MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நல்லுரைகள் (தண்டனை பற்றியது)
1. தன்னுடைய உடலை அலங்கரித்து பிறருக்குக் காட்டித் திரிந்தவளை நெருப்புக் கத்தரியைக் கொண்டு துண்டிக்கப்படும்.
2. புறம் பேசித் திரிந்தவன் தன்னுடைய சரீரத்தைக் கடித்து தின்றுக் கொண்டிருப்பான்.
3. மற்றப் பெண்களின் குறைகளை ஆராய்ந்து அவற்றைப் பகிரங்கப்படுத்தியவளின் முகம் கருத்து, தன்னுடைய குடலை உருவித்தின்று கொண்டிருப்பான்.
4. அந்நிய ஆடவருக்கு முன் தன்னுடைய கூந்தலைக் காட்டிய பெண்ணை அவளின் கூந்தலை இழுத்து தலை கீழாகக்கட்டி வேதனை செய்யப்படும்.
5. தொழுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் சக்தியும் வசதியுமிருந்தும் அதை நிறைவேற்றாதவனையும், புருஷனின் அனுமதியின்றி வெளியில் சென்றவளையும், இரு கால்களையும், இரு கைகளையும் முன் நெற்றி முடியினால் கட்டி விடப்பட்டிருக்கும். மேலும் பெரும் பெரும் பாம்புகளும் தேள்களும் நட்டுவாக்களிகளும் அவளைக் கொத்திக் கொண்டிருக்கும்.
6. பொய் உரைத்துக்கொண்டும், அந்நிய ஆடவர்களைப் பார்த்துக் கொண்டுமிருந்தவள் செவிடாகவும், குருடாகவும், ஊமையாகவும் இருப்பாள்.
7. கோள் மூட்டி, பொய் பேசித் திரிந்தவள் பன்றியின் தலையுடனும், கழுதையின் உடலுடனும் காட்சி அளிப்பான்.
8. தன் கணவனுடன் கோபமாக பேசுகிறவள் நாயின் உருவத்தில் இருப்பாள்.
இவ்வுலகில் சிறிது நேரம் வெளிச்சமில்லாமல் இருளாக இருந்தால் நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம். ஆனால் மறுமையின் இருளோ பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் இருக்கும். இவ்வுலகில் உள்ள சில நிமிடங்களின் இருளையே நம்மால் தாங்க முடியவில்லை என்றால், மறுமையிலுள்ள பல ஆண்டுகளின் இருளை எவ்வாறு தாங்க முடியும்? என்பதை உணர்ந்துக் கொண்டால் இவ்வாறு பொய், கோள், புறம் பேசித் திரிய மாட்டோம். நம்முடைய ஐவேளை தொழுகைகளையும், கடமைகளையும் நிறைவேற்றாமல் பொடு போக்காக இருக்க மாட்டோம். அந்நிய ஆண்களுக்கு முன்னாள் நடமாடுவதை நாம் விரும்ப மாட்டோம். நம்மில் சில ஆண்கள் தம்முடைய மனைவியை அலங்காரம் செய்து அந்நிய ஆண்களுக்கு முன்னாள் பகிரங்கமாக அழைத்துச் செல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய வெட்கக் கேடான விஷயம்? ஒரு பெண்ணை அலங்காரத்துடன் ஓர் அந்நிய ஆண் பார்த்தால் நிச்சயம் கேட்ட எண்ணம் உண்டாகக் காரணமாயிடும். அதற்கு காரணமாக இருந்தவர்களும் குற்றவாளிகள்தான்.
By: Kathija Nasik