ஷெய்க் அஹமத் தீஜானி உமர்
ஷெய்க் அஹமத் தீஜானி பின் உமர் அவர்கள் தீஜானியா தரீக்காவின் அறிஞர்களில் ஒருவராவார்கள். 1950ம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி ஆபிரிக்காவில் உள்ள கானா நாட்டில் பிறந்தார்கள்.
இஸ்லாமிய சட்டம், மத ஒப்பீட்டு ஆய்வு, வானசாஸ்திரம், கவிதை ஆகிய துறைகளில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அல்குர்ஆனையும் பைபிளையும் ஷெய்க் தீஜானி அவர்கள் மனனமிட்டுள்ளார்கள். மத ஒப்பீடு துறையில் முதுமாணி பட்டம் பெற்றுள்ள இவர்களுக்கு ஒலிபரப்பு ஊடகத்துறையிலும் சிறப்புத் தேர்ச்சி உண்டு.
தற்போது அமெரிக்காவில் வாழந்துவரும் ஷெய்க் அஹமத் தீஜானி பின் உமர் அவர்கள் அமெரிக்காவிலுள்ள சூபிச சர்வதேச சங்கத்தின் ஆலோசகராகவும், அமெரிக்க இஸ்லாமிய கற்கை மற்றும் ஆய்வுகளுக்கான சங்கத்தின் ஆலோசகராகவும் அமெரிக்காவிலுள்ள உலக இஸ்லாமிய மையத்தின் தலைவராகவும் உலக மார்க்கத்தலைவர்கள் கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளனர்.
105 நாடுகளுக்கு பிரயாணம் சென்றுள்ள இவர்கள் பல பல்கலைகழகங்கள், மகாநாடுகள், கருத்தரங்குகளில் சொற்பொழிவாற்றி உள்ளனர். அதே போல், தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல மகாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்தி உள்ளனர். மத ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தல் போன்ற பணிகளில் அயராது உழைத்து வரும் இவர்கள் கடும் போக்கு வஹாபிய கொள்கைக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருபவர்கள் ஆவார்கள்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் அஹ்மத் தீஜானி உமர் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்