MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கண்மணி நாயகத்தின் ﷺ மிஃராஜ் பயணத்தின் போது...


நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறுகிறார்கள்:‍‍


" நான்  பைத்துல் முகத்தஸை அடைந்து  அங்கு  இரண்டு  ரக்கத்துகளை  தொழுதபோது எனக்கு  தாகம்  மிகக்கடுமையாக  உண்டாயிற்று, எனக்கு  இரண்டு  பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன  ஒன்றில்  பாலும்  மற்றொன்றில்  மதுவும்  இருந்தன. பால்  இருந்த பாத்திரத்தை  எனது  ரப்பின்  நல்லுதவியால்  எடுத்தேன். அதனை  நான்  அருந்தினேன். ஆயினும், கொஞ்சம்  மீதி  வைத்து  விட்டேன். மதுவுள்ள  பாத்திரத்தை  நான் தொடவில்லை  அப்பொழுது  ஜிப்ரீல்  அலைஹி  ஸலாம்  "முஹம்மதே!  பித்ரத்  என்னும் சன்மார்க்கத்தை  எடுத்தீர்கள். மதுவை  அருந்தி  இருப்பீர்களாயின்  தங்களது  உம்மத்துக்கள் யாவரையும்  இழந்திருப்பீர்கள். பால்  முழுவதையும்  நீங்கள்  அருந்தி  இருப்பீர்களாயின் தங்களுக்குப்  பிறகு  தங்கள்  உம்மத்தில்  ஒருவரும்  வழி தவறி  இருக்கமாட்டார்கள்" என்றார்கள்.


அப்பொழுது  நான்  " ஜிப்ரீலே!  பாலை  திரும்பக்  கொடுப்பீராக, எஞ்சியுள்ளதையும்  நான் அருந்தி  விடுகின்றேன்"  என்றேன். அப்பொழுது  ஜிப்ரீல்  அலைஹிஸலாம் "அழிபவர்களைக்  காரணத்துடன்  அழிப்பதற்காகவும், ஜீவிப்பவரை  காரணத்துடன்  ஜீவிக்கச்  செய்வதற்காகவும்  நடக்க  வேண்டியதாக  இருந்த  காரியம்  நடைபெற்றுவிட்டது. அல்லாஹுதஆலா  மிக  அறிந்தவன்; மிகச்  செவியேற்பவன்"  என்றார்கள்.



தப்ஸீருல் ஹமீத் பீ தப்சீரில் குர்ஆனில் மஜீத்


நன்றி: ஸெய்யிதா ஸாலிஹா ரைஸுதீன்