MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் கத்ர் – 97 (மகிமை மிக்கது)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 30, வசனங்கள் – 5, எழுத்துகள் – 112
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. நிச்சயமாக நாம் (குர்ஆனாகிய) இதனை மகிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம்.
2. (நபியே!) மகிமைமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா?
3. (அந்த) மகிமைமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும்.
4. அதில் மலக்குகளும் (ஜிப்ரீலாகிய பரிசுத்த) ஆவியும், தங்களுடைய ரப்பின் கட்டளையை கொண்டு சகல காரியத்தின் பொருட்டும் (பூமியில்) இறங்குகின்றனர்.
5. (அது) சாந்திமயமானதாகும்: அது, அதிகாலை உதயமாகும் வரை இருக்கும்.