MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
மன்னர் அவுரங்கஸீப் ரஹ்மதுல்லாஹி அலைஹி
எழுதியவர் - பஸ்ஹான் நவாஸ் (இலங்கை வானொலி தமிழ் சேவை செய்தி ஆசிரியர்)
அவுரங்கஸீப் - தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்ட மாமனிதர். அவுரங்கஸீப் அவர்கள் இந்து, சீக்கி மக்களுக்கு வரலாற்றில் ஒரு கொடூரமான ஆட்சியாளராகக் காட்டப்பட்டுள்ளார். அவுரங்கஸீப் 1618ம் ஆண்டில் பிறந்தார்கள். ஆக்ராவை ஆண்ட மன்னர் ஷா-ஜஹானுக்கு மகனாகப் பிறந்த அவுரங்கஸீப் அவர்கள் தந்தையின் குணங்களில் இருந்தும் வித்தியாசமானவராக இருந்தார். சிறு வயதில் அல்-குர்ஆன்,ஹதீஸ் ஆகிய துறைகளை ஆழமாகக் கற்றார்.
அரபு, பாரசீகம், சகாதாய், துருக்கி ஆகிய மொழிகளில் அவருக்கு நிபுணத்துவம் இருந்தது. முகலாயப் பேரரசில் இஸ்லலாமிய ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற இலக்கு அவுரங்கஸீபின் மனதில் பதிந்திருந்தது. சட்டத்தின் ஆட்சி இஸ்லாமிய அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
அவுரங்கஸீப் ஆட்சி பீடம் ஏற முன்னரும் அவரது தந்தையின் பல நடவடிக்கைகளோடு அவருக்கு இணக்கப்பாடு இருக்கவில்லை. தாஜ்மஹால் கட்டப்பட்டதை தன்னால் ஏற்றுக்கொள் முடியாது என்று அவர் பகிரங்கமாக கூறினார்.
அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களின் ஐந்தாவது பிள்ளையாவர்.. இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய மட்டுமே 49 ஆண்டுகள் வரை நாட்டை ஆண்டார்கள்.
பேரரசர் அவ்ரங்கஸீப் அவாகள் இஸ்லாமிய சட்டத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் மகத்தானவை. இது பற்றி சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முஹம்மத் அல் ஷரீப் அவர்கள் கூறுகையில், இஸ்லாமிய சட்டத்துறை நிபுணர்களை ஒன்றிணைத்து “பத்வா-ஏ-ஆலம்கீரி”என்று நூலை வெளியிட்டாராகள். இது الفتاوى الهندية (பத்வா -ஏ- ஹிந்திய்யா) என்றும் அழைக்கப்படுகிறது. பத்வா - ஏ- ஹிந்திய்யா “அல்லது பத்வா-ஏ-ஆலம்கீரி” ஹனபி சட்டத்தை மத்ஹபின் சட்டத்தை அடிப்படையாக கொண்டதாகும். முகலாய சம்ராஜ்யம் விரிந்திருந்த சகல பிரதேசங்களுக்கும் இந்த நூல் அனுப்பப்பட்டது. இந்தியா, மக்கா-மதீனா, ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 300 சட்டதுறை அறிஞர்களின் பங்கேற்புடன் பத்வா ஆலம்கீரி எழுதப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தின் முஜத்தித் என்று வர்ணிக்கப்படும் ஷா வலியுல்லாஹ் அவர்களின் தந்தை ஷா அப்துல் ரஹீம் அவர்கள் இதனைத் தொகுத்தார்கள். இமாம் அபூஹனீபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் மாணவர்களான இமாம் முஹம்மத் ஷைபானி, இமாம் அபு யூசுப் ஆகியோர் வகுத்த ஹனபி சட்டத்தின் அடிப்படையில் மன்னர் ஸாஜஹானின் காலம் வரை குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் இந்த உசத்துணைகள் காணாமல் போனதை தொடர்ந்து அந்த குறைப்பாட்டை தீர்க்கும் வகையில் இந்த பத்வா ஏ ஆலம்கீர் என்ற நூல் எழுதப்பட்டது.
இந்துக்களுக்குச் சொந்தமான கோயில்களை இடிக்கப்பட்டாதாக முன் வைக்கப்படும் குற்றாச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. அவுரங்கஸீப் தான் ஒரு முஸ்லிமாக கூட தனது ஆட்சியில் இந்துக்களுக்கோ சீக்கியர்களுக்கோ எதுவித மாறுபாடும் காட்டவில்லை என்று அமெரிக்காவின் அரசிசோனா பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பேராசிரியர் ரிச்சட் ஈர்ட்டன் அவர்கள் கூறுகிறார். அவரது நிர்வாகப் பணிகளிலும், நீதிமன்றத்திலும் பிரதான பதவிகளை வகித்தவர்கள் இந்துக்கள் ஆவர். The Rise of Islam and the Bengal Frontier, Essays on Islam and Indian History, India's Islamic Traditions, 711-1750 போன்ற நூல்கள் இவற்றை தெளிவாக விளக்குகின்றன. முஹம்மது பின் காஸிமின் படை கி.பி 711ம் ஆண்டில் இந்தியாவை தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்தது.
ஹிந்து, சீக்கிய வழிபாட்டுத்தலங்கள் உடைக்கப்படடமைக்காக காரணம் "சில தலங்கள் வழிபாட்டுத்தலங்கலாக மாத்திரம் இருக்கவில்லை. ஹிந்து சீக்கிய மதத்தலங்கள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகவும் காணப்பட்டன, கோயில்களில் பணிபுரிந்த ஐயர்களுக்கு கட்டுப்பட்டே பெரும்பாலான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொண்டார்கள். இதனால் நிர்வாகப் பணிகளை முன்னெடுப்பதில் அவுரங்கஸீப் அவர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்தார். அரசாங்க நிர்வாகத்தை மீறி செயற்படும் கோயில்கள மாத்திரமே இடிக்கப்பட்டதாக Temple Desecration and Indo-Muslim States என்ற ஆய்வுகட்டுரையில் பேராசிரியர் Richard Eaton, அவர்கள் வலியுறுத்துகிறார். பெரும்பாலான அரச நிர்வாகங்களில் தாக்கம் செலுத்தாத சகல கோயில்களும் பாதுகாக்கப்பட்டன .
ஆறுக்கும், அதிகமான நாடுகளின் ஆட்சி மன்னர் அவுரங்கஸீபிடம் இருந்தது. அவரது வாழ்கை முறை வரலாற்று ஆய்வாளர்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஒரு கோடிக்குக்கும் அதிகமான மக்களுக்கு அவர் மன்னராக இருந்தார்.
முஹலாய பேரரசர்களுள் மிகுந்த செல்வம் ஈட்டியவர் அவுரங்கசீப் மன்னர் ஆவர். .அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது .இருந்தும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளார் .இதை விடவும் ஆச்சர்யம்,இன்று உள்நாட்டு உற்பத்தி கணக்கிடும் GDP எனப்படும் மொத்த தேசிய உற்பத்தி 30%ஆக இருந்துள்ளது. இன்று வரை உலகின் எந்த நாடும் இந்த சாதனையை முறியடிக்க இயலவில்லை.
ஆனால் அவுரங்கிஸிப் ஒரு நாளில் மூன்று மணித்தியாலங்கள் மாத்திரமே தூங்கினார். நாளாந்தம் ஒரு தடவை மாத்திரமே சாப்பிட்டார். அதிகமான நாட்கள் நோன்பு நோற்றார்கள். அவுரங்கசீபின் தலைப்பாகையில் ஒரே ஒரு கல் மட்டும் பதிக்கப்பட்டிருந்தது. அதிக அலங்காரங்கள் இருக்கவில்லை. பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளையே அணிந்தார். மன்னர் அவுரங்கஸீபின் உடையின் பெறுமதி வெறும் பத்து ரூபாவாகவே இருந்தது.. ஆலம்கீரின் சொந்த வாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே இறைவனின் அடிமையாக பாவித்துக்கொண்டார்.
அரசாங்கத்தின் பணத்தில் இருந்து ஒரு சதத்தையேனும் அவர் சொந்த செலவிற்கு பயன்படுத்தவில்லை. தனக்காக ஆடம்பர செலவில் மாளிகைகளை அமைக்கவும் இல்லை.
ஆட்சிக்காலத்தில் கட்டிலை அவர் பயன்படுத்தவில்லை அவுரங்கஸீப் தனது மரணம் வரை தரையிலேயே தூங்கினார் என்று மௌலானா செய்யித் அபுல் ஹசன் அலி நத்வி அவர்கள் தனது Saviours of Islamic Spirit என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அவுரங்கஸீப் அவர்களின் கடைசி நேரம் பற்றி இத்தாலிய எழுத்தாளரும், வரலாற்று ஆசிரியருமான niccolao manucci ஆக்கங்களை மேற்கோள் காட்டி செய்யித் அபுல் ஹசன் அலி நத்வி அவர்கள் விவரிக்கிறார்கள். மன்னர் அவுரங்கஸீப் நான்கு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் இரண்டு பணப்பைகள் காணப்பட்டன ஒரு பையில் 4 ரூபா ஐம்பது சதம் இருந்ததது. இந்த பணம் தொப்பி தைத்து மன்னர் சாம்பாதித்த காசாகும். மற்றுமொரு பையில் தான் அல்குர்ஆனை எழுதி சம்பாதித்த 805 ரூபா இருந்தது. அதை எழைகளுக்கு வழங்குமாறு தனது உறவினர்களிடம் கூறிவிட்டு 1707ம் ஆண்ட மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மன்னர் அவுரங்கசீப் தனது கண்களை மூடிக்கொண்டார் அன்று அவருக்கு 88 வயதாகும்.
அல்லாஹ் இவர்களை பொருந்திகொள்வானாக.