MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
திருமணமும் பொறுமையும்
நீ வறுமையில் கஷ்டப்படுகையில், உனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை உண்டாகிறது. ஆனால் உனக்கு அதற்கான வசதி இல்லை. எனவே, அந்த ஆசையை உன்னுள் உண்டாக்கிய சக்திக்கு உரியவனான அல்லாஹ்விடமிருந்து உதவியை எதிர்பார்த்தவனாக பொறுமையுடன் காத்திரு. அப்போது அதற்கான வாய்ப்பையும் வருவாயையும் நட்கொடையாக தந்து, போதுமான அளவுக்கு உனக்கு உணவு முதலியன கிடைக்க உதவி செய்து, இம்மையிலும், மறுமையிலும் அந்தப் பாரத்தை நீ எளிதாக சுமக்கும் படி செய்வதன் மூலம் அவனே உனக்கு உதவுவான். அதுவரை நீ கொண்டிருந்த பொறுமைக்காகவும், அவன் நல்லருளில் திருப்தி காட்டியதற்காகவும், அல்லாஹ், அவனை "பொறுமையாளன்" "நன்றி விசுவாசம் உடையவன்" என்று அழைப்பான். அதனால் அவன் உன் பரிசுத்தத்தையும், சக்தியையும் அதிகரிப்பான்.
கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
நூல் - புதூஹூல் கைப்