MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
சோதனையும் வறுமையும்
தொகுப்பு: மெயில் ஒப் இஸ்லாம்
நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான். (அல் குர்ஆன்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சமூகத்தில் ஒருவர் வந்து “யா ரசூலல்லாஹ்! நான் உங்களை மிகவும் நேசிக்கின்றேன்”என்று கூறினார்.
அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
“அப்படியாயின் பெரும் சோதனையையும், வறுமையையும் தாங்கிக்கொள்ள தயாராக இரு. என்னை நேசிப்பதாக கூறும் நீர், என் குணலட்சணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறாயின் எனது அன்பிற்குரியவர் ஆவீர்”.என்று கூறினார்கள்.
இவ்வாறேதான் அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய நேசம் இருந்தது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய நட்பைப் பெற்றதும் அவர்கள் அந்த அருமை நாயகத்திற்காக தனது பொருட்களையெல்லாம் வாரி வழங்கினார்கள்.
அவ்வாறு வழங்கி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போன்ற குணம் பெற்று அன்னவர்களைப்போன்று வறுமையில் பங்கெடுத்தார்கள். பெரும் சீமானாக வாழ்ந்த அவர்கள் கம்பளி ஆடை அணிந்துக்கொள்ளும் அளவுக்கு எளிமையை மகிழ்வுடன் ஏற்று ரஸுல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய நேசத்தையே உள்ளும், புறமும், அந்தரங்கத்திலும், பகிரங்கத்திலும் எடுத்து நடந்தார்கள்.
“பள்ளத்தை நோக்கி பாய்ந்தோடிச் செல்லும் தண்ணீரை விட அதிவேகமாக என்னை நேசிக்கும் மனிதனுக்கு வறுமை விரைந்தோடிச் செல்லக்கூடியது”. என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியிருப்பது இக்காரணத்திற்காகவே.
இவற்றைக்கொண்டு நாம் உணர்ந்து கொள்வது யாதெனில், ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நேசத்துக்கு நிபந்தனை வறுமை என்பதுவும், அல்லாஹ்வின் நேசத்துக்கு நிபந்தனை சோதனை என்பதுவுமே.
எல்லா விதமான சோதனைகளும் இறைநேசர்களுக்கே வந்து சேரும், காரணம் அவர்கள் அல்லாஹ்விடம் கொண்டுள்ள நேசத்தில் பொய், உள்ளொன்று புறமொன்றான சுபாவம், முகஸ்துதி, முதலியன இல்லாமல் உள்ளம் சுத்தமுள்ளவர்களாக இருக்கிறார்களா என்று பரீட்சிக்கப்படுவார்கள் என்று பெரியார்களில் ஒருவர் கூறியுள்ளார்கள்
கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பத்ஹூர் ரப்பானி
இறைவன் நம்மை சோதிப்பது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். விளக்கத்தை பெற இந்த கட்டுரையை வாசியுங்கள்.
மனிதன் அன்பை கொண்டு எப்படி சோதனை செய்யப்படுகிறான்? என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இன்பத்தையும் துன்பத்தையும் அல்லாஹ் நமக்கு ஏன் தருகிறான் என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இறைக்காதலர்களான இறைநேசர்கள் தனது காதலியான இறைவனை சற்று நேரம் மறந்தால், அவர்களுக்கு ஏற்படும் சோதனைகளை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.