Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துஸ் ஸஃப் – 61  (அணிவகுப்பு)
(மதனீ) பிரிவு - 2, சொற்கள் – 221, வசனங்கள் – 14,  எழுத்துகள் – 900


ருகூஃ 1

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹ் செய்கின்றன – அவன் மிகைத்தவன்: ஞானமுள்ளவன்.

2. முஃமின்களே! நீங்கள் ஒன்றை ஏன் சொல்கிறீர்கள்?

3. நீங்கள் செய்யாத ஒன்றை நீங்கள் சொல்வது அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியதாகும்.

4. நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் அவனுடைய பாதையில், நிச்சயமாக அவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட கட்டத்தைப் போன்று அணிவகுத்தவர்களாய் போறிடுகிறார்களோ, அத்தகையோரை நேசிக்கிறான்.

5. இன்னும், மூஸா தம் சமூகத்தினரை நோக்கி, “என்னுடைய சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களின்பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வுடைய ரஸூலாக இருக்கிறேன் என்று திட்டமாக நீங்கள் அறிந்திருக்கிற நிலையிலும் என்னை ஏன் நீங்கள் துன்புறுத்துகிறீர்கள்?” எனக் கூறிய நேரத்தை (நினைவு கூர்வீராக!) அவர்கள் (நேர்வழியை விட்டும்) சருகியபோது, அல்லாஹ் அவர்களுடைய இதயங்களையும் சறுக வைத்தான்: அல்லாஹ் பாவம் செய்கின்ற கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

6. இன்னும், மர்யமுடைய புதல்வர் ஈஸா, (பனீ இஸ்ராயீல்களை விளித்து) “இஸ்ராயீலுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களின் பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வுடைய ரஸூளாக இருக்கின்றேன் – எனக்கு முன்னுள்ள தவ்ராத் (வேதத்)தை உண்மைப்படுத்துகிறவனாகவும், எனக்குப் பின்னால் வரப்போகின்ற ரஸூலைப்பற்றி – அவருடைய பெயர் அஹ்மது – நற்செய்தி சொல்கிறவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறிய நேரத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர்களிடம் தெளிவான ஆதாரங்களை அவர் கொண்டு வந்தபோது, “இது தெளிவான சூனியமாகும்” என்று அவர்கள் கூறினார்கள்.

7. தான் இஸ்லாத்தின்பால் அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டும் ஒருவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அல்லாஹ் அநியாயக்காரர்களின் கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

8. அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களினால் (ஊத்தி) அனைத்து விடுவதற்கு அவர்கள் நாடுகின்றனர்: காபிர்கள் வெறுத்தாலும் சரி, அல்லாஹ் தன ஒளியை நிரப்பமாக்குகிறவனே ஆவான்.

9. அவன் எத்தகையோரென்றால், முஷ்ரிக்குகள் (இணை வைக்கிறவர்கள்) வெறுத்தாலும் சரி, மற்றெல்லா மார்க்கங்களைவிட இ(ம் மார்க்கத்)தை உயர்வாக்குவதற்காக நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் தன ரஸூலை அவன் அனுப்பி வைத்தான்.


ருகூஃ 2

10. முஃமின்களே! உங்களுக்கு ஒரு வாணிபத்தை அறிவிக்கட்டுமா? நோவினை தரும் வேதனையிலிருந்து அது உங்களை எடேற்றும்.

11. (அது,) அல்லாஹ்வின் மீதும், அவனுடைய ரஸூல் மீதும் நீங்கள் ஈமான் கொள்வதும்: அல்லாஹ்வுடைய பாதையில் உங்களுடைய பொருட்களைக் கொண்டும், உங்களுடைய உயிர்களைக் கொண்டும் நீங்கள் ஜிஹாது செய்வதுமாகும்: நீங்கள் அறிந்தவர்களாயிருந்தால் இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

12. (இவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களுடைய பாவங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான்: இன்னும் அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கச் சோலைகளிலும், “அத்னு” எனும் (நிலையான) சொர்க்கச் சோலைகளிலுள்ள மணமான குடியிருப்புகளிலும் உங்களை அவன் புகச் செய்வான் – அது மகத்தான வெற்றியாகும்.

13. இன்னும், மற்றொன்றும் உண்டு: அதனை நீங்கள் விரும்புவீர்கள்: (அது) அல்லாஹ்விடமிருந்துள்ள உதவியும், சமீபமான வெற்றியாகும் – (நபியே!) முஃமீன்களுக்கு (இதுபற்றி) நற்செய்தி கூறுவீராக!

14. முஃமின்களே! மர்யமின் புதல்வர் ஈஸா (தம்முடைய) சீடர்களை நோக்கி: “அல்லாஹ்வின் (பாதை) அளவில் எனக்கு உதவி செய்கிறவர்கள் யார்?” என்று கேட்க, அச்சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள்” என்று கூறியபோது, நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளர்களாகி விடுங்கள்: பிறகு பனூ இஸ்ராயீயிலிருந்து ஒரு கூட்டம் ஈமான் கொண்டது: மற்றொரு கூட்டம் (அவரை) நிராகரித்தது: எனவே ஈமான் கொண்டவர்களை அவர்களுடைய விரோதிகளுக்கு எதிராக நாம் பலப்படுத்தினோம் – ஆகவே, அவர்கள் வெற்றியடைந்தவர்களாய் விட்டனர்.