ஷெய்க் ஸாலிக் பின் ஸிதினா
ஷெய்க் ஸாலிக் சமகால முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் வெகுவாக அறியப்படாத அறிஞர்களில் ஒருவர். வட மேற்கு ஆபிரிக்காவின் முரித்தானியவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கள் முராபித் அல்ஹாஜ் உள்ளிட்ட அறிஞர்களிடம் 17 வருடங்களுக்கு மேலாக இஸ்லாத்தைக் கற்றுக்கொண்டார்கள்.
அல் குர்ஆனை மனனமிட்டுள்ள ஸையித் ஷெய்க் ஸாலிக் அவர்கள் இஸ்லாமிய சட்டத்துறை, அரபு இலக்கணம், அகீதா, ஹதீஸ், ஸீரா ஆகிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். ஷெய்க் செய்யித் ஸாலிக் செய்யிதினா அலி இப்னு அபூதாலிப் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாரிசாவார்கள்.
ஷெய்க் ஸாலிக் அவர்கள் முரித்தானியாவில் பாடசாலையொன்றை நடத்தி வருகிறார்கள். குர்ஆன் இஸ்லாமிய சட்டம் போன்ற துறைகள் இங்கு கற்பிக்கப்பட்டு வருவதோடு வயது வேறுபாடின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூடுதலானோர் இங்கு கற்று வருகிறார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்