MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் நூஹ் – 71 (நூஹ் நபி)
(மக்கீ) பிரிவு - 2, சொற்கள் – 224, வசனங்கள் – 28, எழுத்துகள் – 999
ருகூஃ 1
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரின் பால், “நோவினை தரும் வேதனை அவர்களுக்கு வரும் முன், உம்முடைய சமூகத்தினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்று (ரசூலாக) நாம் அனுப்பினோம்.
2. “என்னுடைய சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களுக்கு நன் பகிரங்கமான எச்சரிக்கையாளன்” என்று அவர் கூறினார்.
3. “அல்லாஹாவை நீங்கள் வணங்குங்கள்: அவனை அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்: எனக்கு நீங்கள் வழிப்படுங்கள்” (என்றும் கூறினார்).
4. “(அவ்வாறு நீங்கள் நடந்துக்கொண்டால்) உங்களுடைய பாவங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான்: இன்னும், குறிப்பிடப்பட்ட ஒரு தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான்: நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை – அது வந்துவிட்டால், அது பிற்படுத்தப்படமாட்டாது: (இதனை) நீங்கள் அறிய வேண்டுமே! (என்றும் கூறினார்)
5. “என்னுடைய ரப்பே! நிச்சயமாக நான் என்னுடைய சமூகத்தினரை (நேர்வழியின் பக்கம்) இரவிலும், பகலிலும் அழைத்தேன்” என்று கூறினார்.
6. “ஆனாலும் என்னுடைய அழைப்பு வெருண்டோடுவதை தவிர அவர்களுக்கு (வேறெதனையும்) அதிகமாக்கவில்லை” (என்றும் கூறினார்)
7. “அவர்களுக்கு நீ மன்னிப்பதற்காக நிச்சயமாக நான் அவர்களை அழைக்கும் போதெல்லாம், தம் விரல்களை தம் காதுகளில் வைத்துக்கொண்டார்கள்: தம் ஆடைகளால் (முகத்தையும்) அவர்கள் மூடிக்கொண்டனர்: மேலும், (தம் நிராகரிப்பில்) அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்: பெரும் அகம்பாவம் கொண்டும் இருந்தனர்.
8. பின்னரும், நிச்சயமாக நான் அவர்களை (நேர்வழியின் பால்) சப்தமிட்டும் அழைத்தேன்.
9. பிறகும், நிச்சயமாக நான் அவர்களுக்கு பகிரங்காமாவும், அவர்களுக்கு மிக இரகசியமாகவும் உணர்த்தினேன் –
10. பின்னர், “உங்களுடைய ரப்பிடத்தில் பாவமன்னிப்பு தேடுங்கள், நிச்சயமாக அவன் அதிகம் மன்னிக்கிறவனாக இருக்கிறான்.” என்றும் நான் கூறினேன் –
11. “(அப்படி செய்தீர்களாயின்) உங்கள் மீது தொடராக மழையை அவன் அனுப்புவான் –
12. “இன்னும் பொருட்களையும், புதல்வர்களையும் (கொடுப்பது) கொண்டு அவன் உங்களுக்கு உதவி செய்து, உங்களுக்கு தோட்டங்களை உண்டாக்கி, உங்களுக்கு ஆறுகளையும் (அவை பெருகி ஓடுமாறு) உண்டாக்குவான்.
13. உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வுக்குரிய கண்ணியத்தை நீங்கள் உணர்வதில்லை.
14. உங்களை பல கட்டங்களாக திட்டமாக அவன் படைத்துள்ளான்.
15. ஏழு வானங்களையும் எவ்வாறு அடுக்கடுக்காக அல்லாஹ் படைத்துள்ளான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
16. இன்னும் அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் (எவ்வாறு) ஆக்கிவைத்துள்ளான். (என்பதையும் பார்க்கவில்லையா?)
17. அல்லாஹ் பூமியிலிருந்து உங்களை தாவரங்களாக முளைப்பித்தான் –
18. பிறகு அதிலேயே உங்களை அவன் மீளவைப்பான்: இன்னும் (அந்த பூயிலிருந்து) உங்களை (மீண்டும்) வெளிப்படுத்துவதாய்
வெளிப்படுத்துவான்.
19. அலாஹ் (இந்த) பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கியுள்ளான்-
20. அதில் நின்றுமுள்ள விசாலமான பாதைகளில் நீங்கள் நடப்பதற்காக (என்றும் நூஹ் கூறினார்)
ருகூஃ 2
21. (எவ்வளவு போதித்தும் மக்கள் நேர்வழியின் பால் வராதது கண்டு நாயனிடம் முறையிட்டு) நூஹ் கூறினார்: என்னுடைய ரப்பே! நிச்சயமாக இவர்கள் எனக்கு மாறுசெய்து விட்டனர்: எவருடைய பொருளும், எவருடைய மக்களும் அவருக்கு நஷ்டத்தையே தவிர (வேறெதையும்) அதிகமாக்கவில்லையோ அவரையே இவர்கள் பின்பற்றினார்கள்.
22. “மிகப்பெரிய சூழ்ச்சியாக இவர்கள் சூழ்ச்சியும் செய்தனர்”
23. “மேலும் (தம் கூட்டத்தாரிடம்) ‘உங்களுடைய தெய்வங்களை திண்ணமாக நீங்கள் விட்டு விடாதீர்கள்: இன்னும் (உங்களுடைய தெய்வங்களான) வத்து, ஸுவாஉ, யகீது, யஹூக், நஸ்று ஆகியவற்றையும் திண்ணமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்று அவர்கள் கூறினார்கள்.
24. “ஏராளமானவர்களை திட்டமாக அவர்கள் வழிகெடுத்து விட்டனர்: (இந்த) அநியாயக்காரர்களுக்கு வழிக்கேட்டை தவிர நீ அதிகப்படுத்தாதே” (என்றும் நூஹ் கூறினார்)
25. அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் (வெள்ளப்பிரலயத்தில்) மூழ்க்கடிக்கப்பட்டனர்: பிறகு நரகத்திலும் புகுத்தப்பட்டனர்: எனவே, அல்லாஹ்வையன்றி தங்களுக்கு (வேறு) எந்த உதவியாளர்களையும் அவர்கள் காணவில்லை.
26. மேலும் நூஹ் கூறினார்: “என்னுடைய ரப்பே! காபிர்களிலிருந்து குடியிருப்போர் எவரையும் (இந்த) பூமியின் மீது நீ விட்டுவிடாதே!
27. “நிச்சயமாக நீ – அவர்களை நீ விட்டுவைத்தால், உன்னுடைய அடியார்களை அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள்: இன்னும் (உன்னை) நிராகரிக்கின்ற பாவியை தவிர (வேறு நல்லவரை) அவர்கள் பெற்றெடுக்கவும் மாட்டார்கள்.
28. “என்னுடைய ரப்பே! என்னையும், என்னுடைய பெற்றோரையும்: ஈமான் கொண்டவராக என வீட்டில் புகுந்த வரையும்: முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் நீ மன்னிப்பாயாக! அநியாயக்காரகளுக்கு அழிவைத்தவிர நீ அதிகப்படுத்தி விடாதே! (என்று பிரார்த்தித்தார்)