Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் பய்யினா – 98  (தெளிவான ஆதாரம்)
(மதனீ)  பிரிவு - 1,  சொற்கள் – 94,  வசனங்கள் – 8,  எழுத்துகள் – 399



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. வேதக்காரர்களிலும், இணை வைக்கிறவர்களிலும், எவர்கள் நிராகரித்து விட்டார்களோ அத்தகையோர், தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் குப்ரை விட்டும்) விலகுபவர்களாக இல்லை-

2. (தெளிவான அந்த ஆதராம்) அல்லாஹ்வில் நின்றும் உள்ள ரசூல் – பரிசுத்த ஆகமங்களை அவர் ஓதிக் காண்பிக்கிறார்-

3. அவற்றில் நிலையான சட்டங்கள் இருக்கின்றன.

4. (அன்றியும் முன்னர்) வேதங் கொடுக்கப்பட்டவர்கள் – தங்களுக்கு தெளிவான ஆதாரம் வந்த பிறகே தவிர (தம்மிடையே) அவர்கள் பிளவுபடவில்லை.

5. இன்னும் அல்லாஹ்வை- அவனுக்காகவே வணக்கத்தை அவர்கள் கலப்பற்றதாக்கி வைத்தவர்களாக இருக்கும் நிலையில், நேர்வழியின் பால் சாய்ந்தவர்களாக அவர்கள் வணங்குவதற்காகவும், தொழுகையை அவர்கள் நிலை நிறுத்துவதற்காகவும், ஸகாத்தைக் கொடுப்பதற்காக்கவுமே தவிர அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை: இன்னும் இது தான் நிலையான (உறுதியான) மார்க்கமாகும்.

6. வேதக்காரர்களிலிருந்தும், (இணை வைக்கிற) முஷ்ரிக்கானவர்களிலிருந்தும் நிச்சயமாக காபிராகிவிட்டவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள்: அதில் அவர்கள் நிரந்தரமாக இருபார்கள் – அவர்கள் தாம் படைப்புகளில் மிக கெட்டவர்கள்.

7. நிச்சயமாக எவர்கள், ஈமான் கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.

8. அவர்களுடைய நற்கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் ‘அத்னு’ என்னும் (நிலையான) சொர்க்கச் சோலைகளாகும்: அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டு இருக்கும்:அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்: அல்லாஹ் அவர்களைப் பொருந்தி கொண்டான்: அவனை அவர்கள் பொருந்திக் கொண்டார்கள்: இது (-சொர்க்கமும் திருப்பொருத்தமும்) தம்முடைய ரப்பை அஞ்சியவருக்கே உரியதாகும்.