MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் மாஊன் – 107 (அற்பப் பொருட்கள்)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 25, வசனங்கள் – 7, எழுத்துகள் – 125
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. நியாயத் தீர்ப்பை (மறுமையை) பொய்யாக்குகின்ற ஒருவனை நீர் பார்த்தீரா?
2. அவன் தான் அனாதையை விரட்டுகிறவன் –
3. இன்னும் ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டமாட்டான்.
4. எனவே, (கவனமில்லாமல்) தொழுகிறவர்களுக்குக் கேடுதான் –
5. அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்களுடைய தொழுகையை விட்டும் பாராமுகமானவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
6. இன்னும் அவர்கள் எத்தையோரென்றால் பிறருக்குக் காண்பிக்(கத் தொழு)கிறார்கள்.
7. இன்னும் அற்பமான பொருட்களையும் (கொடுத்து வாங்க) அவர்கள் மறுப்பார்கள்.