Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் மாஊன் – 107  (அற்பப் பொருட்கள்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 25,  வசனங்கள் – 7,  எழுத்துகள் – 125



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. நியாயத் தீர்ப்பை (மறுமையை) பொய்யாக்குகின்ற ஒருவனை நீர் பார்த்தீரா?

2. அவன் தான் அனாதையை விரட்டுகிறவன் –

3. இன்னும் ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டமாட்டான்.

4. எனவே, (கவனமில்லாமல்) தொழுகிறவர்களுக்குக் கேடுதான் –

5. அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்களுடைய தொழுகையை விட்டும் பாராமுகமானவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

6. இன்னும் அவர்கள் எத்தையோரென்றால் பிறருக்குக் காண்பிக்(கத் தொழு)கிறார்கள்.

7. இன்னும் அற்பமான பொருட்களையும் (கொடுத்து வாங்க) அவர்கள் மறுப்பார்கள்.