MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் ஹுமஸா – 104 (புறம் கூறுதல்)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 30, வசனங்கள் – 9, எழுத்துகள் – 130
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. புறங் கூறி குறை பேசுகின்ற ஒவ்வொருவருக்கும் கேடுதான் –
2. அவன் எத்தகையவனென்றால் பொருளைச் சேமித்து அதனை எண்ணி வைத்துக் கொண்டான் –
3. நிச்சயமாகத் தன்னுடைய பொருள் தன்னை (உலகில் என்றென்றும் வாழச்செய்து) நிரந்தரமாக்கி வைக்கும் என அவன் எண்ணிக்கொண்டான் –
4. அவ்வாறல்ல! திண்ணமாக ‘ஹுதமா’ வில் அவன் தூக்கி எறியப்படுவான் –
5. ‘ஹுதமா’ என்னவென்று (நபியே!) உமக்குத் தெரியுமா?
6. (அது) எரிக்கப்படுகின்ற அல்லாஹ்வின் நெருப்பாகும் –
7. அது எத்தகையதென்றால் இதயங்கள் மீது சென்றடையும்.
8. நிச்சயமாக அது அவர்கள் மீது (சூழ்ந்து) மூடப்பட்டதாயிருக்கும் –
9. நீட்டப்பட்ட (நெருப்புத்) தூண்களில் (அவர்கள் கட்டப்பட்டு இருப்பார்கள்).