MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் பலத் – 90 (நகரம்)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 82, வசனங்கள் – 20, எழுத்துகள் – 320
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. இந்த (மக்கா) நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன் –
2. (நபியே!) நீர் இந்த நகரத்தில் தங்கியிருக்கும் நிலையில் –
3. தந்தையின் மீதும், பிறந்தோ(ராகிய சந்ததியின)ரின் மீதும் (சத்தியமாக) -
4. மனிதனை கஷ்டத்தில் (ஆழ்பவனாகவே) திட்டமாக நாம் படைத்துள்ளோம்.
5. நிச்சயமாக, (தீயன செய்தால் தன்னைத் தண்டிப்பதற்குத் தன மீது எவரும் சக்தி பெறவே மாட்டார் என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
6. ‘திரண்ட பொருளை நான் அழித்திருக்கின்றேன்’, என்று (ஆணவத்தோடு) அவன் கூறுகிறான்.
7. நிச்சயமாக, தன்னை எவரும் பார்க்கவில்லையென அவன் எண்ணிக் கொண்டானோ?
8. அவனுக்கு இரு கண்களை நாம் அமைக்கவில்லையா?
9. ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அமைக்கவில்லையா?
10. இன்னும் (நன்மை, தீமை எனும்) இரு வழிகளையும் அவனுக்கு நாம் காண்பித்தோம்.
11. எனினும், “அகபா”வை (கணவாயை) அவன் கடக்கவில்லை.
12. “அகபா” என்பது என்னவென்று (நபியே!) உமக்குத் தெரியுமா?
13. அது அடிமையை விடுவித்தல் –
14. அல்லது (பஞ்சம்,) பசியுடைய நாளில் உணவளித்தல் –
15. நெருங்கிய உறவுடைய அநாதைக்கு –
16. அல்லது (வறுமை எனும்) மண்ணில் உழலும் ஏழைக்கு (உணவளித்தல் போன்றதாகும்).
17. பிறகு ஈமான் கொண்டவர்களில் உள்ளவனாகத் தான் இருப்பதும், பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், (மக்களுக்கு) இறக்கம் காட்டுமாறு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வருவோரில் உள்ளவனாக இருப்பதும் (அக்கணவாயைக் கடப்பது) ஆகும்.
18. அ(த்தகைய)வர்கள் தாம் வலப்புரத்தோர்.
19. எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரித்தார்களோ அத்தகையோர் தாம் இடப் புறத்தோர்.
20. அவர்களின் மீது (த்து வலிகளும்) மூடப்பட்ட நரக நெருப்பு இருக்கிறது.