MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பித்அத் எல்லாம் வழிகேடாகுமா? (தொடர் - 3)


மௌலவீ  K R M. ஸஹ்லான் (றப்பானீ)   BBA-Hons


♣ நபி ﷺ அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகுமா?


(3997) ـ حدّثني إِبراهيمُ بن موسى أخبرَنا هشامُ بن يوسف عن مُعمرٍ عن الزُّهريِّ عن عمرِو بن أبي سُفيانَ الثقَفيِّ عن أبي هريرةَ رضيَ اللّه عنه قال: «بَعثَ النبيُّ صلى اللـه عليه وسلّم سَرِيةً عَيناً، وأمَّرَ عليهم عاصمَ بن ثابت ـ وهو جدُّ عاصم بن عمرَ بن الخطاب ـ فانطلَقوا، حتى إِذا كان بينَ عُسفانَ ومكةَ ذُكِروا لحيٍّ من هُذَيل يقال لـهم بنو لِحيانَ فتَبِعوهم بقريبٍ من مائةِ رامٍ فاقتصُّوا آثارَهم، حتى أَتوا منزِلاً نزلوه، فوجَدوا فيه نَوَى تمرٍ تزَوَّدوهُ من المدينة، فقالوا: هذا تمرُ يَثربَ، فتبِعوا آثارَهم حتى لحقوهم، فلما انتهى عاصمٌ وأصحابه لجأُوا إلى فَدْفَدٍ، وجاءَ القومُ فأحاطوا بهم فقالوا: لكُم العَهْدُ والميثاقُ إن نزَلتُم إلينا أن لا نقتُلَ منكم رجُلاً. فقال عاصمٌ: أما أنا فلا أنزِلُ في ذمةِ كافر، اللـهمَّ أخبرْ عنّا نبيَّك. فقاتلوهم حتى قَتلوا عاصماً في سبعةِ نَفرٍ بالنَّبل، وبقي خُبَيبٌ وزيدٌ ورجلٌ آخر، فأعطَوهُم العهدَ والميثاقَ، فلما أعطَوهُم العهدَ والميثاق نزَلوا إليهم، فلما استمكَنوا منهم حلوا أوتارَ قِسِيِّهم فربطوهم بها، فقال الرجلُ الثالثُ الذي معهما: هذا أولُ الغَدر، فأبى أن يَصحَبَهم، فجرَّروهُ وعالجوهُ على أن يَصحبَهم فلم يَفعلْ، فقتَلوه، وانطلقوا بخُبَيب وزيد حتى باعوهما بمكة، فاشترى خبيباً بنو الحارثِ بن عامر بن نَوفل، وكان خبيبٌ هوَ قتلَ الحارث يومَ بدرٍ، فمكثَ عندَهم أسيراً، حتى إِذا أجمَعوا قتلـه استعارَ موسى من بعضِ بناتِ الحارثِ ليستحدَّ بها، فأعارتهُ، قالت: فغفَلت عن صبيٍّ لي، فدرجَ إِليه حتى أتاهُ فوَضعهُ على فَخذِه، فلما رأيته فزِعت فَزعةً عرفَ ذاك مني، وفي يدهِ الموسى، فقال: أتخشينَ أن أقتلـهُ؟ ما كنتُ لأفعل ذلِك إن شاء اللّه. وكانت تقولُ: ما رأيت أسيراً قطُّ خَيراً من خبيب، لقد رأيتهُ يأكل من قِطفِ عِنَبٍ وما بمكةَ يومئذٍ ثمرة، وإنه لموثقٌ في الحديد، وما كان إلا رزقٌ رَزَقهُ اللّه؛ فخرَجوا

به منَ الحرَم ليقتلوه، فقال: دَعوني أصلِّي رَكعتَين. ثمَّ انصرَفَ إليهم فقال: لولا أن تروا أن ما بي جَزَعٌ من الموت لَزدت، فكان أولَ من سنَّ الرَّكعتَين عندَ القتل هو. ثمَّ قال: اللـهمَّ أحصِهمْ عَدَداً. ثم قال:

وَلَسْتُ ما أبالي حينَ أُقَتلُ مسلما

على أيّ شِقٍّ كان للّهِ مَصَرعيٍّ

وذلكَ في ذاتِ الإِلـهِ وإن يشَأ

يُباركْ على أوصالِ شِلوٍ مُمزَّع

ثم قامَ إِليهِ عُقبة بن الحارث فقتلـه. وبعثَتْ قريشٌ إِلى عاصم ليُؤْتوا بشيء من جَسَدِه يعرفونه، وكان عاصم قَتلَ عظيماً من عظمائهم يومَ بَدر، فبعثَ اللّه عليهِ مثلَ الظُّلَّةِ من الدَّبْرِ فحمَتْهُ من رُسُلِهم، فلم يَقدِروا منه على شيء».


இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பத்துப் பேர்கள் கொண்ட ஒரு குழுவினரை உளவுப்படையாக அனுப்பி வைத்தார்கள். உமர் இப்னு கத்தாபுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரியை உளவுப் படைக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள 'ஹத்ஆ' என்னுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூலிஹ்யான் என்றழைக்கப்படும் ஒரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற கிட்டத் தட்ட இருநூறு வீரர்களை தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி (அவர்களைத் தேடியபடி) சென்றனர். (வழியில்) உளவுப்படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று (அவற்றின் கொட்டைகளைப் போட்டு)விட்டுச் சென்ற இடத்தைக் கண்டனர். உடனே, 'இது யத்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம் பழம்" என்று கூறினர். எனவே, அவர்களின் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம்(ரலி) அவர்களும் அவர்களின் சகாக்களும் கண்டபோது, உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றனர். அவர்களை பனூ லிஹ்யான் குலத்தினர் சூழ்ந்தனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம், 'நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்" என்று கூறினார்கள். உளவுப் படையின் தலைவரான ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஒரு நிராகரிப்பாளனின் பொறுப்பில் (என்னை ஒப்படைத்தவனாக இந்தக் குன்றிலிருந்து) கீழே இறங்க மாட்டேன் இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்து விடு" என்று பிரார்த்தித்தார்கள். எதிரிகள் அவர்களின் மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்றனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளிடம் உறுதிமொழியும் வாக்கும் பெற்று இறங்கினார்கள். அவர்கள் அன்சாரித் தோழர் குபைப் அவர்களும், இப்னு தசினா அவர்களுக்கு மற்றுமொருவரும் ஆவர். இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர், 'இது முதலாவது நம்பிக்கை துரோகம் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வர மாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு ஒரு (நல்ல பாடமாக அமைந்துள்ளனர்" என்று கூறினார். உடனே, அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள். பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர். இது பத்ருப் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் வாங்கினர். அந்தக் குலத்தின் தலைவர் ஹாரிஸ் இப்னு ஆமிர் என்பவரை குபைப் அவர்கள் பத்ருப் போரில் கொன்று விட்டிருந்தார்கள். எனவே, (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் அவர்கள் கைதியாக இருந்தார்கள்.

உபைதுல்லாஹ் இப்னு இயாள் கூறினார்கள் என அறிவிப்பாளர் ஸுஹ்ரீ கூறினார்.


ஹாரிஸின் மகள் என்னிடம் கூறினார்:

குபைப் அவர்களைக் கொல்வதற்காக (எங்கள் குடும்பத்தார்) ஒன்று கூடியபோது, குபைப் தேவையற்ற முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக் கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என்னுடைய குழந்தை ஒருவனை அவர் கையிலிலெடுத்தார். அவன் அவரிடம் சென்றபோது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக் கத்தி இருக்க, தம் மடியின் மீது அவனை உட்கார வைத்திருப்பதை கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந்தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்து கொண்டார். உடனே, 'நான் இவனைக் கொன்று விடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை....மேலும், ஹாரிஸின் மகள், 'அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த இரணமாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான்" என்று கூறி வந்தார். (என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.)


(தொடர்ந்து அறிவிப்பாளர் கூறுகிறார்:)

அவர்கள் குபைப் அவர்களைக் கொல்வதற்காக ஹரம் (எனும் இரத்தம் சிந்துவது அனுமதிக்கப்படாத புனிதப்) பகுதியிலிருந்து 'ஹில்' (எனும் புனித எல்லைக்கு வெளியே இருக்கும் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றபோது அவர்களிடம் குபைப் அவர்கள், 'என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள்" என்று கூறினார்கள். (தொழுது முடித்து) பிறகு, 'நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்" என்று கூறிவிட்டு, 'இறைவா! இவர்களை எண்ணி வைத்துக் கொண்டு (ஒருவர் விடாமல்) பழி வாங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். மேலும், 'நான் முஸ்லிமாகக் கொல்லப்படுவதால் நான் எதைப் பற்றியும் பொருட்படுத்தப் போவதில்லை. எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது கூட (தன்) அருள் வளத்தைப் பொழிவான்" என்று கவி பாடினார்கள். பின்னர், குபைப் அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று. ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு (அவர்களின் நிலைகுறித்து தன் தூதருக்குத் தெரிவித்து)விட்டான். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்கு குறைஷிக்குல நிராகரிப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர்தான் என்று) அவரை அடையாளம் தெரிந்து கொள்ள அவரின் அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும் படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள். ஏனெனில், ஆஸிம் அவர்கள் பத்ருப் போரின்போது குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள். அப்போது ஆஸிம் அவர்களுக்காக (அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும் படி) அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷிகளின் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. எனவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.


புஹாரீ-3997,அபூதாவூத்-3045, அஹ்மத்-8053

அறிவிப்பு- அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு.



மேற்குறிப்பிடப்பட்ட சம்பவத்தில் குபைப்றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு றக்அத்கள் தொழுதார்கள். இவ்வாறு ஒருவர் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு றக்அத்கள் தொழவேண்டும் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிடவில்லை.ஆயினும் குபைப்றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்படு வதற்கு முன் இரண்டு றக்அத்கள் தொழுதார்கள். அவர்கள் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு றக்அத்கள் தொழுததை கேள்வியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை கண்டிக்கவில்லை.



سنن ابن ماجه (746) ـ حدّثنا عُمَرُ بْنُ رَافِعٍ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ بِلاَلٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ يُؤْذِنُهُ بِصَلاَةِ الْفَجْرِ. فَقِيلَ: هُوَ نَائِمٌ. فَقَالَ: الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. فَأُقِرَّتْ فِي تَأْذِينِ الْفَجْرِ. فَثَبَتَ الأَمْرُ عَلَى ذلِكَ [60])


பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அதிகாலைத் தொழுகைக்காக வந்தார்கள் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. அப்போது பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்


الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ


“தூக்கத்தைவிட தொழுகை சிறந்தது” “தூக்கத்தைவிட தொழுகை சிறந்தது” என்று சொன்னார்கள். அது அதிகாலைத் தொழுகைக்கான அதானில் தரிபாடானது.


இப்னு மாஜஹ்-746

அறிவிப்பு - பிலால் றழியல்லாஹு அன்ஹு



மற்றொரு அறிவிப்பில்


1081 - حدثنا محمد بن علي الصائغ المكي ثنا يعقوب بن حميد ثنا عبد الله بن وهب عن يونس بن يزيد عن الزهري عن حفص بن عمر عن بلال أنه : أتى النبي صلى الله عليه وسلم يؤذنه بالصبح فوجده راقدا فقال : الصلاة خير من النوم مرتين قال النبي صلى الله عليه وسلم : ( ما أحسن هذا يا بلال اجعله في أذانك ) عبد الله بن معقل بن مقرن المزني عن بلال ( [61])


பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அதிகாலைத் தொழுகைக்காக வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்


الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ


“தூக்கத்தைவிட தொழுகை சிறந்தது” “என்று இரண்டு முறை சொன்னார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “பிலாலே இது மிக அழகாக இருக்கிறது. இதை உனது அதானில் ஆக்கிக் கொள்" என்று சொன்னார்கள்.


தப்றானீ-1081

அறிவிப்பு-பிலால்றழியல்லாஹு அன்ஹு



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லாத ஒரு வசனத்தை பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன போது அதை அதானில் சேர்த்துக்கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப்பார்த்து


الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ


என்று சொல்லவேண்டும் என இதற்கு முன்னர் பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லவில்லை.




صحيح مسلم (1308) ـ وحدّثني زُهَيْرُ بْنُ حَرْبٍ. حَدَّثَنَا عَفَّانُ. حَدَّثَنَا حَمَّادٌ. أَخْبَرَنَا قَتَادَةَ وَ ثَابِتٌ وَحُمَيْدٌ عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ. فَقَالَ: الْحَمْدُ للّهِ حَمْداً كَثِيراً طَيِّباً مُبَارَكاً فِيهِ. فَلَمَّا قَضَى رَسُولُ اللّهِ صَلاَتَهُ قَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟» فَأَرَمَّ الْقَوْمُ. فَقَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِهَا؟ فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْساً» فَقَالَ رَجُلٌ: جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهَا. فَقَالَ: «لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكاً يَبْتَدِرُونَهَا. أَيُّهُمْ يَرْفَعُهَا


ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் பீஹி" (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மீண்டும்), "உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை" என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்" என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்" எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்கள்.


முஸ்லிம்-1308

அறிவிப்பு- அனஸ்றழியல்லாஹு அன்ஹு



தொழுகைக்கு ஒருவர் மூச்சிறைக்க (விரைந்து) வந்தால் அவர், "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் பீஹி" என்று சொல்லவேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கட்டளையிடவுமில்லை அவர்கள் செய்து காட்டவுமில்லை. அதே நேரம் அவ்வாறுசொன்ன மனிதரை பாராட்டினார்கள்.


صحيح مسلم (1309) ـ حدّثنا زُهَيْرُ بْنُ حَرْبٍ. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ. أَخْبَرَنِي الْحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللّهِ بْنِ عُتَبَةَ عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللّهِ . إِذْ قَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: اللّهُ أَكْبَرُ كَبِيراً. وَالْحَمْدُ للّهِ كَثِيراً. وَسُبْحَانَ اللّهِ بُكْرَةً وَأَصِيلاً. فَقَالَ رَسُولُ اللّهِ صلى الله عليه وسلم: «مَنِ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا؟» قَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَنَا. يَا رَسُولَ اللّهِ قَالَ: «عَجِبْتُ لَهَا. فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ». قَالَ ابْنُ عُمَرَ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللّهِ يَقُولُ ذلِكَ



நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் "அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கதீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா" (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், "நான்தான் அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.


முஸ்லிம்-1309

அறிவிப்பு- இப்னு உமர்றழியல்லாஹு அன்ஹு



தொழுகையின்போது "அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கதீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா" என்றுசொல்லவேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கட்டளையிடவுமில்லை அவர்கள் செய்து காட்டவுமில்லை. அதே நேரம் அவ்வாறுசொன்ன மனிதரை பாராட்டினார்கள்.




وعن سيدنا جابر بن عبدالله رضي الله عنه قال: ( أهلَّ رسول الله صلى الله عليه وآله وسلم فذكر التلبية مثل حديث ابن عمر قال : والناس يزيدون ذا المعارج ونحوه من الكلام والنبي صلى الله عليه وآله وسلم يسمع فلا يقول لهم شيئا)( [64]).


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழமையான தல்பியா சொன்னார்கள் மனிதர்கள் “தல் மஆறிஜ்” என்பது போன்றதை மேலதிகமாகச் சொன்னார்கள். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கேட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு எதுவும்சொல்லவில்லை.


முஸ்லிம்-1813, அபூதாவூத் 1814

அறிவிப்பு- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் றழியல்லாஹு அன்ஹு



இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவிக்காத சொற்களை ஸஹாபாக்கள் தல்பியாவில் சேர்த்து சொன்னது அவர்கள் காட்டாத வழிமுறையாகும். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுக்கவில்லை



صحيح مسلم (2903) ـ حدّثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ. وَ إِسْحَـقُ بْنُ إِبْرَاهِيمَ. جَمِيعاً عَنْ حَاتِمٍ. قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ الْمَدَنِيُّ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ، قَالَ: دَخَلْنَا عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللّهِ. فَسَأَلَ عَنِ الْقَوْمِ حَتَّى انْتَهَى إِلَيَّ. فَقُلْتُ: أَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ. فَأَهْوَى بِيَدِهِ إِلَى رَأْسِي فَنَزَعَ زِرِّي الأَعْلَى. ثُمَّ نَزَعَ زِرِّي الأَسْفَلَ. ثُمَّ وَضَعَ كَفَّهُ بَيْنَ ثَدْيَيَّ وَأَنَا يَوْمَئِذٍ غُلاَمٌ شَابٌّ.فَقَالَ: مَرْحَباً بِكَ. يَا ابْنَ أَخِي سَلْ عَمَّا شِئْتَ. فَسَأَلْتُهُ. وَهُوَ أَعْمَى. وَحَضَرَ وَقْتُ الصَّلاَةِ. فَقَامَ فِي نسَاجَةٍ مُلْتَحِفاً بِهَا. كُلَّما وَضَعَهَا عَلَى مَنْكِبِهِ رَجَعَ طَرَفَاهَا إِلَيْهِ مِنْ صِغَرِهَا. وَرِدَاؤُهُ إِلَى جَنْبِهِ، عَلَى الْمِشْجَبِ. فَصَلَّى بِنَا. فَقُلْتُ: أَخْبِرْنِي عَنْ حَجَّةِ رَسُولِ اللّهِ . فَقَالَ بِيَدِهِ. فَعَقَدَ تِسْعاً. فَقَالَ: إِنَّ رَسُولَ اللّهِ مَكَثَ تِسْعَ سِنِينَ لَمْ يَحُجَّ. ثُمَّ آذنَ فِي النَّاسِ فِي الْعَاشِرَةِ أَنَّ رَسُولَ اللّهِ حَاجٌّ. فَقَدِمَ الْمَدِينَةَ بَشَرٌ كَثِيرٌ. كُلُّهُمْ يَلْتَمِسُ أَنْ يَأْتَمَّ بِرَسُولِ اللّهِ . وَيَعْمَلُ مِثْلَ عَمَلِهِ. فَخَرَجْنَا مَعَهُ. حَتَّى أَتَيْنَا ذَا الْحُلَيْفَةِ. فَوَلَدَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ. فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللّهِ . كَيْفَ أَصْنَعُ؟ قَالَ: «اغْتَسِلِي. وَاسْتَثْفِرِي بِثَوْبٍ وَأَحْرِمِي» فَصَلَّى رَسُولُ اللّهِ فِي الْمَسْجِدِ. ثُمَّ رَكِبَ الْقَصْوَاءَ. حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ نَاقَتُهُ عَلَى الْبَيْدَاءِ. نَظَرْتُ إِلَى مَدِّ بَصَرِي بَيْنَ يَدَيْهِ. مِنْ رَاكِبٍ وَمَاشٍ. وَعَنْ يَمِينِهِ مِثْلَ ذلِكَ. وَعَنْ يَسَارِهِ مِثْلَ ذَلِكَ. وَمِنْ خَلْفِهِ مِثْلَ ذَلِكَ. وَرَسُولُ اللّهِ بَيْنَ أَظْهُرِنَا. وَعَلَيْهِ يَنْزِلُ الْقُرْآنُ. وَهُوَ يَعْرِفُ تَأْوِيلَهُ. وَمَا عَمِلَ بِهِ مِنْ شَيْءٍ عَمِلْنَا بِهِ. فَأَهَلَّ بِالتَّوْحِيدِ: «لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ. لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ. إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ. وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ». وَأَهَلَّ النَّاسُ بِهَذَا الَّذِي يُهِلُّونَ بِهِ. فَلَمْ يَرُدَّ رَسُولُ اللّهِ عَلَيْهِمْ شَيْئاً مِنْهُ. وَلَزِمَ رَسُولُ اللّهِ تَلْبِيَتَهُ. الـــخ


நாங்கள் (ஒரு முறை) ஜாபிர் பின் அப்தில்லாஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் (என்னுடன் வந்த) மக்களைப் பற்றி விசாரித்துவிட்டு இறுதியில் என்னைப் பற்றி விசாரித்தார்கள். "நான் ஹுசைன் பின் அலீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் பேரன் முஹம்மத் பின் அலீ" என்று (என்னை) அறிமுகப்படுத்தினேன். உடனே ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், (அன்பொழுகத்) தமது கையை எனது தலையை நோக்கி நீட்டி, (பிறகு கையைக் கீழே கொண்டு சென்று) எனது அங்கியின் மேல் பொத்தானையும், அடுத்து கீழ்ப் பொத்தானையும் கழற்றி, எனது நெஞ்சில் கையை வைத்தார்கள். அப்போது நான் இளவயதுச் சிறுவனாக இருந்தேன்- மேலும், "என் சகோதரர் மகனே, வருக. நீர் விரும்பியதைப் பற்றி என்னிடம் கேள்" என்றார்கள். அவர்களிடம் சில விளக்கங்களைக் கேட்டேன். -அப்போது ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்பார்வையற்றவராய் இருந்தார்கள்.- தொழுகை நேரம் வந்ததும் அவர்கள் தமது மேல் துண்டை போர்த்திக்கொண்டு எழுந்தார்கள். அவர்கள் அதைத் தமது தோள்மீது போடப் போட, அது சிறியதாக இருந்ததால் தோளில் உட்காராமல் அதன் இரு ஓரங்களும் கீழே விழுந்துகொண்டிருந்தன. அப்போது அவர்களது மேல்சட்டை அருகிலிருந்த ஒரு கொக்கியில் மாட்டப்பெற்றிருந்தது. பிறகு அவர்கள் (மேல்சட்டை அணியாமலேயே மேல்துண்டுடன்) எங்களுக்குத் தொழுவித்தார்கள்.

பிறகு அவர்களிடம் நான், "அல்லாஹ் வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒன்பது" எனத் தமது விரலால் சைகை செய்து காட்டிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மதீனாவிற்குச் சென்ற பின்) "ஒன்பது" ஆண்டுகள் ஹஜ் (கடமையாகததால் அதை) நிறைவேற்றாமலேயே தங்கியிருந்தார்கள். பத்தாவது ஆண்டில் மக்களிடையே "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இந்த ஆண்டில்) ஹஜ் செய்யப்போகிறார்கள்" என அறிவிப்புச் செய்யவைத்தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே தாமும் (ஹஜ்) கிரியைகளைச் செய்யும் நோக்கத்துடன் ஏராளமான மக்கள் மதீனாவிற்கு(த் திரண்டு) வந்தனர்.


பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். "துல்ஹுலைஃபா" எனும் இடத்திற்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, (அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு முஹம்மத் பின் அபீபக்ர் றழியல்லாஹு அன்ஹு பிறந்தார். உடனே அஸ்மா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களை) அனுப்பி "நான் எப்படி ("இஹ்ராம்") கட்ட வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீ குளித்துவிட்டு, (பிரசவப்போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு, "இஹ்ராம்" கட்டிக்கொள்" என்று கூறியனுப்பினார்கள்.


பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிருந்த (துல்ஹுலைஃபா) பள்ளிவாசலில் தொழுதுவிட்டு, "கஸ்வா" எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைஃபாவிற்கு அருகிலுள்ள) "அல்பைதாஉ" எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரானபோது நான் பார்த்தேன்; எனது பார்வையெட்டும் தூரத்திற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னாலும், வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும், பின்னாலும் (ஏராளமான) மக்கள் வாகனத்திலும் கால்நடையாகவும் வந்து குழுமியிருப்பதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு நடுவில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்குக் குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்றன. அவற்றின் விளக்கத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதை நாங்களும் அப்படியே செய்தோம்.


அவர்கள் "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்துவிட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவருமில்லை)" என்று ஏகத்துவ உறுதிமொழியுடன் தல்பியாச் சொன்னார்கள். மக்கள், தாம் கூறிவருகின்ற முறையில் (சற்று கூடுதல் குறைவு வாசகங்களுடன்) தல்பியா கூறினர். ஆனால், அதில் எதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து தமது தல்பியாவையே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.


முஸ்லிம்-2903



இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தல்பியாவை கவனித்து அதேபோல் ஸஹாபாக்கள் தல்பியா சொல்லாமல் கூடுதல் குறைவு வாசகங்களுடன் தல்பியா கூறியுள்ளனர். இது அவர்கள் காட்டாத வழிமுறையாகும். ஆனால் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுக்கவில்லை


(தொடரும்....)

தொடர் 4

← தொடர் 2