MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
மௌலானா ஷெய்க் யாஸீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி
எழுதியவர் - ஹிஸாம் ஹிஜாஸ்
குத்புல் பரீத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யத் யாஸீன் மௌலானா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்களின் முப்பத்து மூன்றாம் தலைமுறை வாரிசு! முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இருபதாவது வழித்தோன்றல் வாரிசு ஆவார்கள்!
உயர்ந்த இறைநேசர்கள் அடையும் ஆன்மீக அனுபவமான உரூஜ் அனுபவத்தை வாழ்வில் பெற்ற இறைநேசர்.
அவர்களின் தந்தை ஓர் அவ்லியா ! கெளதுஸ்ஸமான் ! அவர்களின் மகனாரோ ஒரு குதுபுஸ்ஸமான் !
மெய்ஞான மேதை அப்துல் கரீம் ஜீலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் நூலுக்கு விரிவுரை எழுதியபோது அவர்களின் ஆன்மாவே "ஹாலிராகி" (பிரசன்னமாகி) விளக்கம் கூறும் வாய்ப்புப் பெற்றவர்கள்.
மேலும்
♦ புஹாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதிய மேதை!
♦ அரபு - அரபுத்தமிழ் அகராதி உருவாக்கிய பண்டிதர் !
♦ அரபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது, மலையாளம், பார்ஸி எனப் பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற பன்மொழிப் புலவர்!
♦ அரபியரும் வியக்கும் வகையில் அரபுமொழிப் புலமை பெற்ற நாடறிந்த நாவலர்!
♦ ஆலிம்கள் போற்றும் அல்லாமா !
♦ படித்தோர் விரும்பும் பல்கலைக்கழகம் !
♦ முன்னாள் சிலோன் கவர்மண்ட் கல்வி இலாகா, அரபு பரீட்சை சபைத் தலைவர் (1951) !
♦ முன்னாள் அகில இலங்கை உலமா சபை தலைவர்.!
♦ "ஹக்கிய்யதுல் காதிரிய்யா "எனும் தரீக்காவின் நிருவனர்!
இத்தனை சிறப்புக்கும் சொந்தமான அந்த மாமேதைதான் "குத்புல் பரீத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யத் யாஸீன் மௌலானா நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு)" அவர்கள் ஆவார்கள்.
இவர்கள் இலங்கையில் தோன்றி தமிழகத்திலும் ,இலங்கையிலும் வாழ்ந்து , தஞ்சை மாவட்டம் சீர்காழிக்கு அருகேயுள்ள திருமுல்லை வாசல் எனும் ஊரில் அடக்கமாயுள்ளார்கள் .
இலங்கையின் முஸ்லிம் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத முனைவோர் மாமேதை ஜமாலிய செய்யித் யாஸீன் மௌலமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை பற்றி குறிப்பிடாமல் எழுதினால் அது இலங்கை அறிஞர்களின் முழு வரலாறாக நிறைவு பெறாது என்பதை அறிஞர் உலகம் நன்கு அறியும்.
துல் கஃதா பிறை 17 அன்னவர்களின் நினைவு தினமாகும்.