கலாநிதி ஷெய்க் முஹம்மத் ஸலாஹுத்தீன் மஸ்தவி
கலாநிதி முஹம்மத் ஸலாஹுத்தின் அல் மஸ்தவி 1952ஆம் ஆண்டு துனீசியாவில் பிறந்தார்கள். மாலிகி சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற கலாநிதி முஹம்மத் ஸலாஹுத்தீன் இஸ்லாமிய உயர் பேரவையின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றுகிறார்கள். துனீசியாவின் ஸைதூனா பல்லைக்கழத்தில் சட்டத்துறை பட்டதாரியாக இணைந்து கொண்ட அவர்கள் மாலிகி சட்டத்துறையில் ஆழமான ஆய்வுகளை நடத்தியுள்ளார்கள்.
இஸ்லாமிய அழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ள அவர்கள் உலக நாடுகளில் இடம்பெற்றுள்ள ஆய்வு மாநாடுகள் கருத்தரங்குகள் என்பனவற்றிலும் பங்கேற்றிருக்கிறார்கள். நவீன கால இஸ்லாமிய வளர்ச்சியின் போது ஏற்படும் சவால்கள் பற்றியும் அவரது ஆய்வுகளில் கவனம் செலுத்தி உள்ளார்கள்.
யுனெஸ்கோ அமைப்பின் நிபுணர்களின் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறுகிறது. இவரது ஆக்கங்கள் அரபு, பிரான்ஸ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளன. இஸ்லாமும் மேற்குலகமும் இஸ்லாமும் உலக மயக்கமாக்கலும் உள்ளிட்ட சமகால பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட ஆக்கங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்