MAIL OF ISLAM

Knowledge & Wisdom



786 என்றால் என்ன? 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் '786' என்றால் என்ன? இதற்கு இஸ்லாத்தில் உள்ள முக்கியத்துவம் என்ன?

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

786 என்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித முக்கியத்துவமோ கிடையாது, இது இஸ்லாமிய அடிப்படையில் 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதற்கு பகரமாக 786 தை எழுவது பித்அத் எனவும் தவறான ஒரு செயல் எனவும் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சட்டங்களை நமது இமாம்கள் பிரித்து எடுத்து, இஜ்மாஃ (ஏகோபித்த முடிவு), கியாஸ் (அனுமானம்) மூலமும் மக்களுக்கு தந்த மார்க்கத்தை சட்டங்களை எளிமையாக பின்பற்றாமல் இமாம்களை, அவர்களின் விளக்கங்களை புரகணித்து வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள் வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

♦ ஒரு இணையதளத்தில், 786 என்று போடுவது பித்அத் என்றும், சுத்தமில்லாத, மரியாதைக்குறைவாக போடுவதைத் தவிர்க்க அவ்வாறு போடுவதாக சொல்வது ஏற்புடையது அல்ல. ஏனெனில், பல்கீஸ் அம்மையாருக்கு சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாத்தை எடுத்துக்கூறும் முகமாக கடிதம் எழுதும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுதினார்கள் என்றும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு தரப்பினர்களுக்கும் கடிதம் எழுதும்போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியே ஆரம்பித்தார்கள் என்றும் ஆகவே 786 என்று போடுவது கூடாது பித்அத் என்றும் இருப்பதைப் பார்க்க நேர்ந்தது.

♣ இதற்கு தாங்கள் தரும் விளக்கம் பின்வருமாறு :

முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றோ பிஸ்மில்லாஹி என்றோ கூறித் துவக்கவேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பல பொன்மொழிகள் மூலம் நமக்கு தெரிகின்றது. இந்த முறையை இஸ்லாமியர் அனைவரும் செயல்படுத்தியும் வருகின்றனர்.


பிற்காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கும் கடிதத் தொடர்புகள் பரவலாக்கப்பட்டன. தங்கள் கடிதங்களில் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று எழுதினால் அதற்கு மரியாதை செய்யப்படாது. தூய்மையற்ற பலரது கைகளில் அது கிடைக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டும், பலரின் கால்களில் மிரிபடாமல் இருப்பதற்காகவும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதுவதற்கு சில முஸ்லிம்கள் தயங்கவும் செய்தனர். இதற்கு மாற்று வழி ஒன்றை யோசித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்தான் இஸ்லாத்தில் உள்ள அப்ஜத் கணக்கு பற்றிய விபரம் நமது கண்ணுக்குத் தென்பட்டது.


​​

♣ அப்ஜத் கணக்கு தோன்றியது எவ்வாறு?

அரபு எழுத்துக்களுக்கு குர்ஆன், ஹதீதுகளிலிருந்து சட்டங்களை நமது இமாம்கள் பிரித்து எடுத்து, இஜ்மாஃ (ஏகோபித்த முடிவு), கியாஸ் (அனுமானம்) மூலமும் மக்களுக்கு தந்து மார்க்கத்தை எளிமையாக பின்பற்ற இமாம்கள் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினார்கள்.

அப்ஜத், ஹுவ்வஸ், ஹுத்தி, கலிமன், ஷங்மஸ், குர்ஷித், லழ்ழஃ

​ 

​أبجد هوز حطي كلمن سعفص قرشت ثخذ ضظغ

 ا 1  - ب 2 - ج 3 - د 4

ه 5 - و 6 - ز 7

ح 8 - ط 9 - ي 10

ك 20 - ل 30 - م 40 - ن 50

س 60 - ع 70 - ف 80 - ص 90

ق 100 - ر 200 - ش 300 - ت 400

ث 500 - خ 600 - ذ 700

ض 800 - ظ 900 - غ 1000

​​​

இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் கொடுத்தார்கள் அந்த அடிப்படையில் 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாக கூட்டினால் 786 வரும்.பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை சுருக்கமாக கருதி மரியாதை, கண்ணியம் பேணப்பட்டு வேண்டும் என்ற அடிப்படையில் இதைப் (786) பயன்படுத்தி வருகின்றனர்.

அப்ஜத், ஹுவ்வஸ், ஹுத்தி, கலிமன், ஷங்மஸ், குர்ஷித் இவர்கள் ஆறுவரும் அரசர்கள். இவர்கள்தான் முதன் முதலில் அரபு நூல்களின் மூலகர்த்தாக்கள், அமைப்பாளர்கள். அதனால் இக்கணக்கு அவர்கள் பெயராலேயே வழங்கப்படுகிறது.

♦ இமாம் மஸ்வூது ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பவர் ‘தாரீக்’ என்னும் நூலில் கூறுகிறார். அப்ஜத் என்பவர் ஹிஜாஸிலுள்ள ஒரு அரசர் ஹுவ்வஸும், ஹுத்தியும் தாயிப் பகுதியிலுள்ள ஒரு அரசர்கள். கலிமன், ஸங்மஸ், குர்ஷித் என்போர் மிஸ்ர் நாட்டு மன்னர்கள். இவர்கள் அனைவரும் அல்ஆரிபா அரபுகளில் முராமிர் இப்னு சமர்வா என்பவரின் குடும்பத்தினராகும். அவர்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அப்ஜத் என்ற பெயரையே வைக்கப்பட்டனர். இதனை இமாம் சுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ‘அஜாயிபுல் லுஙத்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றின் பொருள் குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்:

அப்ஜத்: என்றால் மறதியின் காரணமாக தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விலக்கலைப் புறக்கணித்து மரத்தின் கனியை உண்ண ஜத்த-முயன்றார்கள். 

ஹுவ்வஸ்: (விலக்கப்பட்ட கனியை உண்டதால்) விண்ணிலிருந்து மண்ணிற்கு இறக்கப்பட்டார்கள்.

ஹுத்தி: தௌபாவால் குற்றம் நீக்கப்(மன்னிக்க)பட்டது.

கலிமன்: மரத்திலிருந்து கனியைப் புசித்தார்கள். நாயன் அவர்களுக்கு தௌபாவைக் கொண்டு அருள் புரிந்தான்.

ஸங்பஸ்: சுவனத்திலிருந்து இறைவன் அவர்களை வெளியேற்றினான்.

கர்ஷத்: குற்றத்திலிருந்தார்கள்: தண்டனையிலிருந்து ஈடேற்றம் பெற்றார்கள்.

அலிப்: அல்லாஹ்வின் அத்தாட்சிப

பாஉ: பஹ்ஜத்துல்லாஹ்-இறைவனின் பேரழகு

ஜீம்: மஜ்துல்லாஹ்-அல்லாஹ்வின் தூய்மை

ஹா: ஹாவிய்யா-கொடிய நரகம்.

வாவு: வைல் -நரக ஓடை

ஸாவு: ஸாவிய்யா பின் நார் – நரகத்தின் ஒரு மூலை

இவ்வாறு ‘தப்சீருத் தத்கீர்’ எனும் நூல் கூறுகிறது. (ஆதாரம் மஹாழிரத்துல் அவாயில் பக்கம் 26,27) .இதுதான் அப்ஜத் கணக்குத் தோன்றிய விதம்.

இதைப்பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நீங்கள் அப்ஜத்(எண்ணின்) பொருளை எடுங்கள். அதில் அநேக வியத்தகு விசயங்கள் இருக்கின்றன’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்ற எண்ணின் கூட்டுத் தொகையான 786 என்பதை பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்பதற்குப் பதிலாக மக்கள் பயன்படுத்தத் துவங்கினர். இதற்கு உலமாக்கள் அனுமதியும் கொடுத்தனர். மற்றபடி இது மேற்கத்திய நியூமரலாஜி வகையைச் சார்ந்தது அல்ல.

♦ 786 என்பது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்பதற்கு மட்டும் வரும் கூட்டுத் தொகையா? மற்ற எந்தப் பெயரையும் இதே மாதிரி கூட்டுத் தொகை வரும்படி உருவாக்கிக் கொள்ளலாமே! ஆகவே இது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் எனப்தை குறிக்கும் சொல்லாக மாட்டாது என்கின்றனர் வழிகெட்ட கூட்டத்தினர். ஆகவே எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன’ (நூல்: புஹாரி ஷரீஃப்) ஒருவர் 786 என்று எழுதும் போது அல்லது படிக்கும் போது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று எண்ணம் கொண்டே எழுதுகிறார்., படிக்கிறார். எனவே இவர்களின் வாதம் அர்த்தமற்றுப் போகிறது.


​​

♦ மேலும் நீங்கள் இவ்வாறு செய்வது மிகவும் அபத்தமான ஒன்று. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று முழுமையாக எழுதுவது கண்ணியமற்ற செயல், மரியாதைக் குறைவான செயல் என்று தெரியாமலா சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஏனைய சஹாபாக்களும் எழுதியிருக்கின்றனர். அவர்களுக்கு வராத கவலை உங்களுக்கு ஏன் வந்தது? என்று அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்கின்றனர்.


​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டிய முறை நமக்கு அழகிய முன்மாதிரி. அவர்கள் சொன்ன சொல், செய்த செயல், அங்கீகரித்தது அனைத்தும் நபிமுறை என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. அதை முழுமையாக பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அவ்வாறு நம்மால் முழுமையாக பின்பற்ற முடியுமா? உதாரணமாக: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடராக நோன்பு வைத்திருக்கிறார்கள். இது மாதிரி நம்மால் முடியுமா? எனவே நாம் குர்ஆனை அல்லது ஹதீதுகளை முழுமையாக விளங்கக் கூடிய சக்தி பெற்றிருக்கவில்லை. இதுபோன்ற சிக்கலான விஷயங்களிலிருந்து விடுபட குர்ஆன், ஹதீதுகளிலிருந்து சட்டங்களை நமது இமாம்கள் பிரித்து எடுத்து, இஜ்மாஃ (ஏகோபித்த முடிவு), கியாஸ் (அனுமானம்) மூலமும் மக்களுக்கு தந்து மார்க்கத்தை எளிமையாக பின்பற்ற உதவியிருக்கின்றனர். நபி வழிமுறையினையும், குர்ஆனையும் முழுக்க ஆய்வு செய்து விளக்கி வைக்கவும் அதிலிருந்து சட்டங்களை பிரித்து மக்களுக்குத் தருவதற்கும் இமாம்கள் என்னும் இறைநேசச் செல்வர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ​​அல்லாஹ் அவர்களின் பணிகளுக்கு நற்கூலிகளை அள்ளி அள்ளி சொரிவானாக!

சம்பந்தப்பட்ட கேள்விக்கு வருகிறேன். குர்ஆன் பாதுகாக்கப்பட, கண்ணியப்படுத்தப்பட, மரியாதை செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதும் அதை சுத்தமில்லாதவர்கள் தொட முடியாது என்பதும் நமக்கு குர்ஆன், ஹதீதுகள் மூலம் விளங்கி இருக்கிறோம். இந்த அடிப்படையில் குர்ஆன் கண்ணியப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதால் அதை நடைமுறைப்படுத்திடவும், கண்ணியக்குறைவாக மக்கள் நடந்து கொள்வதை விட்டு தவிர்த்திடச் செய்யவும் இமாம்கள் சட்டங்களை தாங்கள் கூறும் ஆயத்து, ஹதீதுகளிலிருந்து ஆய்வு செய்து பகுத்தெடுத்தனர். இவை அனைத்தும் அந்தந்த மத்ஹப் சட்ட கிதாபுகளில் காணக்கிடக்கின்றன. ஷாபிஇ மத்ஹப் சட்ட நூலான மஙானி குர்ஆனுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியம், மரியாதை பற்றி கூறுவதை பார்க்க:இச்சூழ்நிலையில், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற குர்ஆன் வசனம் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் கூறப்பட வேண்டிய ஒன்று என்பதால் மக்கள் அதிகமதிகம் அதை பயன்படுத்துகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.

♦ இதனால் பொடுபோக்காக, கவனக்குறைவாக குர்ஆனுக்கு மரியாதைக் குறைவு , கண்ணியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க உலமாக்கள் கீழ்காணும் கியாஸ் அடிப்படையில் 786 என்பதை பயன்படுத்த அனுமதி அளித்தனர். ஜும்ஆவிற்கு பாங்கு அழைப்பு சொல்லப்பட்டால் ஜும்ஆவிற்காக விரைந்து செல்லுங்கள் என்ற நபிமொழி இருக்கிறது. பாங்கிற்குப் பின் வியாபாரம் பண்ணுவது கூட தடுக்கப்பட்டுள்ளது.


​​இந்த ஹதீதை கண்ணுற்ற கலீபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், மக்கள் தங்கள் பொடுபோக்கினால் இந்த ஹதீதிற்கு மாற்றம் செய்ய நேரிட்டால் மிகவும் விபரீதமாகிவிடும் என்று கணக்கிட்டு, ஜும்ஆவிற்கு என்று இரண்டாவது பாங்கு சொல்வதை சட்டமாக்கினார்கள். இது கலீபா அவர்கள் தங்கள் அனுமானத்தினால் மக்கள் நன்மைக்காக செய்தது. அதேபோல் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக்கி மக்கள் குழப்பமடைந்து அவர்களுக்கிடையே பிரிவுகள் ஏற்படுவதை தடுத்தனர். இது எல்லாம் மக்களின் நன்மையைக் கருதி மக்கள் மார்க்கத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று பேராவல் கொண்டதன் காரணமாக ஏற்பட்ட சட்டங்களாகும்.

அதைப் போலத்தான் கண்ணியத்தைப் பேணி, மரியாதையைப் பேணி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதுவதற்குப் பதிலாக 786 என்று போடுவதும். மக்கள் இந்தக் கண்ணியக் குறைவு, மரியாதைக்குறைவு என்ற பாவங்களிலிருந்து மீளவே இந்த 786 என்று எழுதும் முறை கொண்டு வரப்பட்டது. அதற்காகத்தான் உலமாக்களும் அனுமதி கொடுத்திருக்கின்றனர்.


​​உங்களை யாரும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குப் பதிலாக 786 என்று எழுதுங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லையே!. ஆனால் குர்ஆனுக்குரிய மரியாதை, கண்ணியம் பற்றி தெரிந்தவர்கள் உலமாக்கள் அனுமதி தந்த பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குப் பதிலாக 786 என்பதையே எழுத விரும்புவார்கள். இதில் உண்மை இஸ்லாமியர்களான சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுக்கு அபிப்பிராய பேதமில்லை. புதிதாக வந்த வழி கெட்ட கூட்டங்களுக்குத்தான் பிரச்சனை. ஆகவே கண்ணியம், மரியாதை தெரியாத இந்த மடையர்களின் சொல், செயலை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!. ஆமீன்.