MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் லுஹா – 93 (முற்பகல்)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 40, வசனங்கள் – 11, எழுத்துகள் – 172
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. முற்பகலின் மீது சத்தியமாக –
2. (இருளால்) மூடிக்கொள்ளும் போதுள்ள இரவின் மீது சத்தியமாக –
3. (நபியே!) உம்முடைய ரப்பு உம்மை கை விடவுமில்லை: (உம்மை) அவன் வெறுக்கவுமில்லை.
4. (மறுமை எனும்) பிந்தியதாகிறது, முந்தியதை விட (-உலகத்தைவிட) உமக்கு மிகவும் மேலானதாகும்.
5. இன்னும் அதி விரைவில் உம்முடைய ரப்பு (பெரும் அருட்கொடைகளை) உமக்குக் கொடுப்பான்: அப்போது நீர் (அவை பற்றி) மிக்க திருப்தி அடைவீர்!
6. உம்மை அனாதையாக அவன் கண்டு, பின்னர் (உமக்கு) அவன் புகலிடம் அளிக்கவில்லையா?
7. இன்னும் உம்மை (இந்த சன்)மார்க்கத்தை அறியாதவராக அவன் கண்டு, பிறகு (உமக்கு) அவன் நேர்வழி காட்டினான்.
8. இன்னும் உம்மை எளியவராக அவன் கண்டு, பிறகு (உம்மைப் பிறரிடம் இருந்து) தேவையற்றவராக (-செல்வந்தராக) ஆக்கி வைத்தான்.
9. எனவே, அனாதையை நீர் கடிந்து கொள்ளாதீர்.
10. இன்னும் யாசிப்பவரை விரட்டாதீர்.
11. இன்னும், உம்முடைய ரப்பின் நிஃமத்து (அருட்கொடை) பற்றிப் பிறருக்கு அறிவித்துக் கொண்டிருப்பீராக!