MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் ஜின் – 72 (ஜின்கள்)
(மக்கீ) பிரிவு - 2, சொற்கள் – 285, வசனங்கள் – 28, எழுத்துகள் – 870
ருகூஃ 1
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. (நபியே!) நீர் கூறுவீராக: எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “நிச்சயமாக, ஜின்களில் சில நபர்கள் (இந்தக் குர்ஆனைச்) செவியுற்றனர்: பிறகு, (தம் கூட்டத்தாரிடம் சென்று) ‘நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்’ என்று கூறினார்” –
2. “நேர்வழியின்பால் (குர்ஆனாகிய) அது வழிகாட்டுகிறது: எனவே, நாங்கள் அதன் மீது ஈமான் கொண்டோம்: இன்னும், எங்களுடைய ரப்புக்கு எவரையும் நாங்கள் இணை வைக்கவே மாட்டோம்.”
3. “இன்னும் நிச்சயமாக, எங்களுடைய ரப்பின் மகிமை உயர்ந்தது: மனைவியையோ புதல்வனையோ (தனக்கு) அவன் அக்கிக்கொள்ளவில்லை.”
4. “இன்னும் நிச்சயமாக, நம்மில் அறிவிலியானவன், அல்லாஹ்வின் மீது (அவனுக்கு இணையானவர், மாணவி, குழந்தை உண்டு என்பது போன்று) அளவு கடந்து பொய் சொல்பவனாகி விட்டான்.”
5. இன்னும், நிச்சயமாக மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்களென நிச்சயமாக நாம் எண்ணியிருந்தோம்.
6. இன்னும், நிச்சயமாக, மனிதர்களிலிருந்து ஆண்கள் சிலர், ஜின்களிலிருந்து ஆண்கள் சிலரைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றனர்: எனவே, அவர்கள் (-மனிதர்கள்) அவர்களுக்கு (-ஜின்களுக்கு, ஆணவத்தை) அழிச்சாட்டியம் செய்யும் தன்மையை அதிகப்படுத்தி விட்டனர்.
7. நிச்சயமாக (ஜிங்கலாகிய) அவர்களும் (மனிதர்களாகிய) நீங்கள் எண்ணியதைப் போன்றே, நிச்சயமாக, அல்லாஹ் யாரையும் (மறுமையில்) எழுப்பவேமாட்டான் என்று எண்ணினார்கள்.
8. இன்னும்: “நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம்: கடினமான காவலாளிகளாலும் (நட்சத்திரங்களின் ) நெருப்பு பந்தங்களாலும் நிரப்பபட்டதாக நம் அதனை கண்டோம்” (என்று ஜின்கள் கூறினார்)
9. நிச்சயமாக நாம் (இதற்கு முன்) அதிலிருந்து (மலக்குகள் பேசுவதை ஒட்டு) கேட்பதற்காக பல இடங்களில் உட்கார்ந்து கொண்டிருந்தோம்: பிறகு இப்போது எவர் (ஒட்டு) கேட்கிறாரோ அவர், (எறியப்படுவதட்கு) தயார் நிலையில்யுள்ள தீப்பந்தத்தையே தமக்குப் பெற்றுக் கொள்வர்.
10. இன்னும் (இதன் மூலம்) பூமியில் இருப்பவர்களுக்கு தீமை நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களுடைய ரப்பு அவர்களுக்கு நேர் வழியை நாடியுல்லானா? என்பதை நிச்சயமாக நாம் அறிய மாட்டோம்.
11. நிச்சயமாக நாம் – நம்மில் நற்பண்புடையோரும் இருக்கின்றனர்: இன்னும் நம்மில் அது அல்லாதவர்களும் இருக்கின்றனர்: நாம் பல பிரிவுள்ள வழியினர்களாக இருந்தோம்.
12. இன்னும் நிச்சயமாக, “பூமியில் அல்லாஹ்வை நாம் இயலாமலாக்கவே முடியாது” என்றும், “(பூமியை விட்டு) ஓடிவிடுவதாலும் அவனை நாம் இயலாமலாக்கவே முடியாது” என்றும் நிச்சயமாக நாம் உணர்ந்து கொண்டோம்.
13. இன்னும் நிச்சயமாக நாம், (குர்ஆனாகிய) நேர்வழியை செவியேற்ற போது அதனை நாம் ஈமான் கொண்டோம்: எனவே, எவர் தம் ரப்பின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவர் நன்மையில் குறைவும் அநீதமும் (ஏற்படுமோ என்பது) பற்றி பயப்பட மாட்டார்.
14. இன்னும் நிச்சயமாக நம்மில் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டோராய்) முஸ்லிம்களும், இன்னும் நம்மில் அநியாயக்காரர்களும் இருக்கின்றனர்: எனவே எவர் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டோராய்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரோ, அவர்கள் நேர்வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
15. அநியாயக்காரர்களோ நரகத்திற்கு விறகுகளாகி விட்டனர் (என்று ஜின்கள் கூறினார்)
16. “நிச்சயமாக (இஸ்லாம் எனும்) நேர்வழியின் மெது அவர்கள் உறுதியாய் இருந்தால், தாராளமாக (மழை) நீரை அவர்களுக்கு நாம் புகட்டுவோம்” –
17. “(நன்றி செய்கிறார்களா? என்று) அதில் அவர்களை நாம் சோதிப்பதற்காக: எவர் தம் ரப்பின் நினைவை புறக்கணிக்கிறாரோ, அவரை சிரமமான வேதனையில் அவன் புகுத்துவான்”
18. “இன்னும், நிச்சயமாக (அல்லாஹ்வை வணங்குமிடமான) மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்: ஆகவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (வேறு) எவரையும் நீங்கள் அழைக்க _வாங்க) வேண்டாம்.
19. “இன்னும், நிச்சயமாக, அல்லாஹ்வுடைய அடியார் (முஹம்மது நபி) அவனை அழைப்பவராக(த் தொழுவதற்கு) நிற்கும் பொழுது (குர்ஆனை கேட்பதற்காக) அவரிடம் கூட்டங் கூட்டமாக (ஜின்களாகிய) அவர்கள் நெருங்கி விடுகின்றனர்.
ருகூஃ 2
20. “நான் (வணங்கி) அழைப்பதெல்லாம் என்னுடைய ரப்பைத்தான்: அவனுக்கு எவரையும் நான் இணையாகக மாட்டேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
21. “நிச்சயமாக நான், உங்களுக்குத் தீங்கையோ – நன்மையையோ செய்ய சக்தி பெற மாட்டேன்” என்று நீர் கூறுவீராக!
22. “நிச்சயமாக நானோ – அல்லாஹ்விலிருந்து எவரும் என்னை காப்பாற்றவே மாட்டார்: இன்னும் அவனைத் தவிர (வேறு) ஒதுங்குமிடத்தையும் நான் காணவே மாட்டேன்.” என்றும் நீர் கூறுவீராக!
23. அல்லாஹ்வி(ன் புறத்தி)லிருந்து எத்தி வைப்பதையும், அவனுடைய தூது செய்திகளையும் (அறிவிப்பதை)யும் தவிர (வேறெதற்கும் நான் சக்திப் பெற மாட்டேன்) எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரசூலுக்கும் மாறு செய்கிறாரோ, நிச்சயமாக அவருக்கு நரக நெருப்பு உண்டு: அதில் என்றென்றும், நிரந்தரமாக இருப்பார்கள்.
24. இறுதியாக – அவர்கள் வாக்களிக்கப்பட்ட (வேதனையான)தைப் பார்க்கும் வரை – அப்போது உதவி செய்வதில் மிக்க பலவீனமானவரும், எண்ணிக்கையால் மிகக் குறைந்தவரும் யார்? என்பதை அவர்கள் அறிந்துக் கொள்வார்கள்.
25. “நீங்கள் வாக்களிக்கப்படுகின்றது சமீபத்தில் இருக்கிறதா? அல்லது என்னுடைய ரப்பு அதற்கு தவணை ஏற்படுத்துகிறானா என்பதை நான் அறிய மாட்டேன்” என்று நீர் கூறுவீராக!
26. மறைவானவற்றை (அவன்) அறிகிறவன்: அவன் மறைவாக வைத்திருப்பவற்றை எவருக்கும் அவன் வெளிப்படுத்த மாட்டான் –
27. ரசூலில் தான் பொருந்தி கொண்ட ஒருவரை தவிர – (அவருக்கு அதனை அவன் வெளிப்படுத்தக் கூடும்) எனவே, நிச்சயமாக அவன் (ரசூலாகிய)அவருக்கு முன்னாலும் அவருக்கு பின்னாலும் பாதுகாவல(ராக வானவ)ரை நடத்துகிறான் –
28. (ஏனெனில்) நிச்சயமாக, (ரசூல்கள்) தங்களுடைய ரப்பின் தூதுச் செய்திகளை (மக்களுக்கு) திட்டமாக அவர்கள் எத்தி வைத்து விட்டனர்,
29. என்பதை அவன் அறிவிப்பதற்காக: (இவ்வாறு செய்கிறான்) இன்னும் (ரசூல்காலாகிய) அவர்களிடம் உள்ளவற்றை அவன் சூழ்ந்தரிந்துள்ளான்: இன்னும் எல்லாப் பொருட்களையும் எண்ணிக்கையால் கணக்கிட்டு வைத்துள்ளான்.