MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் லைல் – 92 (இரவு)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 71, வசனங்கள் – 21, எழுத்துகள் – 310
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. இரவின் மீது – (இருளினால்) அது மூடிக் கொள்ளும் போது – சத்தியமாக
2. பகலின் மீது – (ஒளியால்) அது பிரகாசிக்கும் போது – சத்தியமாக
3. ஆணையும், பெண்ணையும் படைத்தவன் மீதும் சத்தியமாக –
4. நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலதரப்பட்டது.
5. எனவே, எவர் (தானதருமம்) கொடுத்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்து கொண்டாரோ –
6. இன்னும் நல்ல (காரியத்)தை (நல்லதென்று) உண்மைப்படுத்தினாரோ –
7. அவருக்கு (சொர்க்கம் புகுவதற்கான) சுலபமான (வழித்தடத்)தை நாம் எளிதாக்கி வைப்போம்.
8. எவன் ஒருவன் உலோபத்தனம் செய்து, (அல்லாஹ்வின் அருளை விட்டும்) தேவையற்றவனா(ய் தன்னை கருத்திக் கொள்)கிறானோ –
9. இன்னும் நல்ல (காரியத்)தைப் பொய்யாக்கினானோ –
10. அவனுக்கு (நரகத்தை ஈட்டித் தரும்) கடுமையான (தீயபழக்க – வழக்கம் முதலிய)தை நாம் எளிதாக்கி வைப்போம்.
11. (நரகப் படுகுழியில்) அவன் விழுகின்றபோது அவனுடைய பொருள் அவனுக்குப் பயனளிக்காது.
12. நிச்சயமாக நம் மீது நேர்வழி காண்பித்தல் பொறுப்பாகும்.
13. இன்னும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நிச்சயமாக நமக்கே உரியன.
14. எனவே, கொழுந்து விட்டெரியும் நரகத்தைப் பற்றி உங்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
15. நற்பேறு கேட்டவனைத் தவிர (வேறு எவனும்) அதில் நுழைய மாட்டான் –
16. அவன் எத்தகையவனென்றால் (சத்தியமார்க்கதைப்) பொய்யாக்கி, புறக்கணித்து விட்டவன்.
17. இன்னும் (அல்லாஹ்வுக்கு௦) அதிகம் அஞ்சி நடந்து கொண்டவர், அதை விட்டு தூரமாக்கப் படுவர் –
18. அவர் எத்தகையோரென்றால் தம்மைப் பரிசுத்தப் படுத்தியவராகத் தம்முடைய பொருளை(த் தானதருமமாக) க் கொடுத்தவர்.