MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துந் நாஸ் – 114 (மனிதர்கள்)
(மதனீ) பிரிவு - 1, சொற்கள் – 20, வசனங்கள் – 6, எழுத்துகள் – 79
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் ரப்பிடம் நான் காவல் தேடுகிறேன் –
2. (அவன்) மனிதர்களின் அதிபதி –
3. (அவன்) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன்.
4. மறைந்திருக்கும்படியான (ஷைத்தானான)வனின் ஊசாட்டங்களின் தீங்கைவிட்டும் (நான் காவல் தேடுகிறேன்)
5. அவன் எத்தகையவனென்றால் மனிதர்களின் நெஞ்சங்களில் தவறான ஊசாட்டங்களை உண்டாக்குபவன் –
6. (இத்தகையோர்) ஜிங்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.