ஷெய்க் கலாநிதி உமர் பாரூக் அப்துல்லாஹ்
கலாநிதி உமர் பாரூக் அப்துல்லாஹ் 1948ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார்கள். கலாநிதி உமர் பாரூக் தனது கலைமாணிப் பட்டத்தை அமெரிக்காவின் மிஸுரி பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்தார்கள். மல்கம் எக்ஸ் அவர்களின் வரலாறு இவர்கள் 1970ல் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் கலாநிதி பௌசுல் ரஹ்மானிடம் அரபு, இஸ்லாமியக் கற்கைளைப் பூர்த்தி செய்தார்கள்.
மாலிக்கி மத்ஹப் சட்டத்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள். 2000ம் ஆண்டு வரை சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் ஓப்பீட்டு மதத்துறை விரிவுரையாராகப் பணியாற்றியுள்ளார்கள். வெளிநாடுகளில் வசித்த காலப் பகுதியில் கலாநிதி உமர் பாரூக் பல அறிஞர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
தற்போது அமெரிக்கா, கனடா போன்ற பகுதிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கலாநிதி உமர் பாரூக் இலாப நோக்கமற்ற நவவி மன்றத்தின் ஸ்தாபகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்