MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மழ்ஹர்


‘மழ்ஹர்'  என்பதன்  கருத்து  அல்லாஹ்வுடைய  அஸ்மா  ஸிபத்து  வெளியாகும்  தலம் என்பதாகும். கதீமான  அஸ்மா  ஸிபத்துக்கள்  அல்லாஹ்வுக்கே  உரியது. இதில்  வேறு யாருக்கும்  கூட்டு  இல்லை. இது  ஒரு  நபி மூலம்  அல்லது  வலி மூலம்  வெளியானால், அப்பொழுது  இந்த  நபி  அல்லது  வலிக்கு  'மழ்ஹர்'  என்பர். அதாவது  உதயஸ்தானம்  என்பர் அல்லாஹ்வின்  செயல்  வெளியாவதற்கு  இவர்  'மழ்ஹராக'  உதயஸ்தானமாக  ஆகிறார்.


உவமைக்காக  சூரியன்  நான்காம்  வானத்தில் இருக்கிறது, முற்றத்தில் உள்ள  கண்ணாடியில் சூரியன்  பிரதி  பிம்பிக்கிறது, கண்ணாடியில் சூரியனது  பிரகாசம்  வீசுவதைப்  பார்த்த  ஒரு சிறுவன்  இது  'சூரியன்'  என்கிறான். ஆனால் இங்கே  சூரியன் கண்ணாடிக்குள்  வரவும்  இல்லை, கண்ணாடி  சூரியன்  ஆகவுமில்லை. ஆனால் கண்ணாடியில்  படும்  சூரியப் பிரகாசத்தைக்  கொண்டு  வீட்டினுள்ளே  வெளிச்சம் ஊட்டப்படுகிறது  இதனையும்  நாம் மறுக்க  முடியாது.


இதுபோலவே  எதார்த்தமான  அல்லாஹ்வின்  அஸ்மா  ஸிபத்துக்கள்  ஒரு  நபி  அல்லது வலியின்  மூலம்  வெளியாகி  உலகத்தாராகிய  மூமின்களுக்கு  பிரயோசனம்  அளித்து அவர்களைக் கரை  சேர்க்கிறது. உண்மையில்  நபி  அல்லது  ரஸூல்  மூலம்  கிடைத்த அல்லாஹ்வின்  அருள்  இதுவென்றே  முஸ்லிம்கள்  நம்ப  வேண்டும். பதிலாகச் சிருஷ்டியான  நபியை  அல்லது  வலியை  அல்லாஹ்வாக  ஆக்கலாமா?


இதனை  விட்டு  விட்டு  கண்ணாடியைச்  சூரியன்  என்ற  சிறுவனின்  கதையைப்  போல் முஷ்ரிக்குகளும்  மனிதர்களை  அல்லாஹ்  என்று  அழைக்கத்  தலைப்பட்டனர். நஊதுபில்லாஹி மின்ஹா'  எனவே,


'அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் எவர் கீழ்படிந்து நடக்கிறாரோ, அவர் அல்லாஹ் எவர் மீது அருள் சொரிந்தானோ அத்தகைய [உத்தமர்களான] நபிமார்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் ஆகியோருடன் இருப்பர். அவர்கள் தோழமைக்கு மிக நல்லவர்கள், அது அல்லாஹ்வின் அருளாகும். அல்லாஹ்வே இவற்றை அறிவதில் போதுமானவன்'   [அல் குர்ஆன்]


தஃப்ஸீர்  கபீர்  கூறும்  இத்திரு வசனத்தில்  இறைவனைப்  பற்றியும்  அவன்  தூதர் ﷺ பற்றியும் மெய்யான  ஞானம்  பெறுதலையே  கருத்தில்  கொள்ளப்பட்டிருக்கிறது.



விளக்கம் :- MARHOOM, ALHAJ, MOULAVI, QUARI  H.M.L.M. RAISUDEEN  (MISBAHI]


நன்றி:SEYYADA SALIHA RAISUDEEN