Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் அலக் – 96  (இரத்தக் கட்டி)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 92,  வசனங்கள் – 19,  எழுத்துகள் – 280


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. உம்முடைய ரப்பின் திருப்பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (அனைத்தையும்) படைத்தவன்.

2. மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து அவன் படைத்தான்.

3. ஓதுவீராக! உம்முடைய ரப்பு மிக்க தயாளமானவன்.

4. அவன் எத்தகையோனென்றால் எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான்.

5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றை (யெல்லாம்) அவன் கற்றுக்கொடுத்தான்.

6. (அதற்கு அவன் நன்றியுடையவனாய் இருக்கின்றானா?) அல்ல! நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான் –

7. (தான் பெற்றுள்ள செல்வச் செருக்கால் அல்லாஹ்வின் அருளில் இருந்து) தேவையற்றவனாக தன்னை அவன் கருத்திக்கொண்டதால் (வரம்பு மீறுகிறான்)

8. நிச்சயமாக உம்முடைய ரப்பின் பக்கமே (மனிதன்) திரும்பிச் செல்லுதல் இருக்கிறது –

9. (நபியே!) தடுக்கின்ற ஒருவனை நீர் பார்த்தீரா?

10. (நம்) அடியாரை – அவர் தொழும்பொழுது... (தடுக்கின்றவனை பார்த்தீரா?)

11. அவர் நேர்வழியில் மீதிருந்தும் (அவரை தொழவிடாமற் தடுப்பவனை) பார்த்தீரா?

12. அன்றியும், பயபக்தியைக்கொண்டு அவர் ஏவியதற்காக, (தடுக்கிரவனை பார்த்தீரா?)

13. (அவ்வாறு தடுக்கும்) அவன் (சத்தியத்தை) பொய்யாக்கி, (அதைவிட்டு) முகந் திருப்பிக்கொண்டான் என்பதை பார்த்தீரா?

14. நிச்சயமாக அல்லாஹ் (அவன் செய்வதனைத்தையும்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

15. (அவன் எண்ணுவது போல) அல்ல! அவன் (தன் தீச்செயலிலிருந்து) விலகி கொள்ளவில்லையானால், நிச்சயமாக முன்நெற்றி முடியைப் பிடித்து (அவனை நரகத்துக்கு) இழுத்து வருவோம்.

16. பொய் கூறும்படியான, தவறு செய்யும்படியான (வனின்) முன்நெற்றி முடியை – (இழுத்து வருவோம்)

17. எனவே, அவன் தன் சபையினரை அழைக்கட்டும்.

18. நரக காவலாளிகளை விரைவில் நாம் அழைப்போம் –

19. (எனவே அவன் எண்ணுவது போல்) அல்ல! அவனுக்கு நீர் வழிப்பட வேண்டாம்: நீர் சுஜூது செய்து (உம்முடைய ராப்புடன்) நெருக்கத்தை உண்டாக்கி கொள்வீராக.