Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் ஹுமஸா – 104  (புறம் கூறுதல்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 30,  வசனங்கள் – 9,  எழுத்துகள் – 130


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. புறங் கூறி குறை பேசுகின்ற ஒவ்வொருவருக்கும் கேடுதான் –

2. அவன் எத்தகையவனென்றால் பொருளைச் சேமித்து அதனை எண்ணி வைத்துக் கொண்டான் –

3. நிச்சயமாகத் தன்னுடைய பொருள் தன்னை (உலகில் என்றென்றும் வாழச்செய்து) நிரந்தரமாக்கி வைக்கும் என அவன் எண்ணிக்கொண்டான் –

4. அவ்வாறல்ல! திண்ணமாக ‘ஹுதமா’ வில் அவன் தூக்கி எறியப்படுவான் –

5. ‘ஹுதமா’ என்னவென்று (நபியே!) உமக்குத் தெரியுமா?

6. (அது) எரிக்கப்படுகின்ற அல்லாஹ்வின் நெருப்பாகும் –

7. அது எத்தகையதென்றால் இதயங்கள் மீது சென்றடையும்.

8. நிச்சயமாக அது அவர்கள் மீது (சூழ்ந்து) மூடப்பட்டதாயிருக்கும் –

9. நீட்டப்பட்ட (நெருப்புத்) தூண்களில் (அவர்கள் கட்டப்பட்டு இருப்பார்கள்).