கலாநிதி ஷெய்க் வலீத் முஹம்மத் முஸ்ஆத்
கலாநிதி வலீத் முஹம்மத் முஸ்ஆத் 1972ம் ஆண்டு அமெரிக்காவில் நியூஜேர்ஸி நகரில் பிறந்தார்கள். ருட்கர் பல்கலைக்கழகத்தில் 1994ம் ஆண்டு இலத்திரனியல் பொறியியல் துறையில் B.Sc கற்கையைப் பூர்த்திசெய்தார்கள்.
பல்கலைக்கழக மாணவராக இருந்த போது ருட்கர் பல்கலைக்கழக இஸ்லாமிய மாணவர் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார்கள். தொலைத் தொடர்புகள் மற்றும் வலையமைப்பு பொறியியல் துறையில் பட்டதாரியாக 1997ம் ஆண்டில் வெளியேறிய வலீத் இஸ்லாமியக் கல்வியைப் பெறும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்தார்கள். எகிப்தின் தாருல் உலூம் சிரியாவின் மஹத் அல் பதாஹ் போன்ற கல்வி நிலையங்களிலும் அவர்கள் அரபு தொடர்பான கற்கை நெறிகளைப் மேற்கொண்டார்கள்.
கலாநிதி வலீத் முஸ்ஆத் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலும் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்துள்ளார்கள். முப்தி அலி ஜூம்ஆ, ஷெய்க் பக்ரி அல்தரபிஷி, உஸ்தாத் ஹுமைதுல்லாஹ் போன்ற உலமாக்களிடமும் கற்கும் வாய்ப்பு கிடைத்ததது. முப்தி கலாநிதி அலி ஜூம்ஆ அவர்கள் வலீத் முஸ்ஆதிற்கு இஜாஸா எனப்படும் கற்பிப்பதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார்கள்.
கலாநிதி வலீத் முஸ்ஆத் அபுதாபியை தளமாகக் கொண்டு இயங்கும் தாபா மன்றத்தில் பணியாற்றி வருகிறார்கள். நபிகள் நாயகத்தை صلى الله عليه وسلم கேலிச்சித்திரமாக வரைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கனடா சென்ற தூதுக்குழுவில் கலாநிதி வலீத் முஸ்ஆதும் அடங்கி இருந்தமை விஷேட அம்சமாகும்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்