MAIL OF ISLAM
™
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் காரிஆ – 101 (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 36, வசனங்கள் – 11, எழுத்துகள் – 152
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. திடுக்கிடச்செய்யும் நிகழ்ச்சி –
2. திடுக்கிடச்செய்யும் என்ன?
3. திடுக்கிடச்செய்யும் நிகழ்ச்சியென்றால் என்னவென்று உமக்குத் தெரியுமா?
4. அந்நாளில் மனிதர்கள் பரத்தப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகிவிடுவார்கள் –
5. இன்னும் மலைகள் (கொட்டப்பட்ட) பல வண்ண (ஆட்டு) உரோமங்கள் போல் (காற்றில் பறக்கக்கூடியவை) ஆகிவிடும்.
6. எனவே எவரொருவருடைய எடைகள் (நன்மையைக்கொண்டு) கனமானதோ –
7. அவர் திருப்திகரமான வாழ்க்கையில் (திளைத்து) இருப்பார்.
8. எவரொருவருடைய எடைகள் இலேசானதோ –
9. அவருடைய தங்குமிடம் ‘ஹாவியா’ வாகும்.
10. (ஹாவியா என்னும்) அது என்னவென்று உமக்குத் தெரியுமா?
11. (அது) மிகக் கடுமையான சூடுள்ள (நரக) நெருப்பாகும்.