கலாநிதி ஷெய்க் தாஹா அப்துல் ரஹ்மான்
கலாநிதி தாஹா அப்துல் ரஹ்மான் சமகால இஸ்லாமிய உலகின் சிறந்த சிந்தனையாளராவார்கள். உலகின் முன்னணி மெய்யியல் துறை அறிஞர்களில் முதல் நிலை வகிப்பவர்களின் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்கள். 1944ம் ஆண்டு மொரோக்கோவில் பிறந்த அவர்கள் ராபாத் நகரில் அமைந்துள்ள சுல்தான் ஐந்தாம் முஹமத் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார்கள். பின்னர் உயர்கல்விக்காக பிரான்ஸின் சோபோன் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட அவர்கள் 1985ம் ஆண்டு தர்கவியலும் அதன் வழி முறைகள் தொடர்பான கற்கையும் என்ற ஆய்வுக் கட்டுரையின் கீழ் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
பேராசிரியர் தாஹா அப்துல் ரஹ்மான் 1970ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு ஓய்வு பெறும் வரை சுல்தான் ஐந்தாம் முஹம்மத் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை பேராசிரியராக பணியாற்றினார்கள். பேராசிரியர் தாஹா அப்துல் ரஹ்மான் தர்க்கவியல் கற்கை தொடர்பான சர்வதேச சமூக அமைப்பின் அங்கத்தவராகவும் தற்சமயம் பணியாற்றி வருகிறார்கள்.
இசஸ்கோ (ISESCO) அமைப்பு இவருக்கு இஸ்லாமிய சிந்தனை மெய்யியல் துறைக்காக 2006ம் ஆண்டு இரண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தது. இவரது ஆய்வுகள் ஐரோப்பிய மற்றும் மேற்குலக பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்