MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துத் தீன் – 95 (அத்தி)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 34, வசனங்கள் – 8, எழுத்துகள் – 105
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. அத்திமரத்தின் மீதும், ஒலிவ் (ஜைத்தூன்) மரத்தின் மீதும் சத்தியமாக –
2. ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக –
3. அபயமளிக்கும் இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக –
4. மனிதனை மிக அழகான வடிவமைப்பில் திட்டமாக நாம் படைத்தோம்.
5. பிறகு அவனை கீலானவர்களிலும் மிகக் கீழானவனாய் நாம் ஆக்கினோம்.
6. ஈமான் கொண்டு, நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர: எனவே, அ(த்தகைய) வர்களுக்கு முடிவில்லாத நற்கூலி உண்டு.
7. ஆகவே, (மனிதனே!) இதற்குப் பிறகும் தீர்ப்பு நாளைப்பற்றி உன்னிடம் எது பொய்யாக்கி வைக்க முடியும்?
8. தீர்ப்பாளர்களிலெல்லாம், அல்லாஹ் மிக மேலான தீர்ப்பாளனாக இல்லையா?