கலாநிதி ஷெய்க் தௌபீக்
1949ஆம் ஆண்டு டமஸ்கஸ் நகரில் பிறந்த கலாநிதி தௌபீக் சட்டத்துறை, அரபு ஆகிய துறைகளில் இரட்டை கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள். லெபனான் பல்கலைக்கழத்தில் 1993ஆம் ஆண்டு முதுமாணிக் கற்கையைப் பூர்த்தி செய்த அவர்கள் டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள்.
இஸ்லாமிய சட்டத்துறையில் 1998ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்த அவர்கள் டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் முழுநேர விரிவுரையாளராக இணைந்து கொண்டார்கள். இஸ்லாமிய சட்டத்துறை தொடர்பான ஆழமான அறிவைக் கொண்டுள்ள அவர்கள் அதிகமான அரபு நூல்களை எழுதியுள்ளார்கள்.
பேராசிரியர் தௌபீக் கலாநிதி ஸஈத் ரமலான் பூத்தி அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்