Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் ஙாஷியா – 88  (மூடிக்கொள்வது)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 92,  வசனங்கள் – 26,  எழுத்துகள் – 381



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. (நபியே!) மூடிக்கொள்வதுடைய (-கியாமத் நாளுடைய) செய்தி உம்மிடம் வந்ததா?

2. அந்நாளில் சில முகங்கள் இழிவடைந்திருக்கும் –

3. (அவை) உழைத்தவையாகவும், களைத்துப்போனவையாகவும் இருக்கும்.

4. கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் அவை புகும் –

5. கொதிக்கும் ஊற்றிலிருந்து (அவர்களுக்கு நீர்) புகட்டப்படும்.

6. அவர்களுக்கு முட்செடிகளிலிருந்தே தவிர (வேறு) உணவு இல்லை –

7. (அவர்களின் உடலை) அது கொழுக்கச் செய்யாது: பசியையும் தணிக்காது.

8. வேறு சில முகங்கள் அந்நாளில் செழிப்பானவையாயிருக்கும் –

9. தம்முடைய (உலக) முயற்சி(க்குக் கிட்டிய நற்கூலி)க்காக திருப்தியானவையாயிருக்கும் –

10. (அவை) உன்னதமான சுவனத்தில் இருக்கும் –

11. அங்கு எந்த வீணானதையும் செவியுற மாட்டா –

12. அதில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்ச்சுனை உண்டு –

13. அதில் உயர்ந்த ஆசனங்களும் உண்டு –

14. இன்னும் குவளைகளும் வைக்கப்பட்டிருக்கும் –

15. வரிசையாக வைக்கப்பட்ட திண்டுகளும் (உண்டு) –

16. விரித்து வைக்கப்பட்ட உயர்ந்த விரிப்புகளும் (உண்டு).

17. ஒட்டகையை – அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கவனிக்க வேண்டாமா?

18. வானத்தை – அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்றும்.

19. மலைகளையும் – அவை எவ்வாறு நட்டு வைக்கப்பட்டுள்ளன என்றும்.

20. பூமியை – அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்றும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

21. எனவே, நீர் உபதேசிப்பீராக! நிச்சயமாக நீரோ உபதேசிப்பவர்தாம்.

22. அவர்களின் மீது நீர் பொறுப்புச் சாட்டப்பட்டவரல்லர் –

23. எவர் புறக்கணித்து, நிராகரித்தாரோ அவரைத் தவிர –

24. அல்லாஹ் அ(த்தகைய) வரை மிகப் பெரிய வேதனையாக வேதனை செய்வான்.

25. அவர்களின் மீளுதல் நிச்சயமாக நம் பக்கமேயாகும் –

26. பிறகு அவர்களின் கேள்வி கணக்கும் நிச்சயமாக நம்மீதேயாகும்.