ஷெய்க் உஸாமா கெனன்
அமெரிக்காவின் கலிபோனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட உஸ்தாத் உஸாமா 1996ம் ஆண்டு 16 வயதில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அன்று தொடக்கம், அமெரிக்கா, யெமன், மொரோக்கோ, எகிப்து போன்ற நாடுகளில் உள்ள பல அறிஞர்களிடம் இவர் கற்றுள்ளார்கள். ஷெய்க் ஹபீப் உமர் பின் ஹாபீழ், ஷெய்க் ஹபீப் அலி ஜிப்ரி போன்ற தலைசிறந்த அறிஞர்களிடமும் இவர் கற்றுள்ளார்கள்.
அமெரிக்காவின் முதலாவது இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனமான ஸைதூனாவின் (Zaytuna Institute) அரபு மொழி விரிவுரையாளராகவும் கலிபோர்னியா நன்னடத்தை மற்றும் சீர்த்திருத்த திணைக்களத்தில் போதகராகப் பணியாற்றுகிறார்கள்.
உஸ்தாத் உஸமா Ta'leef Collective அமைப்பின் ஸ்தாபகத் தலைவராவார்கள். இஸ்லத்தை ஏற்றல், இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கான வழிகாட்டல், சமூக மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடாத்துதல், குறிப்பாக மௌலித் போன்ற நிகழ்சிகள் இங்கு தொடராக நடத்தப்படுகின்றமை சிறப்பம்சமகும். சிகாகோ நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் IMAN அமைப்பின் ஆன்மீக ஆலோசகராகவும் உள்ளார்கள்.
இவர்கள் அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் உரை நிகழ்த்துவதும், பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் என பல சேவைகளை செய்து வருகின்றனர்.
அமெரிக்கா முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கல், முன்னாள் குற்றவாளிகளுக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் என்பன இவர்களது விருப்பத்திற்குரிய பணிகளாகும். மேற்குலகில் உலக முக்கிய இஸ்லாமிய பேச்சாளர்களில் ஒருவராக இவர்கள் கருதப்படுகின்றனர்.
தற்போது உஸ்தாத் உஸாமா தனது மனைவி நான்கு பிள்ளைகளுடன் சென் பிரான்ஸிஸ்கோவில் வசித்து வருகிறார்கள்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் உஸ்தாத் உஸாமா அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்