூறி அவற்றை மறுக்கின்றனர். இவர்களின் நிலை என்ன? இவர்கள் காஃபிராகி விடுவார்களா? என்பது பற்றி கீழே உள்ள ஆதாரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


​​

♣ இஸ்லாமிய சட்டவாக்கத்தின் இரண்டாவது மூலாதாரமாகிய நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் ஸுன்னாவும் வஹீயா?

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னா இஸ்லாமிய சட்டவாக்கத்தின் இரண்டாவது மூலாதாரமாகும். அல்குர்ஆனைப் பொன்றே அதுவும் வஹீயாகும். “அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து வஹீயே அன்றி வேறில்லை”. (அல்குர்ஆன் 53:3 – 4)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது பேச்சுக்கும் அதாவது அவர்களது ஹதீஸுக்கும் மற்றும் அவர்களது சட்டங்களுக்கும் முஃமின்கள் பூரணமாகக் கட்டுப்பட வேண்டுமென்று அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது ஹதீஸை கேட்டு அதை ஏற்காமல் மறுப்பவனிடம் அறவே ஈமான் இல்லை என்று தன்மீது சத்தியமிட்டு அல்லாஹ் கூறியுள்ளான்.

(நபியே!) உம் இரட்சகன் மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமாயாகக் கட்டுப்படும்வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

எனவேதான், பொதுவாக ஸுன்னாவின் ஆதாரத் தன்மையை மறுப்போர், அல்லது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸை, அது பெருமானாரின் கூற்றுத்தான் என்பதை அறிந்த நிலையில் அதனை மறுப்போர் காஃபிர்களாகக் கருதப்படுவர் என்பதில் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.


​​

♣ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவனின் நிலை என்ன?

♦ قال السيوطي رحمه الله :

” اعلموا رحمكم الله أنَّ مَن أنكر كون حديث النبي صلى الله عليه وسلم – قولا كان أو فعلا بشرطه المعروف في الأصول – حجة كفر ، وخرج عن دائرةالإسلام ، وحشر مع اليهود والنصارى أو من شاء من فرق الكفرة ” انتهى. “مفتاح الجنة في الاحتجاج بالسنة” (ص/14)

இமாம் சுயூத்தீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள்:

“அறிந்து கொள்ளுங்கள்! உஸுலலுல் ஹதீஸில் அறியப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக வந்த ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளத்தக்கது என்பதை மறுப்பவர் காஃபிராகி விடுவார். இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு அவர் வெளியேறி விடுவார். மேலும் அவா; யூதர்களுடன் அல்லது கிறிஸ்வதவர்களுடன் அல்லது அவர் நாடிய நிராகரிக்கும் கூட்டத்துடன் மறுமையில் எழுப்பப்படுவார்.” (நூல் மிஃப்தாஹுல் ஜன்னா பக்-14)

♦ وقال العلامة ابن الوزير رحمه الله :

” التكذيب لحديث رسول الله صلى الله عليه وسلم مع العلم أنه حديثه كفر صريح ” انتهى. “العواصم والقواصم” (2/274)

அல்லாமா இப்னுல் வஸீர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “ ரஸுல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது ஹதீஸ்தான் என்று அறிந்த நிலையில் ஒருவர் ஹதீஸை பொய்ப்படுத்துவது தெளிவான குஃப்ர் ஆகும்.” (நூல் அல் அவாஸிம் வல்கவாஸிம் 2⁄274)

♦ قال الإمام إسحاق بن راهويه رحمه الله ” من بلغه عن رسول الله صلى الله عليه وسلم خبرٌيُقرُّ بصحته ثم رده بغير تقية فهو كافر” انتهى.

இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறாற்கள். “ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் ஒரு செய்தி கிடைத்து, அது ஸஹீஹானது என்று ஏற்றுக் கொண்ட பின் தக்வா இன்றி யார் அதை மறுக்கின்றாரோ அவா; காஃபிராவார்.

♦ جاء في “فتاوى اللجنة الدائمة :

” الذي ينكر العمل بالسنة يكون كافرا ؛ لأنه مكذب لله ولرسوله ولإجماع المسلمين ” انتهى. “المجموعة الثانية” (3/194)“

அல்லஜ்னா அத்தஇமா (சஊதி ஃபத்வா வழங்கும் சபை) பின்வருமாறு ஃபத்வா வழங்கியுள்ளது. “சுன்னாவைக் கொண்டு அமல் செய்ய மறுப்பவார் காபிராவார். ஏனெனில் அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மற்றும் முஸ்லிம்களது ஏகோபித்த முடிவையும் பொய்ப்படத்துவராவார்” ( ஃபத்வா இரண்டாவது தொகுதி 2⁄194)

♦ஒரு முனாபிகான ராபிழி, (ஆதாரபூர்வமாக ) அறிவிக்கப்படும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செய்திகளையும் தனியான ஆதாரமாகக் கொள்ளத் தேவையிலை, குர்ஆனிலேயே விசேடமாக ஆதாரம் கொள்ள வேண்டும், எனக்கூறி அதற்கு சான்றாக "என்னிடம் இருந்து ஒரு சைசெய்தி வந்தால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிடுங்கள், அதற்கான அடிப்படை குர்ஆனில் இருந்தால் எடுங்கள், இல்லை என்றால் தட்டி விடுங்கள்" இக்கூற்றின் அடிப்படையையும், அதன் பாத்திலான நிலையையும், அது மிகப்பெரிய அழிவுகளில் உள்ளது என்பதையும், விளக்க விரும்புகின்றேன்.


​​அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் தெரிந்து கொள்ளுங்கள், நபியின் சொல்லோ, செயல , ஹதீஸ் கலையின் உஸூலில் அறியப்படும் நிபந்தனைகளுடன் வரும் செய்தி ஹதீஸ் என்பதையும், அது ஆதாரம் என்பதையும் யார் மறுக்கின்றானோ அவன் காபிராகும். அவன் இஸ்லாமிய வரையறையை விட்டும் வெளியேறிவிட்டான், யஹூதி, நஸாராக்களுடனேயே எழுப்பப்படுவான். இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி (நூல் மிப்தாஹுல் ஜன்னா 1/27)

இன்று வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முனைந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலையில் இருந்து இறங்கி வந்து அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என பல காரணங்கள் கூறி ஹதீஸ்களை மறுக்கும் நிலை தோன்றிவிடுகின்றது.


​​எனவே, குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பது ஆபத்தானது அதே வேளை வழிகேடர்களின் கொள்கையாகத் திகழ்ந்துள்ளது. அந்த வழியில் போனால் எத்தகைய விபரீதமான கருத்துக்கள் ஏற்படும் என்பதை இந்தக் கட்டுரையூடாக புரிந்து கொள்ள உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்