ஷெய்க் சிராஜ் ஹென்றிக்ஸ்
ஷெய்க் சிராஜ் ஹென்றிக்ஸ் அவர்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற ஒரு இஸ்லாமிய அறிஞராவார்கள். 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆங்கில ஆசிரியராக தென்னாபிரிக்காவில் பணியாற்றினார்கள். பின்னர் மக்கா சென்று அங்கு பத்து வருடங்கள் உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டம் கற்று அதில் சிறப்பு பட்டதாரியானார்கள். அதற்கு முன்னர் இவர்கள் தமது மாமனாரும் தென் ஆப்ரிக்காவின் புகழ் பெற்ற அறிஞருமான ஷெய்க் சிராஜ் ஹென்றிக்ஸ் அவர்களிடம் கற்றுள்ளார்கள்.
ஷெய்க் சிராஜ் ஹென்றிக்ஸ் அவர்கள் 1980-1990 காலப்பகுதியில் தென் ஆபிரிக்காவில் நடைப்பெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்டங்களில் மிகவும் ஆர்வமாக கலந்துக்கொண்டுள்ளனர்.
பின்னர் கேப் டவுன் திரும்பிய அவர்கள் அங்கே தென் ஆப்ரிக்கா பல்கலைக்கழகத்தில் தசவ்வுப் துறையில் முதுமாணி பட்டம் பெற்றனர். தற்போது தமது கலாநிதி கற்கையை முடிக்கும் இறுதி தருணத்தில் இருக்கிறார்கள்.
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு மற்றும் இப்ன் அரபி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்களின் ஆக்கங்களால் ஷெய்க் சிராஜ் ஹென்றிக்ஸ் அவர்கள் மிகவும் கவரப்பட்டார்கள். இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறவா புகழ் பெற்ற இஹ்யாவு உலுமுத்தீன் நூலில் சில பகுதிகளை இவர்கள், ஷெய்க் அப்துல் ஹாகிம் முராத் மற்றும் ஷெய்க் யஹ்யா ரோத்ஸ் ஆகியோருடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தும் சுருக்கி தொகுத்தும் உள்ளனர்.
இவர்கள் முஸ்லிம் நீதிமன்றத்தின் பத்வா குழுவின் தலைவராக இருந்துள்ளனர். தென் ஆப்ரிக்க இஸ்லாமிய கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்துள்ளனர். தற்போது ஸ்டான்லிப் ஷரீஆ சபையின் உறுப்பினராகவும் Crescent Observer’s Society இன் தலைமை நடுவராகவும் உள்ளனர். மேலும் ஜோஹன்னஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கல்வி விரிவுரையாளராகவும் உள்ளனர். மேலும் இஸ்லாம் சம்பந்தமான கற்கைநெறிகளை அல் ஸாவியா கற்கை நிறுவகத்தில் கற்பித்து வருகின்றனர். அங்கே அவர்கள் கடந்த பதினேழு வருடங்களாக இமாமாக உள்ளனர்.
மக்காவில் அல்குரா பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தபோது பேராசிரியர் ஷெய்க் முஹம்மது அலவி அல் மாலிகி அவர்களிடம் எட்டு ஆண்டுகள் கல்வி கற்றார்கள். இஸ்லாமிய கல்விப் போதனைகளையும் பாஅலவி தரீக்காவையும் போதிப்பதற்கான அங்கீகாரத்தை ஷெய்க் முஹம்மது அலவி அல் மாலிகி வழங்கினார்கள். ஷெயிக் அஹமட் மசூர் அல் ஹத்தாத், ஷெய்க் அப்துல் காதிர் அல் சக்காப் போன்ற முன்னணி அறிஞர்களும் ஷெய்க் சிராஜ் ஹென்றிக் அவர்களுக்கு இஜாஸா வழங்கியுள்ளார்கள். ஸுபிஸம் இஸ்லாமிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பாகவும் இவர்கள் கூடுதலாக கவனம் செலுத்தி உள்ளார்கள்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் ஒருவராக ஷெய்க் சிராஜ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் சிராஜ் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்