அஸ்ஸையித் ஷெய்க் உஸாமா ஸையித்
அஸ்ஸையித் கலாநிதி உஸாமா 1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி அலக்ஸான்றியாவில் பிறந்தார்கள். இவர்கள் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராவார்கள். ஹதீஸ், இஸ்லாமிய கோட்பாடுகள், தர்க்கவியல் ஆகிய துறைகளில் இவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் உஸுல் அத்தீன் பீடத்தின் விரிவுரையாளராக பணியாற்றி வரும் கலாநிதி உஸாமா அவர்கள் மாணவர்களுக்கு மத்தியில் பெரும் மதிப்புள்ளவராக நோக்கப்படுகிறார்கள். வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரசங்கத்தை மேற்கொள்வதற்காக 2005ம் ஆண்டில் எகிப்தின் தலைமை முப்தி இமாம் அலி ஜூம்ஆ முஹம்மத் அவர்களால் சுல்தான் அல் ஹஸன் பள்ளிவாசலுக்கு கலாநிதி உஸாமா நியமிக்கப்பட்டார்கள்.
சமகால உலகின் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் பேராசிரியர் உஸாமாவிற்கு இஜாஸா எனப்படும் கற்பித்தலுக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்கள். அஸ்ஸையித் உஸாமா 2011ம் ஆண்டில் கலாநிதிப் பட்டத்தை உயர் சித்தியில் பெற்றுக்கொண்டார்கள். லிபியாவை தளமாகக் கொண்டு இயங்கும் Kalam Research & Media அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினராகவும் இவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் பல நூல்களை எழுதி உள்ளார்கள். அவற்றில் இஹ்யா அல் உலூம் அல் ஹதீஸ் குறிப்பிடத்தக்கதாகும்.
ஷெய்க் உஸாமா அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்